நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல்

நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல் நடந்தது. காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல்
Published on

மேலூர்

மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 55), விவசாயி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சத்தியமூர்த்தி (44). இவர் வளர்க்கும் நாய் தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டுக்கு வருபவர்களைப் பார்த்து குரைத்து விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் தினகரன் வீட்டின் அருகே நடந்துவந்த போது, அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் சத்தியமூர்த்தி தாக்கியுள்ளார். அதைப் பார்த்து தடுக்க வந்த தினகரன் மனைவி ஜெயசீலாவுக்கு அடி விழுந்தது. இதில் காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து தினகரன் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com