என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "main pipe"

    • மதுரை வெள்ளக்கல் பகுதியில் பிரதான குழாய் உடைந்து சாலை-வயல்களில் கழிவுநீர் ஓடுகிறது.
    • துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு நீர் மதுரை 100-வது வார்டு பகுதியான வெள்ளக்கல் பகுதியில் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் கிடங்கிற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 500-க்கும் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக கழிவு நீர் வந்து சேருகிறது. ஆனால் ஒரு நாளில் 125 மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே கழிவுநீரை இங்கு சுத்திகரிக்க முடியும். அதனால் உபரியாக உள்ள கழிவுநீர் கண்மாயில் திறந்து விடப்படுகிறது .

    கடந்த ஒரு வாரமாக மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் மற்றும் கழிவுநீர் கலந்து வழக்கமான அளவை காட்டிலும் அதிகமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேருகிறது.

    இந்த நிலையில் அதிக அழுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியேறும் கழிவு நீர் சாலை யிலும், வயல்களுக்குள்ளும் செல்கி றது. இதனால் இந்தப்பகுதி யில் செல்வோர் மற்றும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுநீர் வருவதால் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வயல்களில் நடை பெற்று வரும் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொது மக்கள் அந்தப்பகுதியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    அதிகளவில் திறந்து விடப்படும் கழிவு நீரால் அயன்பாப்பாகுடி கண்மாயில் நுரை பொங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் குழாய் உடைப்பை சரிசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கண்மாயில் கழிவுநீர் கலக்காதவாறு மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டுமென அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×