என் மலர்
கள்ளக்குறிச்சி
- ராமாயி அம்மாள் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார்.
- அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ராமாயி அம்மாள். இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் ராமாயி அம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவி த்தனர்.
உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்து வீட்டை பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ½ கிலோ வெள்ளி தட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தொியவந்தது. இது குறித்து ராமாயிஅ ம்மாள்கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொரு ட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- பொது சொத்து 1.80 ஏக்கர் நிலம் ,பொதுக் கடன் ரூ. 16 லட்சம் இருக்கிறது.
- தாய் என்று கூட பாராமல் சுரேஷ்குமார் தனது மனைவி, உறவினருடன் சேர்ந்து தாக்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் இறந்து விட்டார். அவரது மனைவி வேலம்மாள் (வயது 60). இவர்களுக்கு மகள் செல்வி (33), மகன்கள் சுரேஷ்கு மார்(32), வேல்முருகன் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பொது சொத்து 1.80 ஏக்கர் நிலம் உள்ளது. பொதுக் கடன் ரூ. 16 லட்சம் இருக்கிறது. எனவே வேலம்மாள் சொத்து மற்றும் கடனையும் சரிசமமாக வாய் வழியாக பிரித்தார்.இதனை சுரேஷ்குமார் ஏற்க மறுத்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு வந்தது.
நேற்று வேல்முருகனுக்கும் , சுரேஷ்குமார், இவரது மனைவி கவுதமி, உறவினர் கவுதம் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.இதனை தடுக்க சென்ற தாய் வேலம்மாள் மீது தாய் என்று கூட பாராமல் சுரேஷ்குமார் தனது மனைவி, உறவினருடன் சேர்ந்து தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வேலம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து மகள்செ ல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷ்குமார், கவுதமி, கவுதம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கீழ்கு ப்பம் போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.
- வீட்டில் அனைவரும் விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
- வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று தீபாவளியை வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடி விட்டு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து அனைவரும் அதே பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருநாவலூர் தீயணைப்பு நிலை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்தது ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ அருகில் இருந்த வீட்டிற்கு பரவாமல் போராடி அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதில் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் எலக்ட்ரானிக் பொருள்கள் துணிமணிகள் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் அனை வரும் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்கரையான வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் காமராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீட்டில் உரிமையாளர் ரங்கநாதனுக்கு பணம் மற்றும் உணவுப் பொரு ள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் செய்தது குறிப்பி டத்தக்கது.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகே உள்ள அரசமரத்தடியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
- நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர்.
- சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தினசரி காய்கறி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்கு றிச்சி பகுதியைச் சேர்ந்த சடையம்பட்டு, மட்டிகை குறிச்சி, மல்லிகைபாடி, பொட்டியம், மாயம்பாடி, புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகளை தினமும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இதனை கள்ளக்குறிச்சி மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் வாங்கிச் செல்வது வழக்கம்.
தீபாவளி பண்டிகை யை ஒட்டி விவசாயிகள் வெங்காயம், தக்காளி, கத்தரி க்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட சுமார் 17 டன் காய்கறிகளை 140 விவசாயிகள் விற்பனை க்காக கொண்டு வந்தனர். இதனை கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். உழவர் சந்தையில் வழக்கமாக 8 முதல் 10 டன் காய்கறி மட்டுமே விற்ப னை நடைபெறும் நிலை யில் தீபாவளி பண்டிகையை யொட்டி சுமார் 17 டன் காய்கறிகள் சுமார் ரூ. 8 லட்சத்திற்கு வியாபாரம் நடை பெற்றதாக கூறப்படு கிறது.
- கள்ளக்குறிச்சி அருகே புதுவை மாநில மது கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு மலைக் கோட்டை பகுதியில் வெளி மாநில மதுபாட்டில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையி லான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற னர். அப்போது காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.காட்டுக் கொட்டாய் பகுதியில் சந்தேகப்படும்படியான 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சங்கரா புரம் அருகே ராவத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (எ) நவீன் (வயது 27), கள்ளக்குறிச்சி கரியப்பாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (35), மற்றும் நாமக்கல் பாப்பான் காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து காட்டுகொட்டகை பகுதியில் மறைத்து வைத்து தீபாவளி பண்டிகையை யொட்டி விற்பனை செய்த தும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2852 மது பாட்டில்கள் மற்றும் 3 கேன்களில் இருந்த 105 லிட்டர் விஷசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்தனர்.
- 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
- விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட–த்தில் அக்டோபர் 2022-ம் மாதத்திற்கான விவசாயி–கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 28-ந் தேதி (வெள்ளி–க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார்.
- இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கிஷோர் (13) என்ற மகன் உள்ளார். ஆசிரியர் சுரேஷ், பள்ளி இயங்கும் இடத்திற்கு அருகே வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு தன் குடும்பத்தை பார்க்க சென்று வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீபாவளியை தனது குடும்பத்துடன் கழிக்க சொந்த ஊரான சோழம் பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.
வாசுதேவனூர் அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியர் சுரேசை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .
- உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சிலநாட்க ளாக பலத்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதேபோல திருநாவ லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கன மழை நீடித்து வரு கிறது. செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் குப்பை கழிவோடு மழைநீர் தேங்கி நிற்பதில் மாணவர்கள் நடந்து செல்கிறார்கள் .
அதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பச்சிளம் குழந்தை களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற காலம் கடத்தா மல் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அதி காரிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கோரிக்கை வைக்கின்றனர்.
- சங்கராபுரம் அருகே லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கி ள்களையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் புதுப்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் மூட்டைகளுடன் வந்த 4 வாலிபர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை போட்டு விட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அவர்களை விடாமல் போலீசார் துரத்தி சென்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த செல்வமணி (வயது 21), விக்னேஷ் (18) என்பதும் தப்பி ஒடியவர்கள் சேராப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திக்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பதும் தெரிய வந்தது. இவர்கள் சேராப்பட்டு பகுதியில் இருந்து லாரி டியூப்களில் சாராயத்தை ஊற்றி பின்னர் அவற்றை சாக்குபையில் மூட்டையாக கட்டி கடத்தி வந்ததுள்ளனர். இதையடுத்து செல்வமணி, விக்னேசை கைது செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏழுமலை, கார்த்திக் 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டசெங்குறிச்சி சுங்கச்சா வடியில் 28-பணியாளர்கள் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 21-வது நாளாக சுங்கசாவடி பணியாளர்கள் கை கால்களை கயிறால் கட்டிப்போட்டு நூதன முறையில் செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் உடனடியாக மாவட்ட கலெக்டர், தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி உள்ளனர்.
- ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர்.
- சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலத்தில்கடந்த 15-ந் தேதி அன்று மகேஸ்வரி என்ற மூதாட்டியிடம் ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆன நிலையில் இதே சின்னசேலம் பகுதியை சேர்ந்த கோவைக்கண்ணி மூதாட்டி கழுத்தில் தாலிச் சங்கிலியை திருடி சென்றனர்.
இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து திருட்டு சம்பவம் சின்னசேலம் பகுதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் தீபாவளி பண்டிகை நெருங்கவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர். எனவே சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் காலை மாலை ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வங்கி பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






