ஓடும் ெரயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் பலி

ஓடும் ெரயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் பலியானார். அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா?
ஓடும் ெரயிலில் இருந்து குதித்த வடமாநில வாலிபர் பலி
Published on

மதுரை

சென்னையிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் பொதிகை ெரயிலில் சென்னையை சேர்ந்த அருண்சுந்தர் என்பவரின் மனைவி மாலதி (48), தனது மாமனார் மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் கடையநல்லூர் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்

அப்போது மதுரை கூடல் நகர் ெரயில்வே ஜங்ஷன் முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஓடும் ரெயிலில் மாலதியிடமிருந்து செயினை பறித்துக் கொண்டு ெரயிலில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் அணிந்திருந்த நாலு பவுன் செயினில் ஒரு பாதியை தன் கையில் பிடித்ததினால் இரண்டு பவுன் மட்டும் பறிக்கப்பட்டது.

இது குறித்து மாலதி மதுரை ெரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அதே ெரயிலில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கீழே விழுந்து இரண்டு கால்களும் உடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த வாலிபர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com