வேன் மோதி முதியவர் பலி

வேன் மோதி முதியவர் பலியானார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் மோதி முதியவர் பலி
Published on

மதுரை

கிருஷ்ணாபுரம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 62). இவர் தெற்குவெளிவீதி தவிட்டு சந்தை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ராமதாசின் மகன் அரவிந்தகுமார், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார், வேன் டிரைவர் மேல சக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் அருண்குமார் (20) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com