என் மலர்
மதுரை
- நீரிழிவு நோயை தடுக்க சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ேவண்டும்.
- மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வலியுறுத்தினர்.
மதுரை
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்தி ரியில் டாக்டர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. அதில் நீரிழிவு துறையின் முதுநிலை டாக்டர் மகேஷ் பாபு துறைத்தலைவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மருத்துவமனை நிர் வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் 10 கோடிக்கும் அதிக மான மக்களை நீரிழிவு நோய் பாதித் துள்ளது. ஆனாலும் நாட்டில் 50 சத வீதத்திற்கும் அதிகமான நோய் பாதிப் புகள் கண்டறியப்படாத நிலை உள்ளது. இது நீரிழிவு நோய் சுமையைக் குறைப்ப தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ஒவ்வொரு தனிநபரும் குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மர பணு ரீதியாக இந்த நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் அதன் விளை வுகளை புரிந்துகொண்டு தகுந்த நடவ டிக்கை எடுப்பதன் மூலம் அதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். நீரிழிவு நோயை முழுமையாக மதிப்பீடுவதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு பின், ஹீமோகுளோபின் ஏ1சி நிலை பரிசோதனை ஆகிய 3 வகையான ரத்த பரிசோதனைகள் முக்கியம்.
நீரிழிவு நோயை தடுக்க மக்கள் இள மையாக இருக்கும்போதே சுறுசுறுப் பான வாழ்க்கை முறையை மேற் கொள்ள வேண்டும். குறைந்தது 45 நிமிடங்க ளாவது நீச்சல், ஜாகிங் அல் லது நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்வது முக்கியம். யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது மிக ஆபத்தான நோய் காரணியாக இருக்கக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக் கும். நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள மக்கள் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள உணவு களை எடுத்துக் கொள்ள பழகுவது நல்லது.
சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி, 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை கள் மூலம் நீரிழிவு நோயை எந்த நிலையிலும் நிர்வகிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
- தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை:
மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் வரி ஏய்ப்புக்காக தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் சுங்கா இலாகாவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (வயது 42) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சல்லடை போட்டு சோதித்தனர். இதில் கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 930 மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- இந்த தகவலை மதுரை அரசு போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மதுரை மண்டல மேலாண் இயக்கு நர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), மதுரை போக்கு வரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு இன்று முதல் 11-ந்தேதி வரை 565 பேருந்து களும், பண்டிகைக்கு பின்பு 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை 485 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, பழனி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பேருந்து நிலையங்க ளிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச் செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணி களின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது.
இப்போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக் கானல், கொல்லம், மூணாறு, திருப்பூர், கோவை, மேட்டுப் பாளையம், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருசெந்தூர், நெய்வேலி, திருவண்ணா மலை, விழுப்புரம், சென்னை, மன்னார்குடி, கடலூர், நாகூர் மற்றும் நெடுந்தூர பயணிகள் சிரம மின்றி பயணிக்கவும், முன் பதிவில்லா பேருந்துக ளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரி சலையும், கால நேர விர யத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்கு வரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையலாம். மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏது வாக பயணிகளுக்கு வழி காட்டவும் சிறப்பு பேருந்து களை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலை யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேவகோட்டை ரூசோ நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
- மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
சிவகங்கை மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ரூசோ 25-வது நினைவு தினத்தையொட்டி தேவகோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர், ஐ.ஜே.கே. முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கட்சியினர் ஊர்வலமாக சென்று ரூசோ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வரதராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமாரோஸ் மார்ட்டீன், துணைத் தலைவர் இளவரசி ஜெரோம், மாநில போராட்ட குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மகளிரணி துணைச் செயலாளர் சகிலா புரோஸ், இளைஞரணி துணை செயலாளர் செந்தூர் பாண்டி, மதுரை மாநகர மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனடிக்ட், மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்குஒன்றிய அ.தி.மு.க.பூத்கமிட்டி ஆலோசனைக்கூட்டம் திருவாலவாயநல்லூர், சி.புதூர், சித்தாலங்குடி, கட்டக்குளம், குட்லாடம்பட்டி, செம்மினிப்பட்டி ஊராட்சிகளில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ கண்ணா, பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற, மாநில நிர்வாகி ராம கிருஷ்ணன், பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோ கரன், மாநில பேர வை இணை செயலாளர் வெற்றிவேல், மாநில பேரவை துணை செயலாளர் துரை.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்டதுணைச் செயலாளர் எம்.கே. மணிமாறன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
தி.மு.க.ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.
மக்களின் நலனில் அக்கறை கொண்டது அ.தி.மு.க.தான். முதல்- அமைச்சர் எல்லா குடும்ப தலைவிக்கும் மகளிர் உரிமைதொகை ஆயிரம் ரூபாய் கொடுக்கி றோம் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம் என்று ஏராளமான திட்டங்களை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் முடக்கி வைத்து விட்டார்கள்.
இனிவரும் தேர்தல் காலங்களில் கழக செய லாளர்கள் சிப்பாய்களா கவும் பாசறையினர் துணை ராணுவமாக நின்று எதிரி களுக்கு சிம்ம சொப்பனமாக இருப் பார்கள். ஒவ்வொரு பூத்கமிட்டியில் 19 பேர்களும், மகளிர்குழுவில் 25 பேரும், பாசறையினர் 25 பேரும் என்று 69 பேர்கள் ராணுவ சிப்பாய்களாக களம் இறங்கும்போது எந்த கொம்பாதி கொம்பனாலும் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஊரட்சி மன்ற தலைவர்கள் ஆலய மணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், துணைத்தலைவர் மாலிக், வி.எஸ்.பாண்டியன், பிரசன்னா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரந்தாமன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், பாலாஜி, சந்திரபோஸ், நாகமணி, மூர்த்தி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை மேடுபாலன் நன்றிகூறினார்.
- சென்னை - தூத்துக்குடி இடையே தீபாவளி சிறப்பு ெரயில் இயக்க தெற்கு ெரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
- சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
மதுரை
தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ெரயில் இயக்க தெற்கு ெரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சென்னை - தூத்துக்குடி சிறப்பு ெரயில் (06001) சென்னை எழும்பூரி ல் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - சென்னை சிறப்பு ெரயில் (06002) நவம்பர் 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் தூத்துக்குடியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ெரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்ப ரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ெரயில் நிலை யங்களில் நின்று செல்லும். இந்த ெரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுசந்தை தென் மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய ஆட்டுசந்தையாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆடுகள் வரை விற்பனையாவது வழக்கம்.
இந்தநிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சந்தை நண்பகல் 11 மணி வரை நடைபெற்றது. இதில் உள்ளூர் ஆடுகளை தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலில் இருந்தும் லாரிகளில் பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர்.
ஆடுகளை வாங்க மதுரை, விருதுநகர், சிவகாசி, கம்பம், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ராஜபாளையம், சிவகங்கை, காரைக்குடி பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாாிகள் வந்திருந்தனர். இதனால் சந்தை நடைபெற்ற ஆட்டுச்சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆடு விற்பனையாளர்கள் கூறுகையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
இந்தாண்டு தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். இதில் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதே போல் ஆடுகளின் விலையும் அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தீபாவளி சிறப்பு ஆட்டுச்சந்தையான இன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.
எனவே நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். தீபாவளியையொட்டி கடந்த சில வாரங்களாக ஆடுகளின் விலை அதிகரித்து வந்ததாகவும் தீபாவளி முடிந்த பிறகு ஆடுகளின் விலையும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கோழி விற்பனையும் நடைபெறுவது வழக்கம். ஆட்டுச்சந்தையின் வாசல் பகுதியில் ஏராளமான கோழி வியாபாரிகள் நாட்டு கோழிகள், சேவல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனையும் ஏராளமானோர் வாங்கி சென்றனர்.
- பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
- தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது.
மேலூர்:
மதுரை மாவட்ட விவசாயத்திற்கு வைகை அணை தண்ணீர் பிரதானமாக உள்ளது. வருடந்தோறும் அணையில் இருந்து பெரியார் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
பெரியார் கால்வாய் மூலம் மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் கடைமடை பகுதியான மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு போக விவசாயமே நடைபெற்று வருகிறது.
பெரியார் கால்வாய் தண்ணீரை நம்பி மேலூர் அருகே வெள்ளலூர் நாடு என அழைக்கப்படும் 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. வருடம் தோறும் இந்த பகுதிக்கு ஆகஸ்டு 15-ந்தேதி வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பாசன பரப்பளவும் பாதியாக குறைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டி உள்ளது.
இதையடுத்து தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது. வைகை பெரியாறு பாசன கால்வாய் மூலம் 180 நாட்கள் முறை வைத்து மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
பருவமழை காரணமாக அணையில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் மேலூர் பகுதியில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் கலெக்டர் மற்றும் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்காமல் கள்ளந்திரி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருப்பது மேலூர் பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்தும் மேலூர் பகுதிக்கும் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இன்று வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டை நத்தம்பட்டி, உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி உட்பட 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் மேலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடையடைப்பு, முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- மதுரையில் இன்று 4,200 லாரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
- ரூ.250 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மதுரை
நாடு முழுவதும் இயக்கப்படும் லாரிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விதிக்கப்படும் காலாண்டு வரி 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டதை கண்டித்தும், லாரிகள் இயக்கத்தின் போது சாலைகளில் போலீசார் எவ்வித விசாரணையும் இன்றி ஆன்லைன் மூலம் வழக்குப்பதிவு செய்வதை யும், அபராதம் விதிப்பதை யும் கைவிட வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மதுரையில் இன்று காலை 6 மணி முதல் லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்த வரை தினமும் 4,200 லாரிகள் அண்டை மாவட்டத்திற்கும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு களை எடுத்துச் சென்று வருகின்றன.
இதற்காக மதுரை நெல் பேட்டை, வடக்குவெளி வீதி, சிம்மக்கல், கீழ மாரட்டு வீதி உள்ளிட்ட இடங்களில் 230 புக்கிங் அலுவல கங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக அலுவல கங்களும் மூடப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் அனுப்பப்படாமல் புக்கிங் அலுவல கங்களில் தேங்கியுள்ளன.
இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சரக்குகளை ஏற்றி இறக்க முடியாதால் சுமார் ரூ. 250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்கள் தங்களது உணர்வுகளை வெளிப் படுத்துவதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் ஒரு நாள் மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள் ளோம். எனவே எங்களது நியாயமான கோரிக்கைக்கு உடனடியாக அரசு செவி சாய்த்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாத்தையா தெரிவித்துள்ளார்.
- வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.
- பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் மழை நீரோடு கலந்து அயன் பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
அத்துடன் பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீரும் கண்மாயில் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதாலும், மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து இருப்பதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.
இந்த நுரையானது அங்கு மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓடிகள் பெரிதும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று வெள்ளைக்கல் நுரை மலைபோல் எழுந்து விமான நிலையம் செல்லும் சாலை முழுவதும் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
அந்த தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் கழிவு நீரால் உருவான நுரையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 5 நாட்களாக இந்த சிரமத்தை சந்தித்து வரும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இனிமேலும் தாமதிக்காமல் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வெள்ளை கல்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊராட்சி மன்ற அலுவலகத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ முற்றுகையிட்டனர்.
- உசிலம்பட்டி சந்தை திடலில் உள்ள நூலகம் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கியுள்ளது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடலில் அமைந்துள்ள நூலகம் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் மழைநீர் தேங்கி பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. அய்யப்பனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை அடுத்து அய்யப்பன் எம்.எல்.ஏ. பல முறை நகராட்சி அதிகாரிகளிடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நூலகத் தில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையிலான நிர்வாகிகள் சந்தை திடலில் இருந்து நடைபயணமாக பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை முற்றியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
- மதுரை வெள்ளக்கல் பகுதியில் பிரதான குழாய் உடைந்து சாலை-வயல்களில் கழிவுநீர் ஓடுகிறது.
- துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு நீர் மதுரை 100-வது வார்டு பகுதியான வெள்ளக்கல் பகுதியில் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் கிடங்கிற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 500-க்கும் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக கழிவு நீர் வந்து சேருகிறது. ஆனால் ஒரு நாளில் 125 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே கழிவுநீரை இங்கு சுத்திகரிக்க முடியும். அதனால் உபரியாக உள்ள கழிவுநீர் கண்மாயில் திறந்து விடப்படுகிறது .
கடந்த ஒரு வாரமாக மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் மற்றும் கழிவுநீர் கலந்து வழக்கமான அளவை காட்டிலும் அதிகமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேருகிறது.
இந்த நிலையில் அதிக அழுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியேறும் கழிவு நீர் சாலை யிலும், வயல்களுக்குள்ளும் செல்கி றது. இதனால் இந்தப்பகுதி யில் செல்வோர் மற்றும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுநீர் வருவதால் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வயல்களில் நடை பெற்று வரும் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொது மக்கள் அந்தப்பகுதியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதிகளவில் திறந்து விடப்படும் கழிவு நீரால் அயன்பாப்பாகுடி கண்மாயில் நுரை பொங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் குழாய் உடைப்பை சரிசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்மாயில் கழிவுநீர் கலக்காதவாறு மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டுமென அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






