என் மலர்
கள்ளக்குறிச்சி
- சந்திரா தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார்.
- அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சந்திரா (வயது 39) இவர் சம்பவத்தன்று நீர்த்தேக்க தொட்டி அருகே தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பிளாஸ்டிக் குடம் அருகில் உள்ள கிணற்றில் கிடந்துள்ளது. இது குறித்து கேட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த மொட்டையன் மகள் மலர், அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் லக்கிநாயக்கன்பட்டி-பவுஞ்சிபட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், போலீசை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது காவலர்கள் அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது லாரி டியூப்களில் 80 லிட்டர் சாராயத்தை அடைத்து, அதனை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், சாராயம் கடத்தி வந்த நபர் குரும்பலூரை சேர்ந்த வெள்ளையன் மகன் செல்வமணி என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செயது செல்வமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- ரிஷிவந்தியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் காவல் உதவி ஆய்வாளர் துர்காதேவி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரிஷிவந்தியம் காமராஜர் தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அப்துல்பரித்(60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 5 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.
- மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ராஜமாணிக்கத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள பாவந்தூரில் ஒரு வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்றனர். அப்போது சேவி மகன் ராஜமாணிக்கம்(55) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர்.
- வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பகுதியில் சிறுநாகலூர், கொட்டையூர், குடியநல்லூர், தியாகை, நின்னையூர், கூத்தக்குடி, வரஞ்சரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஆழ்வார் மலை காப்புக்காடு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கூத்தக்குடி காப்புக்காடு ஆகியவை சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர். இந்த பகுதி களில் குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள் , மயில்கள், மலை பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளுக்கு காட்டுப்பகு தியில் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் காட்டுப்பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் மீண்டும் காட்டுப் பகுதிக்குச் செல்லாமல் வயல் பகுதிகளிலேயே தங்கியும் தொடர்ந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்துகிறது.
சிறுநாகலூர், குடியநல்லூர், தியாகை, கூத்தக்குடி ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி திடீரென சாலையை கடந்து செல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வனவிலங்குகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதும் போது விபத்து ஏற்படுகிறது. இதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் வனவிலங்குகளின் மீது மோதுவதால் வனவிலங்குகள் பலத்த காயம் அடைகின்றன. இவ்வாறு அவ்வப்போது இந்த பகுதிகளில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு, ஏற்படும் விபத்து ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வனவிலங்குகள் வனப்பகுதியிலேயே வசிக்கும் விதமாக வனப்பகுதியின் நடுவே இயற்கை வனப்பகுதி அமைத்து அதில் வனவிலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கீடு செய்யவேண்டும். அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். மேலும் இந்த தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பினால் மட்டுமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது.
- போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரணடு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி மராத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏர்வாய்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 9 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் 206 ஆண்களும், 115 பெண்களும் என மொத்தம் 321 பேர் பங்கேற்றனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.4000-ம், 2-வது பரிசாக ரூ.3000-ம், 3-ம் பரிசாக ரூ.2000-ம், 4-ம் பரிசாக ரூ.1000-ம், 5-ம் பரிசாக ரூ.1000.ம், 6 மற்றும் 7-ம் பரிசாக ரூ.500-ம் வழங்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு நெகிழி பயன்பாடு தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது மீண்டும் மஞ்சள்பை இயக்கம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் இளையராஜா, ராம்குமார், பிரபாகரன், உடற்கல்வி இயக்குநர்கள் பாலாஜி, ஹரிகரன், பாலுசாமி சுற்றுச்சூழல்த்துறை அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
- மண் எடுத்துக் கொண்டு செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடப்பதை ஒட்டி வசதிகளை மேம்படுத்துவதற்காக அதே ஊரைச் சார்ந்த குணசேகரன் (வயசு 22) டிராக்டர் டிரைவர் ஆவார். அவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் இருந்து மண் எடுத்துக் கொண்டு அங்குள்ள சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .
இதில் டிரைவர் குணசேகரன் பலத்த காயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக குணசேகர் இறந்தார். தகவல் அறிந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணி தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார்.
- பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி (வயது 20). இவர் தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையி லிருந்து மோட்டார் சைக்கி ளை பெட்ரோல் போடுவதற்காக எடுத்துச் சென்றார். அப்போது பெட்ரோல் பங்க் எதிரே திரும்பிய போது அவருக்கு பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .
இதில் படுகாயம் அடைந்த மணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் தியாகதுருகம் அருகே பிரதிமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (49) மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருக்கோ வில் சித்திரைப்பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள கூவாகம் கிராமத்தில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க கூத்தாண்டவர் சித்திரைப்பெருவிழா கடந்த 18- ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து வருகிற மே மாதம் 1- ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், 2- ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைள் பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல் 3 - ந் தேதியன்று காலை திருத்தேர் வலம் வருதல், மாலையில் பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, குளியலறை, மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதற்கும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், கூடுதல் காவலர்களை காவல் பணியில் ஈடுபடுத்திடவும், கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள், பாதுகாப்பிற்காக அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநா ராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டா ட்சியர் யோகஜோதி, உதவி இயக்குநர்( ஊராட்சிகள்) ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர்.
- ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 தனி நபர்கள் கான்கிரீட் கட்டிடம் கட்டி கடைகள் வைத்திருந்தனர். 20 வருடங்களுக்கு மேலாக இருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி துறை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் கொண்டு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மணலூர்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியதுடன் அகற்றப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
- அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
- விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் மாண வர்கள் சேர்க்கை மற்றும் அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜு தலைமை தாங்கி பிரச்சார வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராதா கிருஷ்ணன், செலின்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாரதி வரவேற் றார். பிரச்சார வாகனம் விருகாவூர், பொரசக் குறிச்சி, ஒகையூர், ஈயனூர், அசகளத்தூர், முடியனுர் வழியாக சென்று குரூரில் முடிவடைந்தது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பலரும் கலந்து கொண்டு சேர்ப்போம், சேர்ப்போம், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம். ஒழிப்போம், ஒழிப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் 7 ஊராட்சிகளில் நேற்று ஒரே நாளில் 54 மாணவ- மாணவிகள் அரசு பள்ளி யில் சேர்க்கப்பட்டனர். இதில் எண்ணும் எழுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணத் தமிழன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகன், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இல்லம் தேடி கல்வி தன்னார் வலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் கண்டன உரையாற்றினார். இதில் வட்ட பொருளாளர் பர்க்கத்துன்னிஷா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, தீபா, ஜெயலட்சுமி, சண்முகபிரியா, பாரதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.






