என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை விமானநிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
    • மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை

    மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக பல வருடங்களாக சர்ச்சை இருந்து வருகிறது. பல்வேறு சமூகத்தினர் அவர்களது சமூகத் தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மதுரை விமான நிலை யத்திற்கு முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகர், முத்தரையர் என பெயர்கள் சூட்ட வேண்டும் என கோரிக்கை பல ஆண்டு களாக இருந்து வருகிறது.

    கடந்த வருடம் மதுரை விமான நிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்துராமலிங்க தேவர் விமான நிலையம் என காட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து செய்திகள் வெளியான பின்னர் மீண்டும் மதுரை விமான நிலையம் என திருத்தம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கூகுள் மேப்பில் மதுரை விமான நிலையம் இருக்கும் இடத்தின் பெயர் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காண்பிக்கிறது. அதே வேளையில் ஆங்கிலத்தில் madurai airport என காண்பிக்கிறது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர்.
    • வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    அறுபடைவீடுகளில் முதற்படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் 2-ந்தேதி விசாக விழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடந்தது.

    இதனையொட்டி கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் தயாராக இருந்த தங்க குதிரையில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து கோவிலில் இருந்து தங்க குதிரையில் அமர்ந்தபடி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு சன்னதி தெருவழியாக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மொட்டையரசு திடலுக்கு வந்தார்.

    மொட்டையரசு திடலை சுற்றி பக்தர்கள் சுமார் 100 மண்டகப்படிகள் அமைத்து சுவாமியை வரவேற்றனர். காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒவ்வொரு மண்டகப்படியாக முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 100 மண்டகப்படியிலும் முருகப்பெருமானுக்கு பல்வேறு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை, மகாதீப, தூப ஆராதனை நடந்தது.

    கோவிலில் இருந்து மொட்டையரசு திடலுக்கு தங்கக்குதிரையில் வந்த முருகப்பெருமான், வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பூப்பல்லக்கில் தன் இருப்பிடம் திரும்பினார். மொட்டையரசு திடலில் இருந்து கோவில் வரை வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

    • வேன் மோதி முதியவர் பலியானார்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கிருஷ்ணாபுரம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 62). இவர் தெற்குவெளிவீதி தவிட்டு சந்தை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து ராமதாசின் மகன் அரவிந்தகுமார், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார், வேன் டிரைவர் மேல சக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் அருண்குமார் (20) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்மாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.
    • வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    மதுரை

    ஆனையூர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(48). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது, ஆனையூர் கோசாகுளம் கண்மாயில் அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் வந்து இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    மதுரை

    அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி கணேசநகர் முதல்தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் கணேசமூர்த்தி(23). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களாக மன விரக்தியில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் தட்சிணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பி.பி.குளம் மருதுபாண்டியர் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (32). நிரந்தர வேலை இல்லாமல் கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளிமுத்துவின் தாய் பாண்டிச்செல்வி தல்லாகுளம் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • சோழவந்தானில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத்தலைவர் லதா கண்ணன், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், குத்தாலம், செந்தில், செல்வராணி, ஜெயராமச்சந்திரன், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கவுதம ராஜா, முத்து செல்வி சதீஷ், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, சுரேஷ், நகர் இளைஞர் அணி முட்டை காளி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன், சங்கங்கோட்டை ரவிசந்திரன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல் நடந்தது.
    • காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 55), விவசாயி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சத்தியமூர்த்தி (44). இவர் வளர்க்கும் நாய் தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டுக்கு வருபவர்களைப் பார்த்து குரைத்து விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் தினகரன் வீட்டின் அருகே நடந்துவந்த போது, அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் சத்தியமூர்த்தி தாக்கியுள்ளார். அதைப் பார்த்து தடுக்க வந்த தினகரன் மனைவி ஜெயசீலாவுக்கு அடி விழுந்தது. இதில் காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து தினகரன் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  

    • தேனூர் கிராமத்தில் கள்ளழகர் தோற்றத்தில் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
    • ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் (கள்ளழகர்) கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி இன்று காலை சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.

    அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சக்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பூஜைகள் நடந்து வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திரு விளக்கு பூஜை நடைபெறும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது. 2 நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்க ளுக்கு புத்தாடை வழங்கப் படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.

    இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடக்கிறது. சுவாமி கோவில் வந்து சேருவார். பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் பொருளாளர் கவுதமன் உள்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அலங்காநல்லூர் அருகே வைகாசி களரி விழா நடந்தது.
    • ஊர் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வலசை கம்மாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆல்பாடி கருப்புசாமி, ஆண்டிச்சாமி, வீரம்மாள், சோனைபட்டசாமி, சின்னகருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் வைகாசி மாத களரி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.

    இந்த விழாவானது கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கி சாமியாடி ஊர் சுற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை பட்டசாமி கோவில் புறப்படுதல், பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், கோவில் வீட்டில் சாமி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வானவேடிக்கை முழங்க மேளதாளங்களுடன் கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூலாத்திகுடுத்தான் 2வது வாரிசு கருப்பு கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பள்ளி-கல்லூரி அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கென பள்ளி மற்றும் கல்லூரி என 2 நிலைகளில் தனித்தனியே விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    குறிப்பாக பள்ளி விடுதி களில் 20 மாணவர் விடுதி, 8 மாணவிகள் விடுதிகளும், கல்லூரி விடுதிகளில் 4 மாணவர் விடுதி, 3 மாணவி கள் விடுதிகளும் உள்ளன.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ- மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள்.

    விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படு கின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படு கின்றன. பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந் தாது.

    தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங் களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிக ளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலு வலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப் பாளர்/காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவல கத்தில் வருகிற 15-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 15.7.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்ேகாவில் டவுன் வழியாக இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கனூர்-மாவேலிக்கரை, கருங்காப்பள்ளி-சாஸ்தன்கோட்டை, கடக்காவூர்-வர்கலா மற்றும் நாகர்கோவில் பராமரிப்பு பணிமனை ஆகிய இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி புனலூர்-–மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16730) வருகிற 21, 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்சன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும். அதாவது, இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16729) வருகிற 21, 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 4.35 மணிக்கு சென்றடையும்.

    மேலும் அங்கு இந்த ரெயில்களுக்கு மேற்கண்ட நாட்களுக்கு மட்டும் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமேசு வரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் வாரம் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22621) வருகிற 24-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் ஆரல்வாய் மொழி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் மற்றும் மேலூர் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மேலூர் நகரில் இயக்கப்படும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு விழிப்புணர் கூட்டம் நடந்தது.

    இதில் தனியார் கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்களின் வாகன போக்குவரத்து சட்டப்படியும், மனித கழிவுகளை மனிதன் அகற்றுதல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் படியும் உரிய ஆவணங்களுடன் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வாகனத்தை இயக்க வேண்டும். விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் போக்குவரத்து துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரால் பறிமுதல் செய்யப்படுவதுடன் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளை எந்திரம் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக்கூடாது எனவும் மீறினால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ×