என் மலர்tooltip icon

    மதுரை

    • சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
    • கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜ்குமார் ஆலோசனையின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்பிரபாகரன், இனிய குமார் சதீஷ் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை, உணவு விடுதிகள், கறிக்கடை, கோழிக்கடை, பலசரக்கு கடைகளில் பாலிதீன் பயன்பாடு பற்றியும், பெட்டிக் கடைகளில் தடை செய்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் உள்ளதா? என்றும் கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.

    • ரூ.1½ கோடி மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பில் அழைக்கவும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன்கள் திருட்டு தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் உத்தர வின்பேரில் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன் கள் குறித்து தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் திருட்டுப்போன ரூ.13 லட்சத்து 81 ஆயிரத்து 750 மதிப்புள்ள செல்போன் கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.1 கோடியே 58 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1107 செல்போன்கள் கைப்பற்றப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வங்கி மோசடி தொடர்பான புகாரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 406 ரூபாய் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. இது வரை ரூ.44 லட்சத்து 28 ஆயிரத்து 805 உரியவர்க ளுடைய வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    வங்கியில் இருந்து பேசுவ தாக கூறி ஏமாற்றும் நபர்க ளிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கி கணக்கு எண், சிவிவி மற்றும் ஓடிபி போன்ற விபரங்களை முன் பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், பணம் இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் மொபைல் ஆப்களை நம்பி யும், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும், முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார். அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் தெரி வித்துள்ளார்.

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    மதுரை

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்காக மக்களை குடும்பம், குடும்பமாக பங்கேற்கும் வண்ணம் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று வழங்கியும், மாநாடு லோகோ ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டி அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி கே.கே. நகர் பூங்கா அருகே நடைபெற்றது.

    மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநாடுக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதய குமார் கூறியதாவது:-

    எடப்பாடியார் தலைமை யில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு, தமிழகம் மட்டுமல்லாது, இந்திய தேசம் மட்டுமல்ல, உலக மக்களே கவனத்துடன் எதிர்கொண்டு வருகி றார்கள். இதனை தொடர்ந்து அம்மா பேரவை யின் சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லம் தோறும் இலை மலர மரக்கன்று வழங்கப்பட்டு வருகிறது.

    மாநாட்டு விழிப்பு ணர்வுக்காக 2 சக்கர வாகனங்களில் மாநாட்டு லோகோ கொண்ட ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு வருகிறது.தி.மு.க. அரசு விலைவாசி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    சொத்து வரி உயர்வில் கின்னஸ் சாதனை படைத் துள்ளது. பால் விலை உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    இந்த சர்வதாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை மீட்டெக்கும் வகையில் மாநாடு அமையும். நாள் தோறும் எடப்பாடியார் தி.மு.க. அரசின் செயல் பாடுகளை தோலுரித்துக் காட்டிவருகிறார். ஆனால் முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு பொய் சொல்வதில் கின்னஸ் சாதனையை அரசு படைத்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் கின்னஸ் சாதனை என்று கூறுகிறார்கள்.

    ஆனால் இன்றைக்கு பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு அமையும்.மாநாட்டில் எத்தனை லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு சுடசுட உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் ஆணையிட்டு உள்ளார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கும் அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை வேண்டி கள்ளழகர் கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம் செய்தனர்.
    • மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 2 ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18-ஐ முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து பாரம் பரிய முறையில் மாட்டு வண்டிகளை பூட்டி வரிசை யாக ஒன்றன் பின் ஒன்றாக தங்களது குடும்ப உறுப்பி னர்களுடன் அழகர்கோவி லுக்கு சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர்

    அழகர்கோவில் மலை மீது உள்ள ராக்காயி அம்மன் கோவில் தீர்த்தத் தில் புனித நீராடிய பின்னர் கள்ளழகர், ராக்காயி அம்மன், 18-ம் படி கருப்ப சாமி தெய்வங்களை வணங்கி விட்டு தாங்கள் நேர்த்தி கடனாக கொண்டு வந்த கோழி, சேவல்களை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டு தங்களது விரதத்தினை முடித்து சொந்த ஊர் திரும்புவது இவர்களது வழக்கமாக உள்ளது.

    விவசாயம் செழிக்க, மழை பொழிய வலியுறுத்தி யும் இந்த பாரம்பரிய மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
    • லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் பொது செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்முறையாக மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதுரை மாநாட்டில் ஏராளமான தொண்டர்களை திரள செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்களை அதிகளவில் வாகனங்களில் அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிசாமி மதுரை மாநாட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் மதுரை மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 10 லட்சம் பேருக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை ரிங் ரோட்டில் உள்ள வலையன்குளம் பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு மைதானம் சுமார் 50 ஏக்கர் பரப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு திடலில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டு திடலில் ஆங்காங்கே தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 250 கவுண்டர்கள் அமைத்து உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவுண்டர்களிலும் 6 பேர் பணியமர்த்தப்பட்டு தொண்டர்களுக்கு உணவுகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அந்த வகையில் உணவு மற்றும் குடிநீர் வழங்க சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் என 3 வகையான சாதங்கள் தொண்டர்களுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தஞ்சை பகுதியில் இருந்து சுமார் 3,000 மூட்டை அரிசி மாநாடு திடலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது தவிர உணவு அருந்துவதற்கு தேவையான தட்டுகள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டு மைதானத்தில் 50 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் லாரிகள், மினி வேன்கள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் மாநாட்டு திடலில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வருகிறார்கள். மேலும் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் மாநாடு குழுவில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளும் மதுரையில் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    எனவே மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பார்கள் என்றும், அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தொண்டர்களும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் வகையில் மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு அமோகமாக நடைபெறும் என்று அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    • கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    திருமங்கலம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன் (வயது 58). இவர் திருவனந்தபுரம் பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் பிரதாப் சந்திரன் மற்றும் அவர் நடத்தி வரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தூத்துக்குடியை சேர்ந்த பழனிமுருகன் (45) மற்றும் அழகு நிலைய மேலாளர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரிதா (37) மூன்று பேரும் காரில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு வியாபாரம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த டிரைவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    கடைசியில் அந்த கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் பயணம் செய்த மற்ற இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காலை நேரம் என்பதால் கண் அயர்ந்து டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமங்கலத்தில் சிலம்ப போட்டி நடந்தது.
    • சோட்டோகான் நிறுவனர் பால்பாண்டி முன்னிலை வகித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் பள்ளியில் இந்தியன் லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து மாபெரும் சிலம்பம் போட்டி நடத்தின. போட்டியை மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் மணி தொடங்கி வைத்தார். சோட்டோகான் அமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    சோட்டோகான் நிறுவனர் பால்பாண்டி முன்னிலை வகித்தார். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராம்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வயது அடிப்படையிலும், மாணவர்களின் தகுதியின் அடிப்படையிலும் பல்வேறு கட்ட போட்டிகளாக நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பி.கே.என். பள்ளி நிர்வாக கமிட்டியினர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்றார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொகுதி மேலிட பார்வையாளர் சம்பத், வடக்கு மாவட்ட அவை தலைவர் பாலசுப்பி ரமணியன், ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ், பரந்தா மன், பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தையன், சோமசுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் மூர்த்தி, கலந்து கொண்டு முகவர்கள் முன்னிலையில் பேசியதா வது:-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளு மன்ற தொகுதியில் தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். வருகின்ற 17-ந் தேதி ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு பங்கேற்க வேண்டும். பூத் கமிட்டியில் உள்ளவர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் நகர் செய லாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, பேரூ ராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், ஜெ யராமன், துணை தலை வர்கள் சுவாமிநாதன், கார்த்திக், மாவட்ட தொண்ட ரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்தி கேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, தனிச்சியம் மருது, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஸ், பொறியாளர் அணி ராகுல் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கோவில், சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 94 பேர் மீட்கப்பட்டனர்.
    • மீட்கப்பட்ட 10 குழந்தைகள் நலக்குழு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை

    மதுரையில் உள்ள பிர–சித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள் தோறும் நூற்றுக்கணக் கா–னோர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலின் 4 நுழைவு வாயில் வழியாக கோவி–லுக்கு வரும் பக்தர்களிடம் அண்மைகாலமாக பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதி–கரித்து வருகின்றன.

    குறிப்பாக பெண்கள் கைக்குழந்தைகளை வைத் துக்கொண்டு பால், சாப் பாடு வாங்கவேண்டும் என பொதுமக்களிடம் பிச்சை எடுக்கின்றனர். இதில் சிலர் குழந்தையின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு பணம் கொடுக் கின்றனர்.

    இதேபோல் மதுரையின் முக்கிய சாலை சந்திப்புகள், காளவாசல், கோரிப்பாளை–யம், அண்ணாநகர், பால் பண்ணை உள்ளிட்ட பல் வேறு சிக்னல்களிலும் குழந் தையை வைத்து பிச்சை எடுப்பதை காணமுடிகிறது. பல மணிநேரம் சுட்டெ–ரிக்கும் வெயிலில் குழந் தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பதால் உடல் நிலையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

    குழந்தையை வைத்து பிச்சை எடுக்கக்கூடாது என அதிகாரிகளும், போலீசாரும் எச்சரித்தும் அந்த கும்பல் அதனை கண்டுகொள்வ–தில்லை. இந்த நிலையில் மதுரை மாநகர காவல் துறை குழந்தைகள் மீட்பு என்ற பெயரில் குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், குழந்தை–கள் நலக்குழுவினர் மற்றும் சிறப்பு சிறார் ஆகிய துறை–யைச் சார்ந்த அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர்

    அதன்படி மதுரை மாந–கர் அண்ணா நகர், திலகர் திடல், திடீர் நகர் பகுதியில் உள்ள சிக்னல்கள், கோவில் கள், முக்கிய சந்திப்பு பகுதிகளில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற்றதாக 95 பேர் மீட்கபட்டுள்ளனர். அதில் குறிப்பாக யாசகம் பெற்றதாக 50 ஆண்கள், 35 பெண்கள், 10 குழந்தைகள் என 95 பேர் மீட்கபட்டுள் ள்ளதாகவும்,குழந்தைகளை வைத்து யாசகம் செய்யும் தொழில் செய்யும் பெற் றோர்கள் மற்றும் குழந்தைக–ளுக்கு உணவுகள் வழங்கப் பட்டு விழிப்புணர்வு இல்லா பெற்றோர்களுக்கு இனி வரும் காலங்களில் யாசகம் பெறக்கூடாது என அறிவு–றுத்தி அனுப்பி வைத்தனர்.

    மேலும் யாசகம் பெறும் தொழிலில் ஈடுபடுத்தியதாக மீட்கப்பட்ட 10 குழந்தைகள் நலக்குழு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள–தாகவும் அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா 13-ந்தேதி தொடங்குகிறது.
    • சுவாமியும், அம்மனும் பிட்டு தோப்புக்கு செல்வர்.

    மதுரை

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா வருகிற 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ெயாட்டி 12 நாட்களுக்கு 12 திருவிளையாடல் நிகழ்ச்சி கள் நடைபெறும்.

    19-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், 20-ந் தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந் தேதி தருமிக்கு பொற்கிழி வழங்கியது, 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளி யது, 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, 26-ந்தேதி நரியை பரி யாக்கிய லீலை, 28-ந் தேதி விறகு விற்ற லீலை நடைபெறும்.

    24-ந்தேதி இரவு சுந்தரே சுவரர் பட்டாபிஷேகம் நடைபெறும். சுந்தரேசு வரரிடம் செங்கோல் வழங்கப்பட்டு சுவாமியும், அம்மனும் பிரகாரத்தில் வலம் வருவர். 27-ந்தேதி பிட்டுத்திருவிழா நடை பெறும்.

    திருவிழா நாட்களில் 4 ஆவணி மூல வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வருவார்கள்.

    29-ந்தேதி சட்டத் தேரில் சுவாமி-அம்மன் எழுந்த ருள்வர். அன்று இரவு சப்தவர்ண சப்பர உலா நடைபெறும். 30-ந் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தாரியுடன் தீர்த்தவாரி நடைபெறும். சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வர். அத்துடன் திருவிழா நிறைவடையும்.

    • மதுரை சிந்தாமணி கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி கடம் பவனம் அப்பளம் வியாபாரி–கள் சங்க 3-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட் டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது. விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார். செயல் தலைவர் வி.சி.சீனிவாசன் வரவேற் றார். செயலாளர் எம்.கண்ணன் செயல் விளக்கம் அளித்தார். பொருளாளர் எஸ்.ராமமூர்த்தி நிதி நிலை அறிக்கையினை சமர்ப்பித் தார்.

    விழாவில் உணவுப்பாது–காப்புத்துறை மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வி.ஜெயராம–பாண் டியன், மதுரை மாவட்ட தொழில்மைய இணை இயக்குனர் எஸ்.கணேசன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல தலைவர் டி.கே.அபிஜித், ஐ.டி.டி.சி. தொழில் வணிக மேம்பாட்டு மைய சேர்மன் எஸ்.வி.சூரஜ்சுந்தர சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினர்.

    மேலும் இந்த விழாவில், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், மதுரை நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் கே.மோகன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலை–வர் எஸ்.வி.எஸ்.எஸ்.வேல் சங்கர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல தலைவர் டி.செல்லமுத்து, மடீட்சியா தலைவர் எம்.எஸ்.சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் துணைத்தலைவர் எம்.பாலமுருகன், இணைச் செயலாளர்கள் ஆறுமுகம், பிரதாப் சந்திரன், அர்ஜூன் பாலா, செயற்குழு உறுப்பி–னர்கள் பாலசண்முகநாதன், கருப்பையா, லோகேஸ்வ–ரன், ராஜா, ராஜபாண்டி, பன்னீர்செல்வம், பழனிக் குமார், முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர் பாக பல்வேறு முக்கிய தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    முடிவில் துணைத்தலை–வர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார்.

    • வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 161-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 3237 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர், தொழிற்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×