என் மலர்
மதுரை
- கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செயத்னர்.
- 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரம், இரண்டு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கவுண்டன்பட்டி மயானம் அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டனர். அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கார்த்திகேயன் (வயது 25), தேனியை சேர்ந்த சஞ்சய் குமார் (19), முத்து (24) மற்றும் மதுரை மாவட் டம் எம்.கல்லுப்பட் டியை புதியவன் (24) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரம், இரண்டு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நிலவில் தரையிறங்க உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
- ஏற்பாடு–களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்திருந்தனர்.
உசிலம்பட்டி
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் அனுப்பப்பட்டது. இதன் அடுத்தடுத்த நகர்வு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு பெரும் புகழை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது உலகமே உற்றுநோக்கி காத் திருக்கும் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண் டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.
இந்த திட்டத்தின் வெற்றியை இந்தியாவின் அனைத்து மக்களும் பெருமையாக கருதும் நிலையில் இந்த திட்டம் வெற்றியடைய அனைவரும் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி தனியார் தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாம் கண்ட கன–வான சந்திரயான் திட்டம் இன்று வெற்றியடைய உள் ளதை நினைவு கூறும் விதமாக அப்துல் கலாம் வேடமணிந்த மாணவன் பேசினான்.
அப்போது அவன், என் னுடைய கனவு திட்டம் இன்று நிறைவேற உள்ளது, மாணவர்களும் கனவு காணுங்கள், எனது சந்திராயன் திட்டம் வெற்றியடைய நானும் பிராத்திக்கிறேன், மாணவ-மாணவிகளான நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொள்ள பள்ளியில் பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்தி–ருந்தனர்.
- ‘பூங்கொடி’ புதிய திரைப்படத்தின் பூமி பூஜை-நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
- அவர் இந்த படத்தை தயாரித்து வெளியிடுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.
மதுரை
மதுரையில் காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி அரங்கத்தில் பிரஷ்யா புரடெக்சன் சிவாஜி வழங்கும் மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள் "பூங் கொடி" திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு தயாரிப்பாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது.
திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் விளாங்குடி வீரமுத்து, திரைப்பட இயக்குனர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் திருமாறன்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், தொழிலதிபர் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பா–ளர்களாக கலந்து கொண்டு பட பூஜையினை குத்து–விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
விழாவில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி வாழ்த்தி பேசுகையில், சமீப காலங்களாக நல்ல படங்களுக்கு வேலை இல்லை. எல்லா இடங்களிலும் வளர்ந்து வரும் சாதியம், சினிமாவிலும் வந்துவிட்டது. எல்லா இயக்குனர்களும் சாதியம் இல்லாத நல்ல சமூகப் படங்களை கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் பூங் கொடி திரைப்படம் குழந் தையை பற்றி திரைப்படமா–கும். சமுதாயத்திற்கு நல்ல கருத்தினை வழங்க வேண் டும் என கூறினார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பேசுகையில், பல பேர் பார்த்து வியக்கின்ற தம்பி சிவாஜி ஆங்கிலமும் தெரியாமல், இந்தியும் தெரியாமல் டெல்லியில் அனைவரையும் தெரிந்த நபர். சிவாஜி ஆளுமைமிக்கவர். அவர் இந்த படத்தை தயாரித்து வெளியிடுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.
- ரூ.24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
- துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 வார்டு எண்.23 தாகூர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர்கள் ஓய்வு அறை, வார்டு எண்.24 செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் வீதி, ராஜாஜி நடுநிலைப் பள்ளியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ. கோ.தளபதி ஆகியோர் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மண்டலம் 2 வார்டு எண்.27 செல்லூர் அகிம்சாபுரம் சிவகாமி தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு மைய கட்டிடம், வார்டு எண்.35 அண்ணாநகர் நியூ எல்.ஐ.ஜி.காலனி சிறுவர் பூங்காவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகியவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் (பொ) காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர்சி வசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
- ரெயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.
மதுரை:
மதுரை கோட்டத்தில் 27 ரெயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலைகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். அதன் மூலம் வருமான அளவாக ரூ.81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ஈட்டியுள்ளனர்.
இதேபோல திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனையில் ரூ.28 லட்சத்து 23 ஆயிரத்து 71-ம், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 270, திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 405, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனையில் ரூ.15 லட்சத்து 43 ஆயிரத்து 975,
திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 297, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 655, தென்காசியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 210, ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனையில் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 650,
ராமேசுவரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 201, மணப்பாறையில் முறுக்கு விற்பனையில் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 10, மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 575, காரைக்குடியில் செட்டிநாடு நொறுக்குத் தீனிகள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 429, சாத்தூரில் சேவு விற்பனையில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 640 என உள்ளூர் சிறு குறு உற்பத்தியாளர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.
இதன் மூலம் மொத்தத்தில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 7 ஆயிரத்து 235 வருமானம் பெற்றுள்ள உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மரப் பாச்சி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கையில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள்,
கொடைக்கானல் ரோட்டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட்கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்குடியில் விவசாய விளைபொருட்கள், வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
ரெயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வெளிப்படை தன்மையுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெறப்படுகிறது.
இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவானது, குலுக்கள் முறையில் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரெயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.
இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரெயில் நிலையங்களில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாக அமைகிறது. உற்பத்தியாளர்கள் விண்ணப்பத்துடன் ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ரெயில்வே துறைக்கு செலுத்தினால் போதுமானது.
சிறிய ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்பாட்டிற்கேற்ப பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பயணிகள் ஆர்வமுடன் வாங்குவதாகவும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாகவும் உள்ளூர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மதுரை சோழவந்தானில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
- இந்த போட்டியில் குருவித்துறை அணி முதல் பரிசை பெற்றது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சங்கங்கோட்டை கிராமத்தார்கள் இளைஞர்கள் மற்றும் எஸ்.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், சங்கங்கோட்டை கிராம தலைவரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சிவா, சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற குருவித்துறை அணியினருக்கும், 2-ம் பரிசை மதுரை மாடக்குளம் அணியினருக்கும், 3-வது பரிசை திண்டுக்கல் மாவட்டம் மட்ட பாறை அணியினருக்கும் வழங்கப்பட்டது.
- மதுரை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள என். கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 48), விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன், மகள் உள்ளனர். பண விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில் விசாரணைக்காக ராமச்சந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து அவர் முதற்கட்ட விசாரணைக்கு சென்று வந்தார். அடுத்த கட்ட விசாரணைக்கும் வருமாறு போலீசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த ராமச்சந்திரன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையாபுரம் அருகே உள்ள சின்னுக்கம்பட்டியை சேர்ந்தவர் பாபுராஜ். இவரது மகன் பாரதிராஜா (29). குடும்ப பிரச்சினை காரணமாக இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாகையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- திருமங்கலம் அருகே கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் கிராமத்தில் அயன் அனஞ்ச பெருமாள் கல்யாண கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாரதனை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்து 500 கிலோ பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அன்னதானம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.
- பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது.
- அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள்.
மதுரையில் நேற்று முன்தினம் அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர்.
அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது. பல தொண்டர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்காமல் ஒருபுறம் அல்லாட, மறுபுறம் இதுபோன்ற நடந்ததுதான் வேதனையிலும் வேதனை என ஒரு தொண்டர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
மதியம் கடும்பசியால் சாம்பார், புளிசாதங்கள் பறந்தோட, பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருப்பதாவது:-
அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிதுப்படுத்தி பேசுகிறார்கள்.
மாநாட்டின் வெற்றியை யாரும் குறை சொல்ல முடியாததால், புளியோதரையின் தோல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிது படுத்துகிறார்கள் என்ற ஆர்.பி. உதயகுமார் விளக்கமும் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
- மதுரையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை பொழி வின் போது மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னேற் பாடுகள் தொடர்பாகவும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் தொடர் பாகவும் அனைத்துத் துறை அலுவர்களுடன் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநக ராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீரோட்ட பாதைகளை சரி செய்து தும்புகளில் சேர்ந்துள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்,
இடியும் நிலை யில் உள்ள கட்டிடங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் அருகே பொது மக்கள் அணுகாத வண்ணம் தேவை யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் துறை வாரியாக சிறப்பு குழுக்கள், சிறப்பு பணிகள் ஏற்படுத்தவும், மீட்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகள் தயார் நிலை யில் வைத்திருக்கவும், மழை யினால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்கும் வைக்கும் சிறப்பு முகாம்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளனவா என்று ஆய்வு செய்யவும், மலேரியா/டெங்கு காய்ச்சல் முதலிய பருவகால நோய்கள் பரவாத வண்ணம் தேவை யான முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
தனியார் மருத்துவமனை கள் பட்டியல் மற்றும் அம்மருத்துவமனையில் உள்ள மருந்து வகைகள் மற்றும் இதர வசதி விபரம் அடங்கிய பதிவேடு பரா மரிக்கப்பட வேண்டும். கன மழையில் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றிடவும், வெள்ளத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க வும் 24 x 7 கால அளவிலும் தயார் நிலையில் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும், கடந்த மழைக்காலங்களில் ஏற்கனவே பாதிப்படைந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது,
இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலத்தில், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாைலயோர வியாபாரிகளுக்கான கடனுதவி ஆலோசனை கூட்டம் நடந்தது.
- புதியதாக கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக் கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில் புதியதாக கடனுதவி பெறும் பயனாளி களுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் அனைத்து வங்கிகள் மூலம் கடன் தொகை விண்ணப்பித்த அன்றே வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 402 சாலை யோர வியாபாரிகள் பயன்பெற்று உள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதிக ளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிக ளுக்கும் அனைத்து வங்கி களும் கடனுதவி வழங்க வேண்டும். கடனுதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தாமல் விண்ணப் பித்த அன்றே கடனுதவி வழங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும். வங்கி கள் பொறுப்பு அலுவலர் களை நியமித்து கடனுதவி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. வருகிற 1-ந்தேதி சாலை யோர வியாபாரி களுக்கான சிறப்பு கடன் மேளா தமுக்கம் மைதா னத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன், சிவசுப்பிரமணியன், கோபால், சுகாதார ஆய்வாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து முன்னணி வங்கி மேலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாட்டுப் பண்ணை ஊழியர் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார்.
இந்த பண்ணையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த மாரிச்சாமி சிவரக்கோட்டை சூர்யா நகரில் குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார். கடந்த 18-ந்தேதி வேலைக்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால் மனைவி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாரிச்சாமி வேலைபார்த்த மாட்டுப் பண்ணையில் விசாரணை நடத்திய போலீசார் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும் விசாரணையில் அங்கு பால் கறவை செய்து வரும் 17 வயது சிறுவன் முன் விரோதத்தில் தனது கூட்டாளிகளுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் கொலைக்கு காரணமாக கருதப்படும் 17 வயது சிறுவன், 15 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கள்ளிக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.






