search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை
    X

    உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி மாணவர்கள் சந்திராயன்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க பிரார்த்தனை செய்தனர்.

    உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை

    • நிலவில் தரையிறங்க உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
    • ஏற்பாடு–களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்திருந்தனர்.

    உசிலம்பட்டி

    நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் அனுப்பப்பட்டது. இதன் அடுத்தடுத்த நகர்வு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு பெரும் புகழை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது உலகமே உற்றுநோக்கி காத் திருக்கும் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண் டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

    இந்த திட்டத்தின் வெற்றியை இந்தியாவின் அனைத்து மக்களும் பெருமையாக கருதும் நிலையில் இந்த திட்டம் வெற்றியடைய அனைவரும் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி தனியார் தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாம் கண்ட கன–வான சந்திரயான் திட்டம் இன்று வெற்றியடைய உள் ளதை நினைவு கூறும் விதமாக அப்துல் கலாம் வேடமணிந்த மாணவன் பேசினான்.

    அப்போது அவன், என் னுடைய கனவு திட்டம் இன்று நிறைவேற உள்ளது, மாணவர்களும் கனவு காணுங்கள், எனது சந்திராயன் திட்டம் வெற்றியடைய நானும் பிராத்திக்கிறேன், மாணவ-மாணவிகளான நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொள்ள பள்ளியில் பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்தி–ருந்தனர்.

    Next Story
    ×