search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்ேகாவில் டவுன் வழியாக இயக்கம்
    X

    மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்ேகாவில் டவுன் வழியாக இயக்கம்

    • மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்ேகாவில் டவுன் வழியாக இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கனூர்-மாவேலிக்கரை, கருங்காப்பள்ளி-சாஸ்தன்கோட்டை, கடக்காவூர்-வர்கலா மற்றும் நாகர்கோவில் பராமரிப்பு பணிமனை ஆகிய இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி புனலூர்-–மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16730) வருகிற 21, 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்சன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும். அதாவது, இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16729) வருகிற 21, 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு அதிகாலை 4.35 மணிக்கு சென்றடையும்.

    மேலும் அங்கு இந்த ரெயில்களுக்கு மேற்கண்ட நாட்களுக்கு மட்டும் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமேசு வரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் வாரம் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22621) வருகிற 24-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் ஆரல்வாய் மொழி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    Next Story
    ×