சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு

சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.
சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜ்குமார் ஆலோசனையின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்பிரபாகரன், இனிய குமார் சதீஷ் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை, உணவு விடுதிகள், கறிக்கடை, கோழிக்கடை, பலசரக்கு கடைகளில் பாலிதீன் பயன்பாடு பற்றியும், பெட்டிக் கடைகளில் தடை செய்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் உள்ளதா? என்றும் கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com