search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூவாகம் திருவிழாவில்  பக்தர்கள் பாதுகாப்பிற்காக அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்படும்:  கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    கூவாகத்தில் சித்திரைப்பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்துகலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூவாகம் திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்படும்: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தகவல்

    • இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருக்கோ வில் சித்திரைப்பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள கூவாகம் கிராமத்தில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க கூத்தாண்டவர் சித்திரைப்பெருவிழா கடந்த 18- ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து வருகிற மே மாதம் 1- ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், 2- ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைள் பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல் 3 - ந் தேதியன்று காலை திருத்தேர் வலம் வருதல், மாலையில் பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, குளியலறை, மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதற்கும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், கூடுதல் காவலர்களை காவல் பணியில் ஈடுபடுத்திடவும், கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள், பாதுகாப்பிற்காக அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநா ராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டா ட்சியர் யோகஜோதி, உதவி இயக்குநர்( ஊராட்சிகள்) ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×