search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொஞ்சம் புளியோதரை சிந்தியதை பெரிதுபடுத்துவதா?
    X

    கொஞ்சம் புளியோதரை சிந்தியதை பெரிதுபடுத்துவதா?

    • பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது.
    • அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள்.

    மதுரையில் நேற்று முன்தினம் அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.

    ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது. பல தொண்டர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்காமல் ஒருபுறம் அல்லாட, மறுபுறம் இதுபோன்ற நடந்ததுதான் வேதனையிலும் வேதனை என ஒரு தொண்டர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

    மதியம் கடும்பசியால் சாம்பார், புளிசாதங்கள் பறந்தோட, பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருப்பதாவது:-

    அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிதுப்படுத்தி பேசுகிறார்கள்.

    மாநாட்டின் வெற்றியை யாரும் குறை சொல்ல முடியாததால், புளியோதரையின் தோல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிது படுத்துகிறார்கள் என்ற ஆர்.பி. உதயகுமார் விளக்கமும் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

    Next Story
    ×