கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

மதுரை சிந்தாமணி கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார்.
மதுரை கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க 3-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
மதுரை கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க 3-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

மதுரை

மதுரை சிந்தாமணி கடம் பவனம் அப்பளம் வியாபாரி–கள் சங்க 3-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட் டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது. விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார். செயல் தலைவர் வி.சி.சீனிவாசன் வரவேற் றார். செயலாளர் எம்.கண்ணன் செயல் விளக்கம் அளித்தார். பொருளாளர் எஸ்.ராமமூர்த்தி நிதி நிலை அறிக்கையினை சமர்ப்பித் தார்.

விழாவில் உணவுப்பாது–காப்புத்துறை மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வி.ஜெயராம–பாண் டியன், மதுரை மாவட்ட தொழில்மைய இணை இயக்குனர் எஸ்.கணேசன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல தலைவர் டி.கே.அபிஜித், ஐ.டி.டி.சி. தொழில் வணிக மேம்பாட்டு மைய சேர்மன் எஸ்.வி.சூரஜ்சுந்தர சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினர்.

மேலும் இந்த விழாவில், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், மதுரை நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் கே.மோகன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலை–வர் எஸ்.வி.எஸ்.எஸ்.வேல் சங்கர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல தலைவர் டி.செல்லமுத்து, மடீட்சியா தலைவர் எம்.எஸ்.சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் துணைத்தலைவர் எம்.பாலமுருகன், இணைச் செயலாளர்கள் ஆறுமுகம், பிரதாப் சந்திரன், அர்ஜூன் பாலா, செயற்குழு உறுப்பி–னர்கள் பாலசண்முகநாதன், கருப்பையா, லோகேஸ்வ–ரன், ராஜா, ராஜபாண்டி, பன்னீர்செல்வம், பழனிக் குமார், முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர் பாக பல்வேறு முக்கிய தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

முடிவில் துணைத்தலை–வர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com