search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்த விலையில் செழிப்பு உரம் விற்பனை
    X

    உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

    குறைந்த விலையில் செழிப்பு உரம் விற்பனை

    • குறைந்த விலையில் செழிப்பு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் விவேகானந்தா கல்லூரியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி விலங்கியல் துறை மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    இதன் மூலம் மக்கும் கழிவுகளை நன்கு மக்க வைத்து அதனுடன் தினசரி கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கிய டீ தூள், காய்ந்த சாணம் ஆகியவற்றை அடுக்கடுக்காக கலந்து தொட்டிகளில் நிரப்பி வெல்லம் கரைசல் தெளித்து மண்புழுக்களை வளர்ப்பதற்கான மண்புழு உரத் தொட்டியில் நன்கு ஈரப்பதம் ஏற்படுத்தி தற்போது உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு தயாரிக்கப் படும் உரத்திற்கு செழிப்பு என அரசால் பெயரிடப்பட்டு மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக செழிப்பு உரம் விற்பனை செய்வதற்கான வேளாண்மை துறை உரிமம் சோழவந்தான் பேரூராட்சி பெற்றுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயி களுக்கும் மண்புழு உரம் கிலோ ரூ.5-க்கு மிக குறைந்த விலையில் பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த உரத்தின் தரம் குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பகுப்பாய்வு செய்து மிகச்சிறந்த உரம் என தர சான்றிதழும் பெறப்பட் டுள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அரசு தயாரிக்கும் இந்த உரத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×