என் மலர்
கள்ளக்குறிச்சி
- திருநாவலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
- கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா அருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர்சுப்பிரமணி (வயது 60). விவசாயி. இவர் சில தினங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் ஊர் அருகே உள்ள மாம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காலையில் விவசாய நிலத்துக்கு சென்றபோது கிணற்றில் சுப்பிரமணி பிணமாக மிதப்ப தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர்.
தகவலின் பெயரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி மேகலை, பிரபாகரன், தனிபிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறை நிலை அதிகாரி சுரேஷ்பாபு தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது.
- ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபா ரிகள் அங்கு குவிந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலத்தில் வாரந்தோறும் வியாழக்கி ழமை வாரச்சந்தை நடை பெறுவது வழக்கம். இதில் காலை நேரத்தில் நடை பெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் சின்னசேலம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளான பாண்டியன் குப்பம், மூங்கில் பாடி, நயினார்பாளையம், குரால், கூகையூர், அம்மயா கரம், காள சமுத்திரம், வாசுதேவனூர் உள்ளிட்ட சேர்ந்த பொதுமக்கள் ஆடுகளை வியாபாரிகளிடமிருந்து வாங்கி சென்றனர். புரட்டாசி மாதம் என்ப தால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்த மாக இருந்தது.
இந்த நிலை யில், தற்போது புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதுடன், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை என்பதால், இன்று வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடந்தது. ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு க்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். வழக்கம்போல் வார சந்தையில் ஆடுகள் ஒன்று முதல் ரூ. 1.50 லட்சம் வரை ஆடு விற்பனை ஆவது வழக்கம். இப்பொழுது தீபாவளி பண்டிகை வருவதால் இன்று ஒரே நாளில் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
- தியாகதுருகம் நோக்கிச் சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது.
- இவரது மகன் ஜீவானந்தம் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 47) கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் தியாகதுருகம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வீரசோ ழபுரம் பிரிவு சாலையில் சாலையை கடந்த போது கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கிச் சென்ற கார் இவரது மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இவரது மகன் ஜீவானந்தம் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தியாகதுருகம் அருகே சிறுவல் கிராம த்தைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்திகேயன் (23) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
- இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
- ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துரைசாமி, வெங்கடேசன் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. மூத்த மகன் துரைசாமிக்கு சாதகமாக தாய் வள்ளியம்மாளும் இளைய மகன் வெங்கடேசனுக்கு சாதகமாக தந்தை ராமசாமி இருந்து வந்ததார். இந்நிலையில் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வள்ளியம்மாள் கணவர் ராமசாமியை அசிங்கமாக திட்டி தடியால் தாக்கி யதாக கூறப்படுகிறது.
இளைய மகன் வெங்கடே சனை அவரது அண்ணன் துரைசாமி மற்றும் துரைசாமி மனைவி அலமேலு ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கினர். இதனை பார்த்த துரைசாமியின் உறவினர் சுப்பிரமணி என்பவர் ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார். தலையில் காயம் ஏற்பட்ட ராமசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், வெங்கடேசன் சின்னசேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர்.இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சா வடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து உளுந்து ர்பேட்டை செங்கு றிச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 19-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியார் நிர்வாகம் வடமாநில ஆட்களைகொண்டு சுங்கச்சாவடியை இயக்கி வருவதால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டார்.
- அவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர்கள் திருமால், மியாட்மனோ மற்றும் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழு வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சாது (29) என்பவர் தனது வீட்டு பின்புறம் சாராயம் விற்றார். இதை பார்த்த போலீ சார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
மேலும் ரங்கப்பனூரை சேர்ந்த ராஜேந்திரன் (55), மல்லாபுரம் முத்துராமன் (45), புளியங்கோட்டை பழனியம்மாள் (45), புதுப்பேட்டை தனபாக்கியம் (70) ஆகியோர் தங்களது வீடுகளுக்கு பின்புறம் சாராயம் விற்றனர். உடன் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர்.
- வீட்டில் சாராயம் பதுக்கி விற்றனர்.
- போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே மல்லிகை ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 37), ரவி (46). இவர்கள் வீட்டில் பதுக்கி சாராயம் விற்றனர். உடனே போலீசார் அங்கு விரை ந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர். உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்த னர்.
- ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன.
- அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் அருகே உள்ள ஏராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . விவசாயி. இவர் ஆடுகளை மேய்த்து கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பி கொளஞ்சியப்பன் வீட்டு அருகே தனக்கு சொந்தமான 18 ஆடுகளை கட்டிவிட்டு ஆடு வெளியே செல்லாமல் இருக்க வலைகளை கட்டி நிறுத்தி விட்டு அருகில் உள்ளஅவருடைய வீட்டிற்கு வழக்கம்போல் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆடுகள் சத்தம் போட்டு உள்ளன.
சத்தத்தை கேட்டு வந்து பார்த்தபோது கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கார் அருகே சென்ற போது கார் வேகமாக சென்றுவிட்டது. பிறகு ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன. மீதமுள்ள மூன்று ஆடுகள் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்தபுகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து ஆடு திருடி சென்றவர்களை சின்ன சேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடமிருந்து 70 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மவுலியா பகுதியைச் சேர்ந்த சேக் அப்துல்லா (வயது 45) இவர் இன்று காலை திருநாவலூர் அருகே மடப்பட்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் வந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சேக் அப்துல்லாவை கையும் கலவுமாக பிடித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு அப்துல்லாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 70 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமிர்தலிங்கம் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.
- ஓடிவந்த பெற்றோர் அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 40). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அமிர்தலிங்கம் வீடு கட்டும் போது கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவரது மனைவி அஞ்சலாட்சம் இவர்களுக்கு அன்பரசன் (9) அறிவழகன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அமிர்தலிங்கம் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
அந்த வீட்டிற்கு தற்சமயம் மின்சார வயர் மூலம் மின் பல்ப் போட்டுள்ளார். இன்று காலை அந்த வீட்டிற்குள் அவரது பையன் அறிவழகன் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அறிவழகன் மின்சார வயர் மீது மிதித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அவனது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அறிவழகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அமிர்தலிங்கம் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது வீட்டில் மகன் மின்சாரம் தாக்கி பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
- தினமும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டமாக கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
அதன்படி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கட்டுவதற்கு கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தில் 20.58 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்ட மத்திய அரசு ரூ.195 கோடி, மாநில அரசு ரூ.186.76 கோடி, ஆக மொத்தம் ரூ.381.76 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன்படி கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பணிகள் நிறைவடைந்து பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 12- ந்தேதி கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 150 மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி படிப்பில் சேர்க்கை நடைபெற்று மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் மாவட்ட மருத்துவமனை மட்டும் கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் தாய் சேய் தனிப்பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, மனநிலை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், மருந்தகம் உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க போதிய இடவசதி இல்லாமலும், பணியி டங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், குடிநீர் வசதி பற்றாக்குறை உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மருத்துவ மனையில் உள் நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் அமைக்க போதிய இட வசதி இல்லாமல் சாய்தளம் அமைக்கப்பட்ட பகுதியில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவசர சிகிச்சை வார்டுகள், பிரசவம் பார்க்கும் வார்டுகள் ஆகியவற்றில் போதிய இடவசதி இல்லாமல் உள் நோயாளியாக மருத்துவம் பார்ப்பவர்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி பயன்பாட்டிற்கு வந்த நிலையில், 7- தளங்களை கொண்டு 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதில் உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி மாவட்ட மருத்துவமனையில் உபகரணங்கள் பொருத்தும் பணிகளை உடனடியாக விரைந்து முடித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடு வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2022 - 2023 ஆண்டு தாட்கோ மூலம் பெருமளவில் விவசாய தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்புஉடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க ரூ.1.50 லட்சம் திட்டத்தொகையில் 30 சதவீதம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளது.
மேலும் தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவை மாடு வாங்க நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தொகை ரூ. 1.50 லட்சத்தில் 30 சதவீதம்அதாவது ரூ.45 ஆயிரத்து மானிய தொகையும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்திற்குஇதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக இருப்பின்http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்றஇணையதள முகவரியில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, மாடு வாங்குபவர்களிடமிருந்து பச்சைத்தாலில் மாடுகளின் நிலையை குறிப்பிட்டு எழுதி வாங்க வேண்டும் மற்றும் கால்நடை மருத்துவரிடம் அறிக்கை ஆகிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.






