திருநாவலூரில் 100 நாள் வேலை கேட்டு பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை

திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை. திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
திருநாவலூரில் 100 நாள் வேலை கேட்டு பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமை யிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விழுப்புரத்தில் கள ஆய்வு செய்கிறார். பெரும்பாலான அதிகாரிகள் அங்கு சென்று விட்டனர். அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் பேசி உங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் அசோகன் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com