உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு நாள்

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது நினைவு நாளை முன்னிட்டு நடந்தது.
உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு நாள்
Published on

உசிலம்பட்டி

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தேவர் சிலை அருகே அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் நகர் செயலாளர் தங்க பாண்டியன், நகர் மன்ற தலைவி சகுந்தலா, நகர மன்ற உறுப்பினர்கள் செல்வி, வீரமணி, முருகன், வேட்டு ராஜேந்திரன், பழனிக்குமார், பொதுகுழு உறுப்பினர் சரவணகுமார், நகர் அவைத்தலைவர் சின்னன், துணைச் செயலாளர்கள் தேவி, ரமேஷ், நகர பொருளாளர் ஜெயபிரகாஷ், மகாலிங்கம் மற்றும் நெசவாளர் அணி சரவெடி சரவணன், ஒன்றிய செயலாளர் முருகன், அலெக்ஸ் பாண்டியன், நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com