என் மலர்tooltip icon

    மதுரை

    • கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
    • முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் கஜேந்திரன், ராமகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயகாந்தன், பேரூர் அவை தலைவர் திரவியம், சுந்தரபாண்டி, மணி, கலைஞர் தாசன் முரளி, வினோத், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேரூர் துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • செல்லம்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
    • பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

    கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்த லின்படி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவபுரம், புள்ளநேரி, கண்ணனூர், கருமாத்தூர், கோவி லாங்குளம், செல்லம்பட்டி, முண்டு வேலம்பட்டி, வாலாந்தூர், குப்பணம் பட்டி, ஈச்சம்பட்டி, தும்மக் குண்டு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து ஒன்றிய செயலாளர் முத்து ராமன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் அவைத்தலைவர் அம்மாவாசி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் காசி, ராமேஸ்வரி, ராஜீ, மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பாண்டி, நீதி, பவுன்சாமி, ஒன்றிய பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
    • முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையை அடுத்த கோம்பை கரட்டில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரை யாக சென்று பால தண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் செய்தனர். 2-ம் நாளில் பட்டுப்பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பாட்டு வல்லப கணபதி கோவிலில் வழிபாடு நடந்தது. பின்னர் அம்பல காரர் திருக்கண்ணில் அபிஷேகம் நடந்து ஈ.கள்ளர் திருக்கண்ணில் இரவு தங்கினார்.

    3-ம் நாளான நேற்று அங்கிருந்து வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டை புதுார், போடி நாயக்கன் பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ெரயில் நிலையம், சொக்கையா சுவாமிகள் மடம் வழியாக வந்து விடியவிடிய பக்தர்க ளுக்கு காட்சிதந்தார்.

    மதியம் 12 மணிக்கு பல்லக்கு கோவிலை சென்றடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடு களை பேரூராட்சி நிர்வா கத்தினரும், பாது காப்பு ஏற்பாடுகளை வாடி ப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    • சடையாண்டி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பூசாரி தவமணி, கிராம சேர்வை வகையறாக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    விக்கிரமங்கலம் அருகே எட்டுமூலைபட்டி கிருஷ்ணாபுரத்தில் உள்ள சடையாண்டி, கன்னிமார் கோயிலில் கும்பாபிஷேக விழா பூசாரி பெரியகருப்பன் தலைமையில், சிவாச்சாரியார் ஹரிஹரசந்தோஷ் முன்னிலையில் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி 3 கால பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து மூலவர் நடு கல்லிற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். மூலவருக்கு 12 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூசாரி தவமணி, கிராம சேர்வை வகையறாக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • உலக மாதா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • உலக மாதா கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நாகப்பன்சிவல்பட்டி அதிகார கண்மாய் நடுவே உலகமாதா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மந்திரங்கள் முழங்க கோபுரத்தில் உள்ள கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

    சுற்றுவட்டாரத்தில் உள்ள பூதமங்கலம், ஒத்தப்பட்டி, நெல்லுக்குண்டு பட்டி, மூவன்செவல்பட்டி, கச்சிராயன்பட்டி, கொடுக்கம்பட்டி, மணியம்பட்டி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர்-வாலிபர் பரிதாப இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது76). இவர் நேற்று வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்று விட்டு பின்னர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    திருமங்கலம் அருகே உள்ள காட்டுபத்திர காளியம்மன் நான்கு வழிச்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சுப்புராமனை அங்கிருந்த வர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிக்சை பலனின்றி சுப்புராமன் பரிதாபமாக இறந்தார்.

    வாலிபர் பலி

    திருமங்கலம் அருகே உள்ள பல்லக்காபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிலம்பரன்(21). இவர் கடந்த 24-ந்தேதி மோட்டார் சைக்களில் வெளியே புறப்பட்டார். திருமங்கலம்-சோழ வந்தான் சாலையில் உள்ள பேக்கரி அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாய மடைந்த சிலம்பரசனை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமாகவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார். இந்த இரு விபத்துகள் குறித்தும் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    இந்திய அஞ்சல் துறையில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் மதுரை பி.பி.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல் துறை அலுவலகத்தில் வருகிற
    27-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த முகாமில் தங்கள் குறைகளை தெரிவிக்க புகார் மனுக்களை 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை ( மணி யார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற் றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்த மாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தியடையாத வர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும், இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது. கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    தபால்களை உதவி இயக்குநர், அஞ்சல்துறை அலுவலகம், தெற்கு மண்டபம், மதுரை-625 002 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். தபால் உறையின் முன்பக்க மேல்பகுதியில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்-ஜூன் 2023 என குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு மண்டல அஞ்சல் துறை உதவி இயக்குநர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

    • காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    மதுரை

    திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சி செக்கானூரணியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் 9-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

    பால்குடம், மஞ்சள்நீர் எடுத்தல், முளைப்பாரி, கரகம் எடுத்து பூஞ்சோலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • குறைந்த விலையில் செழிப்பு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் விவேகானந்தா கல்லூரியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி விலங்கியல் துறை மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    இதன் மூலம் மக்கும் கழிவுகளை நன்கு மக்க வைத்து அதனுடன் தினசரி கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கிய டீ தூள், காய்ந்த சாணம் ஆகியவற்றை அடுக்கடுக்காக கலந்து தொட்டிகளில் நிரப்பி வெல்லம் கரைசல் தெளித்து மண்புழுக்களை வளர்ப்பதற்கான மண்புழு உரத் தொட்டியில் நன்கு ஈரப்பதம் ஏற்படுத்தி தற்போது உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு தயாரிக்கப் படும் உரத்திற்கு செழிப்பு என அரசால் பெயரிடப்பட்டு மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக செழிப்பு உரம் விற்பனை செய்வதற்கான வேளாண்மை துறை உரிமம் சோழவந்தான் பேரூராட்சி பெற்றுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயி களுக்கும் மண்புழு உரம் கிலோ ரூ.5-க்கு மிக குறைந்த விலையில் பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த உரத்தின் தரம் குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பகுப்பாய்வு செய்து மிகச்சிறந்த உரம் என தர சான்றிதழும் பெறப்பட் டுள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அரசு தயாரிக்கும் இந்த உரத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் படுகாயமடைந்த பால முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலூர்:

    மதுரை பழங்காநத்தம் நேரு நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது28). இவரும் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மீனாட்சி(27) என்பவரும் 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    பாலமுருகன் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி மீனாட்சி தனது வீட்டின் அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்தார். மேலூர் அருகே உள்ள கீழவளவில் மீனாட்சியின் நண்பர் வீட்டு கிரகப் பிரவேசம் இன்று நடைபெறுகிறது.

    அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு பாலமுருகனும், அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் மதுரையில் இருந்து கீழவளவு நோக்கி சென்றனர். மேலூர் அருகே தெற்கு தெரு என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். அப்போது அவர்கள் மீது மோதிய வாகனத்தின் சக்கரம் மீனாட்சியின் தலைமீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். பாலமுருகன் படுகாயமடைந்தார்.

    அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த பால முருகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நடுரோட்டில் பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • வாலிபர்கள் பைக் ரேஸ் ஓட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

    மதுரை

    தல்லாகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் வாலிபர்கள் சிலர் நடு ரோட்டில் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தல்லாகுளம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதிகுந்தகண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு சில வாலிபர்கள் பைக் ரேஸ் ஓட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில், அவர்கள் கிருஷ்ணாபுரம்காலனி சரவணன் மகன் தரனேஷ்(20), வாடிப்பட்டி தாலுகா ஜெமினிப்பட்டி ரமேஷ் மகன்அபினேஷ்(18), வில்லாபுரம் பரமேஸ்வரி அம்மன் தெரு சுரேஷ்பாபு மகன் அச்சுதன்(18) உள்ளிட்ட 8 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • பேராசிரியர் வீட்டில் 35½ பவுன் நகைகள் திருட்டு நடந்தது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சின்னக்கடை வீதி எழுத்தாணி கார தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தேவக்கோட்டை கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று தற்போது மதுரையில் உள்ள ஒரு வேறு கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மீனாம்பிகை (வயது54).

    சம்பவத்தன்று இவர் வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து வேலைக்கார பெண் வந்தால் கொடுக்குமாறு கூறி சென்றார். வேலைக்கார பெண் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சாவியை திருப்பி கொடுத்துவிட்டு சென்றார்.

    அதன்பின்னர் மீனாம்பிகை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் மறுநாள் பீரோவில் பார்த்த போது 35½ பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் மீனாம்பிகை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×