கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா

திருமங்கலம் அருகே கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.
கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் கிராமத்தில் அயன் அனஞ்ச பெருமாள் கல்யாண கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 116 இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாரதனை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் இருந்து 500 கிலோ பூக்கள் தூவப்பட்டது. பின்னர் அன்னதானம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com