என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சின்னசேலம் அருகே சொத்து தகராறில் தந்தை-மகன் மீது தாக்குதல்
  X

  சின்னசேலம் அருகே சொத்து தகராறில் தந்தை-மகன் மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
  • ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துரைசாமி, வெங்கடேசன் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. மூத்த மகன் துரைசாமிக்கு சாதகமாக தாய் வள்ளியம்மாளும் இளைய மகன் வெங்கடேசனுக்கு சாதகமாக தந்தை ராமசாமி இருந்து வந்ததார். இந்நிலையில் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வள்ளியம்மாள் கணவர் ராமசாமியை அசிங்கமாக திட்டி தடியால் தாக்கி யதாக கூறப்படுகிறது.

  இளைய மகன் வெங்கடே சனை அவரது அண்ணன் துரைசாமி மற்றும் துரைசாமி மனைவி அலமேலு ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கினர். இதனை பார்த்த துரைசாமியின் உறவினர் சுப்பிரமணி என்பவர் ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார். தலையில் காயம் ஏற்பட்ட ராமசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், வெங்கடேசன் சின்னசேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர்.இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

  Next Story
  ×