search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காப்புக்காட்டில் வனவிலங்குகளுக்கு  தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்: மான்கள் தண்ணீர் தேடி வருவதால் விபத்து
    X

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி காப்புக் காட்டில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையை படத்தில் காணலாம்.

    காப்புக்காட்டில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்: மான்கள் தண்ணீர் தேடி வருவதால் விபத்து

    • காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர்.
    • வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் சிறுநாகலூர், கொட்டையூர், குடியநல்லூர், தியாகை, நின்னையூர், கூத்தக்குடி, வரஞ்சரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஆழ்வார் மலை காப்புக்காடு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கூத்தக்குடி காப்புக்காடு ஆகியவை சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர். இந்த பகுதி களில் குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள் , மயில்கள், மலை பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளுக்கு காட்டுப்பகு தியில் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் காட்டுப்பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் மீண்டும் காட்டுப் பகுதிக்குச் செல்லாமல் வயல் பகுதிகளிலேயே தங்கியும் தொடர்ந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்துகிறது.

    சிறுநாகலூர், குடியநல்லூர், தியாகை, கூத்தக்குடி ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி திடீரென சாலையை கடந்து செல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வனவிலங்குகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதும் போது விபத்து ஏற்படுகிறது. இதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் வனவிலங்குகளின் மீது மோதுவதால் வனவிலங்குகள் பலத்த காயம் அடைகின்றன. இவ்வாறு அவ்வப்போது இந்த பகுதிகளில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு, ஏற்படும் விபத்து ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வனவிலங்குகள் வனப்பகுதியிலேயே வசிக்கும் விதமாக வனப்பகுதியின் நடுவே இயற்கை வனப்பகுதி அமைத்து அதில் வனவிலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கீடு செய்யவேண்டும். அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். மேலும் இந்த தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பினால் மட்டுமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Next Story
    ×