என் மலர்
மதுரை
- ஓடும் ெரயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் பலியானார்.
- அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா?
மதுரை
சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை ெரயிலில் சென்னையை சேர்ந்த அருண்சுந்தர் என்பவரின் மனைவி மாலதி (48), தனது மாமனார் மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் கடையநல்லூர் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்
அப்போது மதுரை கூடல் நகர் ெரயில்வே ஜங்ஷன் முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஓடும் ரெயிலில் மாலதியிடமிருந்து செயினை பறித்துக் கொண்டு ெரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் அணிந்திருந்த நாலு பவுன் செயினில் ஒரு பாதியை தன் கையில் பிடித்ததினால் இரண்டு பவுன் மட்டும் பறிக்கப்பட்டது.
இது குறித்து மாலதி மதுரை ெரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அதே ெரயிலில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கீழே விழுந்து இரண்டு கால்களும் உடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஆட்டோ மீது லாரி மோதி ஒருவர் பலியானார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
உசிலம்பட்டி கீழப்புதூர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது52). இவரது மனைவி பத்மா. இவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர். டி.பி. மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பயணிகள் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து பாண்டியின் மனைவி பத்மா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் லாரி டிரைவர் செக்காணூரணியை சேர்ந்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
- 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மொழிஞாயிறு தேவநேயப் பாவணாரின் பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா மதுரை அண்ணாநகர் அருகே உள்ள அவரது மணிமண்ட பத்தில் நடை பெற்றது. உலக தமிழ் கழக தலைவர் நிலவழகன் தலை மை வகித் தார். பொது செயலாளர் இளந்திரையன் வரவேற் றார்.
நெறியாளர் கதிர் முத்தை யன் கொடியேற்றினார். இணத்தலைவர் தமிழ் வாணன், இணை பொதுச் செயலாளர் இளங்கோவன், துணைத் தலைவர் சக்கர பாணி, தலைமையக செய லாளர் கீரைத்தமிழன், கணக் காய்வாளர் இளஞ் சேட் சென்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்-இந்தோ ஐரோப் பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்ட இயக்குநர் பூங்குன்றன் பாவாணரியல் நூல்களை வெளியிட முதல் பிரதியை சிறப்பு நிலை பதிப்பாசிரியர் ஆல்துரை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன் பேரவை செந்திலை கவுதமன் சிறப்பு ரையாற்றினார்.
உலக தமிழர் கழக தலைமையக செயலாளர் மன்னர் மன்னன், மதுரை மாவட்ட அமைப்பாளர் சீவா பாவா ணர் (எ)சோழன்( பாவாணர் பேரன்) ஆகியோர் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்தனர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- மதுரை கரிமேடு அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
- நாளை அன்னதானம் நடக்கிறது.
மதுரை
மதுரை கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடந்தது.
மாலையில் ஆலய பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் உதவி பங்குத் தந்தை சின்னதுறை, டி.நோபிலி பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கல ராஜா, துணை முதல்வர் அருட்தந்தை ஆனந்த், மதுரை உயர்மறை மாவட்ட பணிக்குழுக்களின் செயலர் அருட்தந்தை சந்தியாகு ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
பின்னர் திருப்பலி முடிந்ததும் புனித அந்தோ ணியார் உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடந்தது. கரிமேடு மார்க்கெட், புதுச்சிறை வீதி, மேலப் பொன்னகரம் முக்கிய வீதி, ராஜேந்திரா மெயின் ரோடு, ஆரப்பா ளையம், ஞான ஒளிவுபுரம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
இன்று மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி நிறைவேற்றப்படும். அதன் பின்னர் கொடியிறக்கப் பட்டு திருவிழா நிறைவு பெறும். நாளை அன்னதானம் நடக்கிறது.
- எஸ்.ஜி.சூர்யா கைதை கண்டித்து மறியல் நடந்தது.
- பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 43 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
மதுரை
பா.ஜனதா மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மதுரை எம்.பி. வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குறித்தும் டுவிட்டரில் சில கருத்துக் களை கடந்த 7-ந்தேதி பதி விட்டிருந்தார். அந்த அவ தூறு கருத்துக்கள் தொடர் பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவ லகத்தில் உள்ள இணைய குற்ற தடுப்பு பிரிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் கொடுத்த னர்.
அதன்பேரில் எஸ்.ஜி. சூர்யா மீது சமூக அமை திக்கு குந்தகம் விளைவித்தல், வதந்தி பரப்புதல், இருபிரிவி னருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இணைய குற்ற தடுப்பு பிரிவு போலீ சார் வழக்கு பதிந்தனர். மேலும் அவர்கள் சென்னை சென்று எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதை அறிந்த பா.ஜனதா கட்சி யினர் நீதிபதி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை மறித்து மறிய லில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்பட 43 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது
- குறைகளை தெரிவித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை
மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்-அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள், தொழிலாளர் நல ஆய்வாளர் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மதுைர மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
- சோழவந்தான் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ., ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பி.ஆர்.சி. ராஜா சங்கங்கோட்டை சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை வெங்கடேசன் எம்.எல்.ஏ., ரெயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் இரவில் ஆய்வு செய்தனர். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி நிஷா கவுதமராஜா, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி, ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பி.ஆர்.சி. ராஜா சங்கங்கோட்டை சந்திரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
- வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.
மதுரை:
மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.
மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.
மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை
மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த திராவிட முன்னேற்ற கழகம், இன்று செந்தில் பாலாஜியின் காலில் அடமானம் வைத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குவதற்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் தரக்குறைவாக பேசுவதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
7 கோடி தமிழர்களுடைய எதிர்காலமாக உள்ள எடப்பாடி பழனிசாமியை வாய்க்கு வந்தபடி நீங்கள் பேசி இருப்பது ஒரு முதல்-அமைச்சருக்கு அழகா? நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. ஏனென்றால் எங்கள் மடியில் கனமில்லை. செந்தில் பாலாஜிக்கு இதய வலி என்றவுடன் முதல்-அமைச்சருக்கு இதயம் ஆடுகிறது.
எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் பேசுவது ஜன நாயகத்தின் அநாகரீகமாகும். இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். பலகட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, எங்கள் பொதுச் செயலாளர் மீது நரம்பு இல்லாத நாக்காக பேசிவருவதை நாங்கள் இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
ஒரு கோடியே 49 லட்சம் மக்கள் எடப்பாடியாருக்கு வாக்களித்து உள்ளார்கள். 2 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் எடப்பாடியார் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பார்.
எடப்பாடியார் மக்களுக்காக போராடும் உரிமை அவருக்கு உண்டு. மத்திய அரசு விசாரணை செய்தால் எங்களையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்? இனிமேல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் அதற்காக விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவில் கும்பாபிஷேக பிரச்சினையில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையில் மாமுண்டி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அந்தப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களின் முயற்சியின் பேரில் கோவில் திருப்பணிகள் நடந்தது. இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து காஞ்சரம்பேட்டை அனைத்து சமுதாயத்தினரும் மலையாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
இதையறிந்த போலீசார் மற்றும் வருவாய் அதிகாரி அந்த கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- கார் மோதி முதியவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்று விசாரித்து வருகின்றனர்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.கே.நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுதாகர் (51). இவர் மதுரைக்கு நான்கு வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். மதுரை ஐேகார்ட்டு பின்புறம் உள்ள பகுதியில் வந்தபோது, 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக கார் அவர் மீது மோதியது. இதனால் அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து ஒத்தக்கடை கிராம நிர்வாக அதிகாரி ரேவதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்று விசாரித்து வருகின்றனர்.
- கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
மதுரை
வைகை வடகரை எம்.ஜி.ஆர்.பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறு வதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்கா ணித்தனர்.அப்போது 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டி ருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரம் பாண்டி மகன் சுபாஷ் என்ற படையப்பா (வயது23), மதுரை பாக்கியநாதபுரம் ஜோசப் மகன் தினேஷ்குமார் (20) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பால நாகம்மாள் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.
விசாரணையில் அவர் தேனி மாவட்டம் வருசநாடு சிங்கராஜாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகர் (28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து காசிமாயன் மகன் முருகன்(23) என்பவர் கஞ்சா விற்று கொண்டி ருந்தார். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.






