'பூங்கொடி' புதிய திரைப்படத்தின் பூமி பூஜை-நடிகர், நடிகைகள் தேர்வு

‘பூங்கொடி’ புதிய திரைப்படத்தின் பூமி பூஜை-நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர் இந்த படத்தை தயாரித்து வெளியிடுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.
மதுரை காளவாசலில் உள்ள தனியார் விடுதியில் பூங்கொடி புதிய திரைப்படத்தின் பூமி பூஜை விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.
மதுரை காளவாசலில் உள்ள தனியார் விடுதியில் பூங்கொடி புதிய திரைப்படத்தின் பூமி பூஜை விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

மதுரை

மதுரையில் காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி அரங்கத்தில் பிரஷ்யா புரடெக்சன் சிவாஜி வழங்கும் மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள் "பூங் கொடி" திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு தயாரிப்பாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது.

திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் விளாங்குடி வீரமுத்து, திரைப்பட இயக்குனர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன் மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் திருமாறன்ஜி, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், தொழிலதிபர் குருசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பா–ளர்களாக கலந்து கொண்டு பட பூஜையினை குத்து–விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

விழாவில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி வாழ்த்தி பேசுகையில், சமீப காலங்களாக நல்ல படங்களுக்கு வேலை இல்லை. எல்லா இடங்களிலும் வளர்ந்து வரும் சாதியம், சினிமாவிலும் வந்துவிட்டது. எல்லா இயக்குனர்களும் சாதியம் இல்லாத நல்ல சமூகப் படங்களை கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் பூங் கொடி திரைப்படம் குழந் தையை பற்றி திரைப்படமா–கும். சமுதாயத்திற்கு நல்ல கருத்தினை வழங்க வேண் டும் என கூறினார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பேசுகையில், பல பேர் பார்த்து வியக்கின்ற தம்பி சிவாஜி ஆங்கிலமும் தெரியாமல், இந்தியும் தெரியாமல் டெல்லியில் அனைவரையும் தெரிந்த நபர். சிவாஜி ஆளுமைமிக்கவர். அவர் இந்த படத்தை தயாரித்து வெளியிடுவது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com