search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா பூப்பல்லக்கு
    X

    வாடிப்பட்டி அருகே தர்மராஜன் கோட்டையை அடுத்த கோம்பை கரட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். (உள்படம்: வேல்-சேவல் கொடியுடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பாலதண்டாயுதபாணி) 

    பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா பூப்பல்லக்கு

    • பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
    • முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையை அடுத்த கோம்பை கரட்டில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரை யாக சென்று பால தண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் செய்தனர். 2-ம் நாளில் பட்டுப்பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பாட்டு வல்லப கணபதி கோவிலில் வழிபாடு நடந்தது. பின்னர் அம்பல காரர் திருக்கண்ணில் அபிஷேகம் நடந்து ஈ.கள்ளர் திருக்கண்ணில் இரவு தங்கினார்.

    3-ம் நாளான நேற்று அங்கிருந்து வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டை புதுார், போடி நாயக்கன் பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ெரயில் நிலையம், சொக்கையா சுவாமிகள் மடம் வழியாக வந்து விடியவிடிய பக்தர்க ளுக்கு காட்சிதந்தார்.

    மதியம் 12 மணிக்கு பல்லக்கு கோவிலை சென்றடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடு களை பேரூராட்சி நிர்வா கத்தினரும், பாது காப்பு ஏற்பாடுகளை வாடி ப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×