என் மலர்tooltip icon

    மதுரை

    • வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

    மதுரை

    திருநகர் பாலசுப்பிரமணி யம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகன் ஆதி (வயது 25). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது முன்கத வின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் பாலசுப்பிரமணியம் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு நகை-பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை கே.கே.நகரில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.
    • ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (51). கே.கே.நகர் பகுதியில் சொந்த வேலை காரணமாக மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆறுமுகம் சென்றார்.

    அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் ஒரே பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. சுந்தரம் பார்க் அருகே வந்தபோது எதிர்திசையில் ஒரு இருசக்கர வாகனம் ஆட்டோ வின் குறுக்கே வந்துள்ளது. இதனால் பிரேக் அடித்து ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.

    ஆனால் ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் மீனாட்சிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாடிப்பட்டியில் கருணாநிதி நினைவு நாள் ஊர்வலம் நடந்தது.
    • பழைய நீதிமன்றத்தில் இருந்து பஸ் நிலையம் வரை நடந்தது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட துணைச்செயலாளர் வெங்கடேசன் எம். எல். ஏ. தலைமையில் கருணாநிதி உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் அயூப்கான், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைச் செயலாளர் ரோகிணி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ராம் மோக ன், ஒன்றிய பிரதிநிதி எல்.எஸ். அய்யாவு, அமைப்பு சாரா அணி அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜி, எம் எஸ் முரளி, வினோத், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு நன்றி கூறினார். முன்னதாக பழைய நீதிமன்றத்தில் இருந்து பஸ் நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடந்தது.

    • மேலூர் அருகே இந்திய கூட்டணி கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடந்தது.

    மேலூர்

    மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க கோரி மேலூர் அருகே உறங்கான்பட்டியில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைரவன், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, சுண்ணாம்பூர் பாண்டி, கொட்டாணிபட்டி செல்லையா, வைரமணி, அங்கு பிள்ளை மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் கண்ணன், மணவாளன் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் மெய்யர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அவரது நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.

    உசிலம்பட்டி

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தேவர் சிலை அருகே அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் நகர் செயலாளர் தங்க பாண்டியன், நகர் மன்ற தலைவி சகுந்தலா, நகர மன்ற உறுப்பினர்கள் செல்வி, வீரமணி, முருகன், வேட்டு ராஜேந்திரன், பழனிக்குமார், பொதுகுழு உறுப்பினர் சரவணகுமார், நகர் அவைத்தலைவர் சின்னன், துணைச் செயலாளர்கள் தேவி, ரமேஷ், நகர பொருளாளர் ஜெயபிரகாஷ், மகாலிங்கம் மற்றும் நெசவாளர் அணி சரவெடி சரவணன், ஒன்றிய செயலாளர் முருகன், அலெக்ஸ் பாண்டியன், நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழ்நாடு மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளைகள் இணைந்து நடத்தியது.

    மதுரை

    தமிழ்நாடு மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை மற்றும் தனியார் அறக்கட்டளைகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை தல்லாகுளம் பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் நடத்தியது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 5 பேர் தங்களின் வாழ்க்கைத் துணைகளை தேர்ந்தெடுத்தனர்.

    நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூபதி, பொருளாளர் சிவகுமார், தயான் சந்த் விருது பெற்ற சர்வதேச தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் ரஞ்சித்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தீபா ரோட்டரி சங்க தலைவர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் கலைஞர் நினைவுதினத்தையொட்டி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
    • தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.

    திருமங்கலம்

    தமிழக முன்னாள் முதல் வர் கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் நக ராட்சி அலுவலகத்திலிருந்து மதுரை ரோட்டில் அமைந் துள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் வரையில் மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற் றது.

    தொடர்ந்து மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கலை ஞர் படத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தி.மு.க.வினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் அரிசி மூடை, மளிகை பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் நாகராஜன், தலை மை செயற்குழு உறுப்பினர் கள் ஏர்போர்ட்பாண்டி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ. முத்து ராமலிங்கம், துணை செய லாளர் லதா அதியமான், மீனவர் அணி அமைப்பாளர் ஆலங்குளம் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் தன பாண்டியன், ராமமூர்த்தி, ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், நகர செய லாளர் ஸ்ரீதர், துணைசெய லாளர் செல்வம், திருமங் கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதிய மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தெற்கு ெரயில்வே தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் பொறுப்பேற்றார்.
    • பல்வேறு பயிற்சிகளை பெற்றுள்ளார்.

    மதுரை

    தெற்கு ெரயில்வே முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1989-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியான ஸ்ரீகுமார் மெட்ராஸ் ஐ.ஐ.டி, காரக்பூரில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தெற்கு ெரயில்வே மற்றும் தென்மேற்கு ெரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

    முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளராக சேர்வதற்கு முன்பு, பிலாஸ்பூ ரில் உள்ள தென்கிழக்கு மத்திய ெரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக இருந்தார். அதற்கு முன், தெற்கு ெரயில்வேயின் தலைமை போக்குவரத்து திட்ட மேலாளராகவும், தெற்கு ெரயில்வேயின் தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளராகவும், தென் மண்டலத்தின் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் தலைமை பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

    ஜெர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து, பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமு கத்தில் சரக்கு போக்குவரத்து குறித்த பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மதுரை

    மதுரையில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொ.மு.ச. சார்பில் அனுசரிக்கப்பட்டது. மண்டல செயலாளர் ராஜேஸ்கண்ணன், நிர்வாகி சுபாஷ் ஆகியோர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் முத்தையா, ரிச்சர்ட், குமார், முத்துப்பாண்டி, கென்னடி, சண்முகசுந்தரம், காமாட்சி அப்பன், எபினேசர்பால், பரமேஸ்வரன், சரவணன், திருவேட்டை ஜாகீர்உசேன், செபாஸ்டியன், ராஜன், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநாடு நடந்தது.
    • சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோகரன் தலைமை தாங்கினார். இதில் சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் சலவை படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நெடுஞ்சாலை துறையிலே பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநில நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரபோஸ், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் சூழல் ஏற்பட்டது.

    மதுரை

    தென்மேற்கு பருவமழை குறைந்ததால் மதுரை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் மதுரை நகரில் 100 வார்டுளிலும் போதியளவு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

    மதுரை மாநகராட்சியின் 25-வது வார்டான பி.பி.குளம் பகுதியில் உள்ள இந்திராநகர், முல்லை நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.குடிநீருக்காக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் சூழல் ஏற்பட்டது.

    சாலை மறியல்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை பி.பி.குளம் மெயின்ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    • கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் பெற வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற்று தராததினால் தற்போது தஞ்சையில் நெற்பயிர்கள் கருகி உள்ளது.
    • காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

    மதுரை:

    மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தஞ்சை டெல்டா பகுதியில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு தான். கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் பெற வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற்று தராததினால் தற்போது தஞ்சையில் நெற்பயிர்கள் கருகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    எனவே ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

    மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கி உள்ள ரூ.1500 கோடியை தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகைக்காக பயன்படுத்தி இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ராஜ்மோகன் உள்பட பலர் இருந்தனர்.

    ×