என் மலர்tooltip icon

    மதுரை

    • தூண்டுதலின்பேரில் பாட்டி வீட்டில் ரூ.47 ஆயிரம் சிறுவன் திருடினான்.
    • பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    விருதுநகர் இந்திராநகர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த சிறுவன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பெண்கள் சிறுவனுக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து அன்பாக பேசி பழகி வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று 4 பேரும் சிறுவனிடம் பாட்டி வீட்டு பீரோவில் இருந்து பணத்தை திருடு வருமாறு கூறி உள்ளனர். அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து ரூ.47 ஆயிரம் ரொக்கத்தை எடுத்து வந்து அந்த பெண்க ளிடம் கொடுத்துள்ளான். பின்னர் அந்த பணத்தை அவர்கள் பங்கு போட்டு கொண்டனர்.

    இந்த நிலையில் வீட்டுக்கு வந்த சிறுவனின் தாய் பீரோவில் இருந்த பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுவனிடம் கேட்டபோது நடந்த விபரத்தை கூறியுள்ளான். மேலும் பணத்தை எடுத்தது யாரிடமும் கூறக்கூடாது என பெண்கள் மிரட்டிய தாகவும் சிறுவன் அழுதுக் கொண்டே தனது தாயிடம் கூறினான்.

    இதையடுத்து சிறுவனின் தாயார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த அர்ஜூன் மனைவி அன்னி யம்மாள் என்ற அம்முனி (வயது33), செல்லப்பாண்டி மகள் ஜான்சி ராணி என்ற மீனா (21), மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பாலு மகன் சாலமன் ராஜா (24), ஆழ்வார்புரம் முருகன் மகன் கார்த்திக் (26) ஆகிய 4 பேர் சிறுவனை தூண்டி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • ஏறுமுகத்தில் தேங்காய் விலை உள்ளது.
    • விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 8778981501 என்ற எண்ணிலும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (பொ) 9442784684 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல் பட்டுவரும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கான மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று (8-ந்தேதி) நடை பெற்ற மறைமுக ஏலத்தில் ஒரு தேங்காய்க்கான அதிக பட்ச விலையாக ரூ.11.65ம் ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கான அதிகபட்ச விலையாக ரூ.77.25 வியாபாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 13 விவசாயிக ளின் 40,938 எண்ணிக்கை யிலான தேங்காய்கள் ரூ.2,80,109-க்கும் 19 விவசாயிகளின் 2.40 டன் அளவிலான கொப்பரை ரூ.1,63,152-க்கும் விவசாயிகளால் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தேங்காய் விலை ரூ.10-ஜ கடந்தது விவசாயி களுக்கு புதிய நம்பிக்கை யினை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை மற்றும் திருவிழா காலங்கள் நெருங்கியுள்ளதால் தேங்காய் விலை எழுச்சி யடைய தொடங்கியுள்ளது. ஆகவே மதுரை மாவட்ட விவசாயிகள் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்று வரும் தேங்காய் மற்றும் கொப்பரை மறைமுக ஏலத்தில் பங்கேற்று தங்கள் விளைபொருளுக்கு லாபா கரமான விலையினைப் பெற்றிடுமாறு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொப்பரைக் கொள்முதல் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் கால உச்சவரம்பான செப்டம்பர் மாதம் (30-ந்தேதிவரை) மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே கொப்பரை தேங்காயினை வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து தரமான எவ்வித இடைத்தரகுமின்றி குறைந்தபட்ச ஆதரவு விலையினைப் பெற்றுப் பயனடையுமாறு மதுரை விற்பனைக்குழு செயலா ளர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.

    மேலும் விபரங்களுக்கு வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 8778981501 என்ற எண்ணிலும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (பொ) 9442784684 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் மனுவில் கூறியிருந்தார்.
    • மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி போலீஸ் அதிகாரிகளிடம் புதிய மனு அளிக்கப்பட்டது.

    எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் திராகி, அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    முடிவில் நீதிபதி, ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • ஆதிவடிவுடையாள்-ஆதீஸ்வரர் கோவில் ஆடி திருவிழா நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், ஆதிகொற்றவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டியில் ஆதிவடிவுடையாள்-ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தலைமை பூசாரி ஆதிமுத்துக்குமார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். விழாவில் கிடா வெட்டி அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணன் தொடக்கிவைத்தார். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ரத்தின ஜோதிமுருகன், விராலிப்பட்டி ஊரட்சிமன்ற தலைவர் காளியம்மாள் ஜெயபாலன், சீர்பாதம்தாங்கிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் காமாட்சி கோபிநாத், லலிதாம்பி கேஸ்வரர் கோவில் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், ஆதிகொற்றவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு மரக்கன்று வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
    • இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந் தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அழைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற நிகச் சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், டாக்டர் சரவணன், தமிழ ரசன் கருப்பையா, மாணிக் கம், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றகள் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

    இதில் மாநில நிர்வாகிகள் துரை தன்ராஜ், வெற்றிவேல், இளங்கோவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், டீக்கடை கணே சன், சண்முக பாண்டிய ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கருப் பட்டி தங்கப்பாண்டி மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா, கச்சிராயிருப்பு முனியாண்டி, தென்கரை ராமலிங்கம், தண்டபாணி, மணிகண்டன்.

    செழியன் மருது, சேது, மன்னாடி மங்கலம் ராஜ பாண்டி, ராமு குருவித்துறை பாபு, மேலக்கால் காசி லிங்கம் சோழவந்தான் துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

    • வாலிபால் போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளது.
    • போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மேலூரில் 14, 17, 19 வயது பிரிவு ஆண்கள், பெண்க ளுக்கான வாலிபால் போட்டி அழகர் கோவில் சுந்தரராஜ உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. போட்டியை அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, அழகர் கோவில் உயர்நிலைப் பள்ளி தலை மையாசிரியர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத் தனர். 19 வயது பெண்கள் பிரிவு வாலிபால் போட்டி யில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் இடத் தையும் 17 வயது பெண்கள் பிரிவில் அழகர் கோவில் சுந்தர ராஜ உயர் நிலைப் பள்ளி மாண விகள் முதல் இடத்தையும், தெற்குத் தெரு அரசு மேல்நி லைப்பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தை யும் பிடித்தனர். 14 வயது பெண்கள் பிரிவில் சுந்தர ராஜ உயர்நிலைப்பள்ளி மாண விகள் முதல் இடத்தை யும், தெற்கு தெரு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கள் 2-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவி களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

    • ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • வடக்கு மாவட்ட செயலாளர் செப்டம்பர் 15 நடைபெறக்கூடிய மாநாடு குறித்து பேசினார்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள ம.தி.மு.க. ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமிநாதன், ஹக்கீம் ராஜ்குமார், நந்த குமார் ஆகியோர் முன்னி லை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி கருப்பையா வரவேற்றார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் செப்டம்பர் 15 நடைபெறக்கூடிய மாநாடு குறித்து பேசினார்.

    கூட்டத்தில் சோழ வந்தானில் அதிகரித்து வரும் வாகன நெருக்கடியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மார்க்கெட் ரோடு மாரியம்மன் கோவில் சன்னதி ஆகிய சாலைகளை ஒருவழிப்பாதையாக ஏற்படுத்த வேண்டும். சோழவந்தான் வழியாக அனுமதி பெற்று வாடிப்பட்டி வழியாக செல்லக்கூடிய வெளியூர் பஸ்கள் சோழவந்தான் வழியாக இயக்க வட்டாரப் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோழவந்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய ஆக்கிரமிப்பு களை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். முதல் போகம் விவசாயம் நடைபெறாதால் விவசாயி களுக்கு நிவாரண வழங்க வேண்டும். வேளாண்மை துறை விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடு ஆலோசனை வழங்க வேண்டும். அண்ணா பிறந்த நாளன்று மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு திரளாக கலந்து கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் அறிவழகன், ஜெயக்குமார் ஆகியோர் வழிமொழிந்து பேசினார்கள். நிர்வாகி தவமணி நன்றி கூறினார்.

    • வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள்சந்திவுரபாண்டி, குரு தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவராக முத்துமணி, துணைத்தலைவர்களாக கார்த்திக்கேயன், தங்கபாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச்செயலாளர்களாக சிவராமன், காசிநாதன், பொருளாளராக அழகர்சாமி, நூலகராக துரைமுருகன், செயற்குழு உறுப்பினர்களாக ராமர், கார்த்திக்குமார், நேதாஜி, வீரமாரி பாண்டியன், நாச்சியார், கோபி, கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், அரசு வழக்கறிஞர்கள் மோகன்குமார், பார்த்தசாரதி, மகேஷ், மூத்த வழக்கறிஞர்கள் செல்வகுமார், அழகேசன், முத்துராமலிங்கம், வெள்ளைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார்.
    • மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்க வசதியாக மாநாட்டு திடல் அருகே 5 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகனங்களை சிரமமின்றி நிறுத்தவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தாமல் மாநாட்டை சிறப்பாக நடத்தவும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாநாட்டில் பங்கேற்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் வழங்கப்படுகிறது இதற்காக 250 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன. மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந்தேதி மாலை மதுரை வருகிறார். 20-ந்தேதி காலை 10 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள பிரம்மாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை தொண்டர்கள் புடை சூழ ஏற்றி வைக்கிறார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார்.

    மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டுப்புற பாடகர்களான செந்தில்-ராஜலட்சுமி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மதுரை முத்துவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் பங்குபெறும் கவியரங்கம் மற்றும் அ.தி.மு.க. சாதனை விளக்க பேச்சரங்கம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதில் முதலாவதாக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுகிறார்கள். மதுரையில் நடைபெறும் இந்த அரசியல் மாநாடு அ.தி.மு.க.வின் வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு மட்டுமல்ல, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் நிலை நிறுத்தும் வகையில் அமையும் மாபெரும் வெற்றி மாநாடாகவும் அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மர்ம நபர் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் பாலன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
    • கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பா குடியை சேர்ந்தவர் பாலன் (வயது45). இவர் சொந்தமாக கீசெயின் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். மேலும் வீடுகளுக்கு குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தனது கம்பெனியை மூடிவிட்டு பாலன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். சிக்கந்தர்சாவடி-கோவில்பாப்பாகுடி மெயின் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் வழிமறித்ததாக தெரிகிறது.

    உடனே பாலன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாலனின் காலில் சரமாரியாக வெட்டினார்.

    இதன் காரணமாக பாலனால் அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. தொடர்ந்து மர்ம நபர் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் பாலன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். பின்னர் கொலையாளி அங்கிருந்து தப்பினார்.

    இரவு நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலன் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணப்பிரச்சினை, முன்விரோதம் போன்ற காரணத்தால் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் கொலையாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
    • மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு  7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    மதுரை

    மதுரை விமான நிலையத் தில் துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளி–நாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள் நாட்டு விமான சேவை–யும் அளிக்கப்பட்டு வருகி–றது.

    குறிப்பாக மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங் கள் மட்டுமே தொடர்ந்து சேவைகைைள வழங்கி வருகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகளை ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங் களும், இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு சேவையையும் வழங்கி வந் தது.

    இதில் ஸ்பைஸ்ஜெட் நிறு–வனம் கொரோனாவிற்கு பிறகு வெளிநாட்டு சேவை மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது மீண் டும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமான சேவையை ெதாடங்கியுள் ளது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    மதுரையில் இருந்து சென்னை வழியாக கோவா செல்வதற்கு விமான சேவையை அளிக்க தற் போது ஸ்பைஸ்ஜெட் நிறுவ–னம் திட்டமிட்டுள்ளது. இன்று (8-ந்தேதி) முதல் ஸ்பைஸ்ஜெட்-2981 விமா–னம் மதுரையிலிருந்து மதி–யம் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று, சென் னை–யில் இருந்து கோவா–விற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் கோவாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட்-2983 விமானம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து, சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு மதுரை வந்த–டையும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் நாளை மறுநாள் (10-ந்தேதி) முதல் வருகிற 19-ந்தேதி வரை ஸ்பைஸ் ஜெட்-2705 விமானம் ஐத–ராபாத்தில் இருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப் பட்டு மதுரை விமான நிலை–யத்திற்கு பகல் 12.15 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையும். அதே போல் கொழும்புவி–லிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.

    பின்னர் மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்ற–டையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித் துள்ளது.

    • அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரையில் உள்ள எம்.கே.ஆர். அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கிலப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் அதிபகவான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிர மணியன் சிறப்புரையாற்றி னார். அறிவியல் கண்காட்சியில் இதயம் ராஜேந்திரன் ரெசிடென்சியல் பள்ளி முதலிடத்தை வென்று பரிசு பெற்றது. 2ம் இடத்தை வி.எம்.ஜே. பள்ளி பிடித்தது.

    இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவுக்கு பள்ளி தலைவர் ஜெமினி பால்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோமசுந்தரம், செயலாளர்-தாளாளர் காசிமணி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி துணைச்செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×