என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    கள்ளக்குறிச்சி:

    எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எறையூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி, அயன்குஞ்சரம். பாளையகுஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம்,எறையூர், வடகுறும்பூர், எஸ்.மலையனூர், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, எதலவாடி மற்றும் பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • மாயவன் அனைவரும் வரிசையாக நின்று கூழ் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.
    • கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ராவுத்தநல்லூரில் கோவில் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்தவர் மாயவன் (வயது50). அவர் அனைவரும் வரிசையாக நின்று கூழ் வாங்கிச் செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடை ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார். பதிலுக்கு மாயவன் தரப்பினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரவன், சக்திவேல், எம்.ஜி., சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலை மறைவான தனஞ்செழியன், பிரகலாதன், வீரமணி, மணி, சவுந்தர், தனுசு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே பாதுகாப்புக்காக போ லீசார் குவிக்கப்ப ட்டுள்ளனர்.

    • நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஊர்வளத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிட்டிபாபு வரவேற்றார். அரசின் பிரச்சார வாகனம் ஊரைச்சுற்றி பிரச்சாரம் செய்தது. இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மாணவர் சேர்க்கை முழக்கங்களை முழங்கினார். ஊர்வளத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் கடுமையான பீதி அடைந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நைனார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் சுமார் 15 கால்நடைகளை பட்டியில் வழக்கம்போல் அடைத்துள்ளார். இதனை அடுத்து நள்ளிரவில் பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் கடித்து கொடூரமாக கடித்ததில் 13 ஆடுகள் ரத்த காயத்துடன் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தன.

    இன்று காலையில் இதனைக் கண்ட ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், வனத்துறை வனவர் சத்தியாபிரியா, வனகாப்பளர் வேல்முருகன், பாபு, அனுமனந்தல் கால்நடை மருத்துவர் சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடுகளை கடித்த வனவிலங்கு எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை.
    • திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமை யிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விழுப்புரத்தில் கள ஆய்வு செய்கிறார். பெரும்பாலான அதிகாரிகள் அங்கு சென்று விட்டனர். அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் பேசி உங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் அசோகன் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
    • லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரணேஸ்வரி தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் அருகே மட்டப்பாறை சோதனைச் சாவடியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.      அப்போது போலீசாரை கண்டதும் 2 மோட்டார் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அப்போது போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது லாரி ட்யூபில் சுமார் 180 லிட்டர் கள்ளச்சாரயத்தை கடத்தி வந்தது தெரிந்தது.

    இதனை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்திலேயே அழித்தனர். தொடர்நது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்புகள் அடங்கிய விளம்பர பதா கையில் அமைக்க ப்பட்டிருந்தது.தனை பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகளின் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து துறைகளின் முக்கியமான அறிவிப்புகளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த தொகுப்பும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அறிவிப்புகள், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பு, கோயில் நிலங்கள் மீட்பு, மகளிருக்கான இலவச பஸ் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அறிவிப்பு, விவசாயி களுக்கான அறிவிப்பு, சாலை போக்குவரத்துக்கான அறிவிப்பு, பள்ளி கல்வி துறை அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியி டப்பட்ட அறிவிப்புகளின் புகைப்பட தொகுப்புகள் விளம்பர பதாகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டனர்.

    பார்வையிட்ட அமைச்சர் பொது மக்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைத்திருப்பதாக பாராட்டினார். இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பார்வை யிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சிவக்குமார், அனைத்து ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர்,

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டும், ஊராட்சிகளின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தேவைக்கு அதிகமாக வங்கி இருப்பு உள்ள ஊராட்சிகளின் மின் கட்டணத்தை வங்கி கணக்கிலிருந்து ஊராட்சி பொது நிதிக்கு மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,  அனைத்து ஊராட்சிகளுக்கும் புதிய குப்பை சேகரிக்கும் வண்டி மற்றும் டிராக்டர்கள் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளுக்கான பொருள் கூறு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் ஊராட்சிகளுக்கு புதியதாக வழங்கப்பட்ட டிராக்டர்களுக்கான டிரைவரை ஊராட்சி அளவில் நியமித்திட தலைவருக்கு அனுமதி வழங்க வேண்டும், அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கேட்ப தூய்மை காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்திட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் இருந்தது. மனுவினைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.சிரஞ்சீவி, செயலாளர் ஏ.திருமலை, பொருளாளர் பி.கலியன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர்
    • அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


    திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விட்டுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் லாலாதோப்பு தெருவை சேர்ந்த ராஜா (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர. அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
    • எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே எனது தாயை கண்டுபிடித்து தருமாறு மனுவில் கூறியுள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது.
    • வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்ந்த கனமழையால் காற்று கொட்டாய் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது . வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் பணம் 4 பவுன் நகை ,நிலத்தின் பத்திரம் மோட்டார் சைக்கிள், சைக்கிள், வெங்காய மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு2 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. இன்று காலை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதய சூரியன் எரிந்து போன வீட்டை நேரில் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு அரசு மூலம் புதிய வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணி மாறன் ,தாசில்தார் இந்திரா, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி பாண்டியன் ,துணைத் தலைவர் தன பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இவரது மகன் நேதாஜி (14). இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    • உடையனாச்சி கிராமத்தில் இருந்து புது உச்சிமேடு கிராமத்தை நோக்கி சென்ற டிராக்டர் நேதாஜி மீது மோதியது

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 43). இவரது மகன் நேதாஜி (14). இதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே விளை யாடிக் கொண்டிருந்தார். அப்போது உடையனாச்சி கிராமத்தில் இருந்து புது உச்சிமேடு கிராமத்தை நோக்கி சென்ற டிராக்டர் நேதாஜி மீது மோதியது.   ,இதி ல் பலத்த காயம் அடைந்த நேதாஜியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாண வன் நேதாஜி நேற்று இறந்து போனார்   இதுகுறித்து அவரது தாய் கொடிபவுனு கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×