என் மலர்tooltip icon

    மதுரை

    • போலி ஆவணம் தயாரித்து பணி நியமன உத்தரவு வழங்கிய மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டார்.
    • 30-க்கும் மேற்பட்ட–வர்கள் சுமார் ரூ.1 கோடி ரூபாய் கொடுத்து வேலை வரும் என்று நம்பி காத்து இருந்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந் திரன். இவர் பெருங்குடி அருகே உள்ள டோல்கேட் டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வளையங்குளத்தை சேர்ந்த சதீஸ்வரன் என்பவரும் அதே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் ஜெயச்சந்திரனுடன் நட்பாக பழகினார்.

    மேலும் அவரிடம் நான் இங்கு பகுதி நேரமாகத்தான் வேலை பார்க்கிறேன். மதுரை ஐகோர்ட்டு அலுவ–லகத்தில் உதவியாளராகவும் உள்ளேன். எனவே எனக்கு அங்குள்ள நீதிபதிகள், பதிவாளர் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தெரியும் என கூறியுள்ளார். அத்துடன் ஐகோர்ட்டில் உதவியாளர் பணிகள் காலியாக உள்ளன. 3 லட்ச ரூபாய் கொடுத்தால் உடனடியாக அங்கு வேலை கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார். அதை நம்பிய ஜெயச் சந்திரன் நகையை அடகு வைத்து ரூ.3 லட்சத்தை அவரிடம் கொடுத்ததாக ெதரிகிறது.

    பணத்தைப் பெற்றுக் கொண்ட சதீஸ்வரன், நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்துகளை போட்டு வேலைக்கான போலியான ஆணையையும் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உறவினர்கள், தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள். அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பி 30-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.1 கோடி ரூபாய் கொடுத்து வேலை வரும் என்று நம்பி காத்து இருந்தனர்.

    அப்போது அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர் வேலைக்கான உத்தரவுகளையும், அடையாள அட்டை உள்ளிட்டவைகளையும் வழங்கி உள்ளார். மேலும் நான் சொல்லும் போதுதான் அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்கு சென்று வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ஜெயச்சந்திரனும் சதீஸ் வரன் கூறியது போல் வேலைக்கான உத்தரவு நகலை பெற்றுக்கொண்டு மதுரை ஐகோர்ட்டில் அவர் தெரிவித்த நபரை போய் பார்த்தார். அவரும் ஒரு மாத காலம் பயிற்சி உள்ளது. அதன்பின் நீதிபதிக்கு உதவியாளாராக சேர்ந்து கொள் ளலாம் எனக்கூறி 10 நாள் கழித்து வாருங்கள் என கூறி அனுப்பி இருக்கிறார்.

    மீண்டும் 10 நாட்கள் கழித்து ஐகோர்ட்டுக்கு சென்று வேலைக்கான பணி நியமன ஆணையை காண் பித்த போது, அது போலி என தெரியவந்தது. இதையடுத்து ஜெயச்சந்திரன், மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு போலி பணி ஆணை தயாரித்தது தெரியவந்தது.

    அதைதொடர்ந்து சதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கே.கே.நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராமலிங் கம் ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை ஐகோர்ட்டு உள்பட பல்வேறு கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை மோசடி நடந் திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. மீனவரணி அமைப்பாளா்கள் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் வாழ்த்து பெற்றனர்.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வில் புதிய மீனவர் அணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பரிந்துரைபடி மீனவ ரணிக்கு அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்களை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

    அதன்படி தெற்குமாவட்ட மீனவரணி அமைப்பாளராக ஆலங்குளம் செல்வம் நிய மிக்கப்பட்டுள்ளார். தலை வராக லெனின் பால சுப்பிரமணியன், துணைத் தலைவராக ராஜா, துணை அமைப்பாளர்களாக கனக வேல், முருகன், முத்துக் குமார், செல்லமுத்து, முத்து ராஜா (எ) பப்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மீனவர் அணி அமைப்பா ளர்கள் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

    • மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியது போல் எனது வார்டு பகுதிக்கும் செயல்படுத்துவேன் என்று கவுன்சிலர் நாகஜோதி சித்தன் கூறினார்.
    • மாநகராட்சி செய்ய தவறினால் போராட்டம் மூலம் மக்களுக்கு பெற்று தருவேன்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 20-வது வார்டில் நிறைவேற் றப்பட்ட திட்டங்கள் குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் நாக–ஜோதி சித்தன் கூறியதா–வது:-

    மதுரை மாநகராட்சியின் 20-வது வார்டு கவுன்சில–ராக மட்டுமின்றி, கல்விக் குழு உறுப்பினராகவும் இருக்கிறேன். இந்த வார்டில் 4,200 குடும்பங்களும், 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கின் றனர். இந்த வார்டில், மொத் தம் 110 தெருக்கள் உள்ளன.

    பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வசிக்கும் வார்டாக இது உள்ளது. சாலை ஆக்கிரமிப்பு இருப்ப–தால் தொழில் சார்ந்த மக்கள் மற்றும் தொழிற்சா–லைகள் முழுவதுமாக எங்க–ளது வார்டுக்கு வருவ–தில்லை. மதுரையின் முதன்மை வார்டாக ஆக்கு–வதே எனது லட்சியம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறேன்.

    பாலமுருகன் நகர் 1-வது, 2-வது தெருவில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 2 தரைப்பாலம், எனது சொந்த செலவில் கட்டி மக்களுக்கு கொடுத்துள் ளேன். எனது வார்டு மக்கள் அவசர தேவைக்கு அடிப் படை பிரச்சினைகளை சரி செய்ய ரூ.2 லட்சம் வைப் புத்தொகை வழங்கி உள் ளேன். தேர்தலின் போது வழங்கிய 30 வாக்குறுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

    ராமமூர்த்தி நகரில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள் ளது. மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் செல்லூர் ராஜூ, நிதியிலிருந்து சொக் கநாதபுரம் தெருவில் கலை–யரங்கம், ராமமூர்த்தி நகர் நியாய விலைக் கடை தற்போது கட்டுவதற்கு பணி–கள் நடந்து வருகிறது.

    மக்கள் அனைவரும் பயன்பெற, அனைத்து அரசு அதிகாரிகள் தொலை–பேசி எண்களும் மக்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். எளிதில் மக் களை தொடர்பு கொள்ள எனது நம்பரை அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட் டுள்ளது. இன்னும் சி.சி.டி.வி. கேமரா, மினரல் வாட்டர், புறக்காவல் நிலை–யம், தார் சாலை, உடற்பயிற்சி கூடம், அம்மா உணவகம் போன்று மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் வகையில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

    கடந்த மூன்று ஆண்டுக–ளாக விளாங்குடி பகுதியில் மட்டுமல்லாமல் மற்ற பகு–திகளும் இலவச அமரர் ஊர்தியால் 700-க்கும் மேற் பட்ட இறந்த உடல்கள் கொண்டு செல்லப்பட்டுள் ளது. இதன் முலம் நூற்றுக்க–ணக்கான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர்.

    மேலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஒவ் வொரு தெருவிற்கும் சென்று மக்கள் பிரச்சினை–களை ஒவ்வொரு நாளும் கேட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு மனு அளித்து தீர்வு கண்டு வருகிறோம். முன்னாள் முதல்-அமைச் சர் புரட்சித்தலைவி ஜெயல–லிதா மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் போல் எனது வார்டு பகுதிக்கும் செயல்படுத்துவேன்.

    அ.தி.மு.க. வார்டு என்ப–தால் மேயர் மற்றும் ஆணை–யாளர்கள் அதிக கவனம் செலுத்த தயங்குகின்றனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி, தனி ஆளாக மக்க–ளுக்கு அடிப்படை பிரச்சி–னைகளை பெற்றுத்தர போராடி உள்ளேன். இது–வரை நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சுமார் 14 கூட் டத்தில் கலந்து கொண்டு, 14 கூட்டத்திலும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தீர்வு காண பேசி தீர்வு கண்டுள்ளேன். அன்றும் இன்றும் மக்களுக்கு தேவையை மாநகராட்சி செய்ய தவறினால் போராட் டம் மூலம் மக்களுக்கு பெற்று தருவேன்.

    இவ்வாறு அவர் கூறி–னார்.

    • அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
    • பிரமாண்ட பந்தல்-மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய–லாளராக எடப்பாடி பழனி–சாமி தேர்வு செய்யப்பட்ட–தையடுத்து மதுரையில் பிரமாண்டமான வகையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடைபெறும் என்று முன் னாள் முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித் தார்.

    மேலும் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத் தும் என்றும், இந்த மாநாட் டில் குடும்பம், குடும்பமாக அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என் றும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு கொடுத்துள்ளார்.

    அ.தி.மு.க. மாநாடு நடை பெற இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக நடை–பெற்று வருகின்றன. மதுரை வலையன்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்ப–ரப்பிலான மாநாட்டு திடல் சீரமைக்கப்பட்டு பந்தல் அமைக்கும் பணி தொடங்கி–யுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக பந்தல் அமைக்கும் பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். மாநாட்டு மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் தமிழ–கம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டு திடலில் உணவு கூடம், குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய் யப்படுகின்றன. இந்த மாநாட்டையொட்டி பந்தல் அரங்கம், உணவு பரிமாறு–தல் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு குழுக்கள் அமைக் கப்பட்டு அந்த குழுவினர் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாநாட்டு மைதானத்தில் தினமும் ஆலோசித்து பணிகளை செய்து வருகிறார்கள்.

    10 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநாட்டு மைதானம் அருகே சுமார் 5 ஆயிரத்துக்கு மேற் பட்ட வாகனங்களை நிறுத் துவதற்கும் இடவசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநாடு 20-ந்தேதி காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் புடைசூழ அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து மாநாட்டில் கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச் சிகள் நடைபெறுகின்றன. மாநாட்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழைப் பரப்பும் வகையில் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க கண்காட் சியும் புகைப்படங்கள், ஒலி, ஒளி காட்சிகளாக காட்டப்ப–டுகிறது.

    மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனி–சாமி மாநாட்டை தலைமை தாங்கி நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் பாராளுமன்ற தேர் தல் பணிகள், கூட்டணி தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். நலிந்த தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

    இந்த மாநாட்டில் தமி–ழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஒவ் வொரு மாவட்டம் வாரியாக தொண்டர்களை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக முன் னாள் அமைச்சர்கள் செல் லூர் ராஜூ, ஆர்.பி.உதய–குமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகி–யோர் ஒவ்வொரு மாவட் டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரை மாநாட்டில் பங் கேற்க அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

    மேலும் மாநாட்டு குழு–வில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, காமராஜ், விஜயபாஸ்கர், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளும் மதுரையில் தங்கி இருந்து மாநாட்டு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.

    மதுரை மாநாட்டில் பங் கேற்க வரும் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்க வசதியாக மதுரை மற்றும் சுற்றுப்ப–குதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், லாட்ஜூகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட் டுள்ளன. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகள், திரு–மண மண்டபங்களில் முன் பதிவு செய்து வருகிறார்கள்.

    இது தவிர மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங் களில் இருந்து அதிக அள–வில் தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் தென் மாவட்ட நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டும் சுமார் 3 லட்சம் பேரை மாநாட்டு திடலுக்கு அழைத்து வர தேவையான வாகன வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பு அணி நிர்வா–கிகளும் பகுதி பகுதியாக சென்று தொண்டர்களிடம் அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே வருகிற 20-ந்தேதி மதுரை வலையங்குளம் மைதானம் நிரம்பி வழியும் வகையில் அனைத்து ஏற்பா–டுகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் தெரிவித் தார்.

    இந்த மாநாடு வருகிற பாராளுமன்றத் தேர்த–லுக்கும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள் ளனர். இந்த மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர் களை அழைக்கவும் அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது.

    • இலவச சர்க்கரை நோய்-கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடந்தது.
    • இதில் 800-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மதுரை

    மதுரை கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ அறக்கட்ட–ளையும் இணைந்து மதுரை ஜெய்ஹிந்த்புரம் கோகிலா வித்த மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இல–வச சர்க்கரை நோய் பரிசோ–தனை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தியது.

    முகாமில் கலந்துகொண்ட நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு மற்றும் கண் விழித்திரை பரிசோ–தனை டாக்டர் ஜெ.ஜெய–வெங்கடேஷ் முன்னிலை–யில் நடந்தது. டாக்டர்கள் மோகித் ஷர்மா, சர்தா ஷா, பவித்ரா, சுபலெட்சுமி, பிரியங்கா மற்றும் நிர்வாக அலுவலர் செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர் ராஜ–சேகரன் ஆகியோர் நோயா–ளிகளுக்கு பரிசோதனை–களை மேற்கொண்டனர்.

    இதில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இதன் பின்புறம் இன்று காலை மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயி லில் அடிபட்டு 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தின் அருகே பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக் டர் கேசவன் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னார். அப்போது அந்த வாலிபர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை.

    அவர் மஞ்சள் நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். பூணூல் அணிந்திருந்தார். சட்டையில் வில்லாபுரத்தில் உள்ள ஒரு டெய்லர் கடையின் பெயர் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அணிந்திருந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு தைத்தது என்பது தெரிய வந்தது. வேறு விவரம் ஏதும் தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்த–வர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மரக்கன்றுகள் நடவு செய்யவும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை நர்சிங் கல்லூரி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி தலைமை தாங்கி அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்.

    உடன் கல்லூரி மாண விகள் வெள்ளை சீருடைய அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் தங் களது வீடுகளுக்கு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்ய வும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

    • தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கருத்தரங்கு நடந்தது.
    • டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் டை ரீச் என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அமைப்பின் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது:- சிறிய நகரங்களில் இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வழிகாட்டுவதே எங்களது முக்கிய மான நோக்கமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு சிறிய நகரங் களை கண்டறிந்து தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவ தீர்மானித்துள்ளோம் என்று கூறினார்.

    தலைமை நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராமன், தொழில் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறுவதற்கான செயல்பாடுகளை பற்றி பேசினார். டை சென்னை அமைப்பின் செயல் இயக்குநர் அகிலா ராஜேஷ்வர் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் சர்க்கரைஆலை அரசுமேல் நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் கள் சங்கம் சார்பாக அரசுபொதுதேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளிவளாகத்தில் நடந்தது. இந்தவிழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். சங்கதலைவர் கண்ணன், துணைத்தலைவர் கள் செந்தாமரைக்கண்ணன், பரணிராஜா, பொருளாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுசெயலாளர் ராமராஜ் வரவேற்றார். இந்தவிழாவில் முதல்பரிசு சாலினி, சரவணக்குமார், இரண்டாம் பரிசு சுபஸ்ரீ, காவியா மூன்றாம் பரிசு கவுசல்யா, கோகுல் ஆகியோருக்கும் சிறப்புபரிசாக கணக்கு பதிவியல் பாடத்தில் நூறுமதிப்பெண் பெற்ற மாணவி கவுசல்யாவுக்கு வழங்கப்பட்டது.

    இதில் சங்கநிர்வாகிகள் கமலபதி, காசிலிங்கம், ராஜேந்திரன், பாலசந்திரன், ராஜசேரராஜேந்திரன், ஜெயக்குமார், இன்னாசியர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை இணைசெயலாளர் லெட்கர்கான் தொகுத்து வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
    • சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சியில் தூய்மை பணிகள் செய்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாங்கனி தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள் செலுத்தல், ரத்த பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கினர். இந்த முகாமை நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், திருமங்கலம் நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன் சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், ஜமீலா பவுசியா, சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மதுக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.92 ஆயிரம் பறிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வலையபட்டியில் மதுக்கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக ேவலை பார்ப்பவர் முருகேசன் (வயது40). நேற்று இரவு விற்பனையை முடித்து விட்டு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் விற்பனை யாளர்கள் அய்யனார், தனசேகர் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் முருகே சன் பணம் தராமல் பெட்டியை மறைக்க முயன்றார். உடனே அந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் பணப் பெட்டியை பறித்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்தி ருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பணப்பெட்டியில் ரூ.92 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தினர். ேமலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மதுக்கடை விற்பனையாளர் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது.
    • பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷ வழிபாட்டுக்காக 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் நாளிலேயே காட்டு தீ பரவியதால் அதன் பின்னர் மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறையில் திரண்டனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் அடிவாரத்தில் காத்திருந்தனர்.

    இந்நிலையில் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட 5 மற்றும் 6 பீட் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டு தீ பரவியது. தொடர்ந்து இரண்டு நாட்களாக எரிந்து வந்த தீ இன்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் பாதுகாப்பு காரணமாக பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களுக்காக 4 நாட்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று பிரதோஷத்திற்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது என்றும் பவுர்ணமி உள்ளிட்ட மீதமுள்ள 3 நாட்களுக்கான அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றுடன் அனுமதி முடிவடைந்ததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதனால் தணிப்பாறை அடிவார பகுதியிலேயே முடி காணிக்கை எடுத்தல் பொங்கல் வைத்தல் தேங்காய் பாலம் உடைத்தல் உள்ளிட்ட தங்களது நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தி விட்டு ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

    ×