என் மலர்tooltip icon

    மதுரை

    • சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மதுரை

    மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (வயது20). இவர் நேற்று நண்பர் ராதாகிருஷ் ணனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறபட்டார். ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ரோகன் மீது டயர் ஏறி இறங்கியது.

    இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராதா கிருஷ்ணனை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் கொடூர விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த பகுதியில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. எனவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து இன்று காலை போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த சாைலயின் நடுவே தடுப்புகள் அமைத்த னர்.

    மேலும் குறிப்பிட்ட பகுதி களில் வாகனங்கள் மெது வாக செல்வதற்கும் நட வடிக்கை எடுத்தனர். விபத்து சிக்கி வாலிபர் இறந்த பிறகு போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. மதுரை திருப்பரங்குன்றம் சாலை யில் தமிழ்நாடு பாலி டெக்னிக் கல்லூரி, மதுரா கல்லூரி மற்றும் முக்கிய நிறுவனங்கள், கோவில்கள் உள்ளன. இதனால் அந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படா ததால் பொதுமக்கள் ஒரு வித பதட்டத்துடனே கடக்க வேண்டியுள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்புறம் உள்ள சாலை, ஆண்டாள் புரம் பகுதி, பழங்காநத்தம் சந்திப்பு போன்ற பகுதிகளில் அதிவேகமாக வரும் வாக னங்களுக்கு இடையில் பொதுமக்கள் உயிரை பண யம் வைத்து சாலையை கடக்க வேண்டியுள்ளது.

    எனவே மேற்கண்ட பகுதிகளில் விபத்துகள் நடக்காமல் இருக்க போலீ சார் வேகத்தடை மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பசுமலையில் உள்ள ஒரு பள்ளி முன்பும் தடுப்புகள் அமைத்து வாகன வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

    • மீன் சிலை வைப்பது குறித்து ரெயில் நிலைய வளாகத்தில் கலெக்டர்-கமிஷனர் திடீர் ஆய்வு நடத்தினர்.
    • மாணவர்களுக்கு தரப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    மதுரை

    தமிழகத்தில் பண்டைய காலத்தில் மதுரையை தலைநகரமாக கொண்டு பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் மீன் கொடி பொறித்த சின்னத்தை பயன்படுத்தி வந்தனர். இதனை நினைவுப்படுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை ரெயில் நிலையத்தில் மீன்களுடன் கூடிய அலங்கார நீரூற்று அமைக்கப்பட்டிருந்தது.

    நிர்வாக காரணங்க ளுக்காக அந்த நிரூற்று அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் மீன்களுடன் கூடிய நிரூற்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மதுரை ரெயில் நிலைய வளாக முகப்பு பகுதியில் மீன்களுடன் கூடிய அலங்கார நிரூற்று அமைப்பது தொடர்பாக கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    கமிஷனர் ஆய்வு

    அதன்பின் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட திரவுபதி அம்மன் மாநகராட்சி ஆரம்ப பள்ளியின் முதல்-அமைச்ச ரின் காலை உணவு திட்டத்தை கமிஷனர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். அப்ேபாது மாணவர்களுக்கு தரப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    • மேலூர் அருகே கக்கன் சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் முகமது ஷெரிப், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் கக்கனின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் வழிகாட்டுதலின்படி கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் அட்டப்பட்டி பாலமுருகன், மேலூர் நகர் செயலாளர் தங்கசாமி ஆகியோர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேலூர் தொகுதி இணைச் செயலாளர் சின்னக்கருப்பன் நிர்வாகிகள் முகமது ஷெரிப், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஐகோர்ட்டு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டு அருகில் 4 வழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பரிதாபமாக இறந்தார். விபத்தில் அவரது தலை சிதைந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 45 வயது மதிக்கத் தக்க ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சமையன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். அதில் அந்த வாலிபர் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இது குறித்து திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ேதாழியிடம் ரூ.7 லட்சம் ேமாசடி நடந்துள்ளது.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39), அண்ணாநகரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி வாணி. காளீஸ்வரியும், வாணியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

    கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு வாணிக்கு அரசு ேவலை கிடைத்துள்ளதாக காளீஸ்வரியிடம் கூறியுள்ளார். உனக்கும் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார். இந்த வார்த்தையை நம்பிய காளீஸ்வரி, தனது தோழியான வாணி மற்றும் அவரது கணவர் கண்ண னிடம் ரூ.7 லட்சம் பணத்தை வங்கி மூலம் மாற்றி உள்ளார்.

    ஆனால் இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை, மேலும் பணத்தையும் திருப்பி தரவும் மறுத்துவிட்டார்கள். ஆகவே இதுகுறித்து காளீஸ்வரி திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பே ரில் விசாரணை நடத்திய போலீசார் வாணி மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்்நதவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்்ந்த சேதுராமன் மனைவி பாண்டிசெல்விக்கு ஒரு சென்ட் ரூ.60 ஆயிரத்திற்கு கிரையம் பேசி மொத்தம் 6 சென்ட் விற்பதற்காக பேசி ரூ.1 லட்சத்தை முன் பணமாக பெற்றுக்கொண்டனர். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் அந்த இடத்தை பாண்டிசெல்விக்கு கிரையம் செய்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து பாண்டிசெல்வி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே ரெயில் நிலைய மேம்பாடு கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.
    • ரெயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கருத்து கேட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., ெரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர், துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களிடம் கருத்து கேட்டனர். இதில் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிற்சங்கம் பாலு, சங்கங்கோட்டை சந்திரன், சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே தி.மு.க. இளைஞரணி சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது.
    • ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே ரிஷபம் ஊராட்சி ராயபுரம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தி.மு.க. ஆட்சியின் 2 சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரிஷபம் சிறுமணி, திருவேடகம் பழனியம்மாள், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றதுணைத்தலைவர் கேபிள்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பால் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் அலெக்சாண்டர், நிர்வாகிகள் பெரியகருப்பன், சந்தானலட்சுமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் வனிதா ரங்கநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன் ஆகியோர் பேசினர். ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகாவீரபாண்டி, கார்த்திகாஞானசேகரன், தென்கரை சோலைராஜன், மேலக்கால் பன்னீர்செல்வம், ராஜா, ஒன்றிய இளைஞரணி ரிஷபம், ராயபுரம், திருமால்நத்தம் ஆகிய கிளைக்கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் 

    • மேலூர் அருகே கக்கன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் கக்கன் மணிமண்டபத்தில் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்று அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், கொட்டாம்பட்டி முன்னாள் ஒன்றிய தலைவர் வெற்றிச் செழியன், மேலூர் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் பொன் ராஜேந்திரன்.

    மாவட்ட பொருளாளர் அம்பலம், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் நகர் துணைச்செயலாளர் சரவணகுமார், மேலூர் நகர் அம்மா பேரவை செயலாளர் சாகுல் ஹமீது, பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்னகருப்பன், தலைமை பேச்சாளர் மலைச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் அட்டப்பட்டி முத்தலிபு.

    தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், துணை தலைவர் புனிதா மகாதேவன், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிடாரிப்பட்டி சுரேஷ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சோமப்பா சுவாமியின் 55-வது குருபூஜை விழா
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை (புசுண்டர் மலை) சூட்டுக்கோல் ராம லிங்க விலாசம் சோமப்பா சுவாமிகள் 55-ம் ஆண்டு குருபூஜை இன்று நூற்றுக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற் றது.

    திருக்கூடல் மலையில் தனி சன்னதியில் சோமப்பர் அருள் பாலித்து வருகிறார். இங்கு வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறு வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் அவரது குருபூஜை விழா கொண்டா டப்படும் அதன் அடிப்படை யில் அவரது 55-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு நேற்று மாலை திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று அதிகாலை குருபூஜையை முன்னிட்டு சோமப்பா சுவா மிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு சாற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் அங் குள்ள சிவபெருமானுக்கு சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சோமப்ப சுவாமியை தரிச னம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. குருபூஜை விழாவில் மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆரப்பாளையம், அரசரடி, கோவில் பகுதியில் மின் வினியோகம் நாளை நிறுத்தப்படுகிறது.
    • இந்த தகவலை மின் செய்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம், கோவில், அரசரடி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மூலம் மின்சாரம் பெறும் பகுதியில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    அதன்படி ஆரப்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார் ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1, 2-வது தெரு, பாரதியார் ரோடு முழுவதும், பொன்னகரம் பிராட்வே ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.கோவில் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட வடக்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணி மூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்ச்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி ஒரு பகுதி, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூல வீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சி கோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தை பொட்டல், சோமசுந்தர அக்ரஹாரம், மேல சித்திரை வீதி, நேதாஜி மெயின் ரோடு ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு சித்திரை வீதி, தெற்கு காவல் கூட தெரு, மேல கோபுரம் வீதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    அரசரடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புது ஜெயில் ரோடு, ஜெயில் காலனி, முரட்டான் பத்திரி, கிரம்மர்புரம், கரிமேடு ஏரியா, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, இளந்தோப்பு 1, 2, 3-வது தெருக்கள், ராஜேந்திரா 1, 2, 3-வது தெருக்கள், மில்கேட் பகுதிகள், பொன்னகரம் ஒரு பகுதி, மணிஐயர் சந்து, ஸ்காட் ரோடு, எல்.ஐ.சி., குட்செட் தெரு, மேல மாரட் வீதி, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி மற்றும் சம்பந்த மூர்த்தி தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை மின் செய்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்தனர்.
    • அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் பெண் ஒருவரை காதலித்தார். அவருக்கு திருமண ஆசை காட்டி கொடைக்கானல் அறையில் தங்கியும் மற்றும் பழங்காநத்தம் பகுதியிலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், அவரது தாயார் மல்லிகா (55), மைத்துனர் சிவகுமார் (35) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    சிந்தாமணி வ.உ.சி. 2-வது தெரு சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்ேபாது அருண்குமாருடன் சேர்ந்து அவருடைய நண்பர் அழகுமுத்துபாண்டி(21) என்பவரும் ஆபாசமாக பேசி சுரேசை தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதுகுறித்து கீரைத்துரை போலீசில் சுரேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், அழகு முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நள்ளிரவில் கமிஷனர் ஆய்வு செய்தார்.
    • இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    மதுரை

    மதுரையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி மதுரையின் முக்கிய சாலை பகுதியாக இருக்கும் பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம் சாலை பகுதிகளில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்தப் பணியால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்தன. அதனை போக்கும் விதமாக மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், ஆகியோர் மதுரையில் நடைபெறும் இந்த பைப் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், வேலை ஆட்கள் சுழற்சி முறையில் இரவு நேரங்களிலும் பணி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி நேற்று காலையில் பல்வேறு பகுதிகளில் மேயரும் மாநகராட்சி ஆணை யாளரும் நகர் நல பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 12 மணி அளவில் மாநகராட்சி ஆணையாளர் டி.வி.எஸ். நகர் மற்றும் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் குழாய் பதிக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

    ×