என் மலர்
கள்ளக்குறிச்சி
- அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது.
- பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர்கள் வேட்டைக்காரன் (35), முனுசாமி மகன் மெய்யப்பன் (45) கூலி தொழிலாளர்களான இருவரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு ஒரு கொட்டகையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்யப்பன் வேட்டைக்காரனை திட்டி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து, மெய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது.
- வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி (வயது 36). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது. இதில் செல்வி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அக்கம்பக்கம் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக செல்வியை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதியில் ரோந்துபணி ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த சுரேந்திரன்(27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
- 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.
- அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரமேஷ்குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் மெல்டில்டா பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கடந்த 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, அம்பிகா தேவி, ஜெயலட்சுமி, லோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பிரியதர்ஷினியை பார்த்து இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறி பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிற
து. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் லோகேஸ்வரன் என்பவர் பிரியதர்ஷினி வீட்டின் மீது பாட்டில் வீசி பிரியதர்ஷினி மீது தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சின்னசேலம் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீர் வினியோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார்.
- போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளகுறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்க லம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (41). டேங்க் ஆபரேட்டரான இவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினி யோகம் செய்வதற்காக அங்குள்ள மோட்டார் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த வெங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் (வயது 45) என்பவர் குடிநீர் வினி யோகம் செய்வது தொடர்பாக சரவணனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ரிஷிவந்தியம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், டேங்க் ஆபரேட்டர் சரவணன் பொது மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதை கேட்ட என்னை ஆபாசமாக திட்டியதாக கூறியிருந்தார். அதன்அடிப்படையில் டேங்க் ஆபரேட்டர் சரவணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தியாகதுருகம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி, அக்.27-
தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (வயது 38) கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இதுகுறித்து வரஞசரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார்.
- சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையின் போது அந்த ஊரை சேர்ந்த பொது மக்களுக்குள் பணம் வசூல் செய்து அவர்களுக்கு வட்டிக்கு பணம் ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் கடந்த தீபாவளி அன்று பணம் ஏலம் விடும் பொழுது சிவக்குமார் கணக்கு வழக்குகளை கேட்டார். அப்போது அதே ஊரை சேர்ந்த பூபதி, முருகேசன், சின்னதுரை, முத்துசாமி ஆகியோர் ஒன்று சேர்ந்து சிவக்குமாரிடம் தகராறு செய்தனர்.
பின்னர் சிவகுமாரின் வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டி அவரை தாக்கினர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் சண்டையை விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி சிவகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் விசாரிக்கிறார்கள்.
- அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
- இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவர் தனியார் பஸ்சில் 10 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று பகல் 2 மணி அளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்திலி ஆர் .கே. எஸ். கல்லூரி அருகே அடையாளம் தெரியாத நபர் பஸ்சை வழிமறித்து அவருடைய இரு சக்கர வாகனத்தை பஸ் முன்னாடி நிறுத்தினார்.
பின்னர் டிரைவரை பார்த்து நீ பஸ் சாலையில் ஓட்டுறியா? இல்லை வானத்தில் ஓட்டுகிறாயா? என ஆபாசமாக திட்டி கல்லால் பஸ்சின் முன் பகுதி கண்ணாடியை உடைத்துசேதப்படுத்தினார். இதனால் டிரைவர் சுரேஷ் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கை பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்.
- சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள 78 கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் அமுதவல்லி (வயது 20) என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நூல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17-ந் தேதி வீட்டுக்கு வந்த அவர் 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசில் அமுத வள்ளியின் அண்ணன் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து மாயமான அமுதவல்லியை தேடி வருகின்றனர்.
அதேபோல் உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவில் வசித்து வருபவர் கேசவன் (44). இவருடைய மகள் ரஞ்சனி (21) பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. இது குறித்தும் உளுந்தூர்பேட்டை போலீசில் கேசவன் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண் செல்வம் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றார். உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் பிளஸ்-2 படித்து வரும் சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில், சிறுமியின் தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் பள்ளி மாணவர்கள் 3பேர் மாயமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிைய ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர்.
- கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை, வயல்வெளி, வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக சிவபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (32), குளத்தூரை சேர்ந்த பட்டம்மாள் (50), விரியூரை சேர்ந்த ஜான் கென்னடி (36), குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (22), ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த வேலு (50) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
- ஆறுமுகம் ஆகாஷ், ராஜதுரை ஆகியோர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தனர்.
- சங்கரின் மனைவி என் வீட்டு முன்னே பட்டாசு வைக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்( வயது 29) இவரது வீட்டு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகாஷ், ராஜதுரை ஆகியோர் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தனர். பட்டாசின் சத்தத்தால் எரிச்சல் அடைந்த சங்கரின் மனைவி என் வீட்டு முன்னே பட்டாசு வைக்காதீர்கள் வேறு எங்கேயாவது போய்வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சங்கரின் மனைவியை ஆபாசமாக திட்டி கல்லால் அடித்ததில் சங்கரின் மனைவிக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சங்கரின் மனைவி சேர்க்கப்பட்டார் .இதுகு றித்து கச்சிராயபளையம் போலீசில் சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும் வழக்கை பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரஞ்சித் குமார் என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
- மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகள் சவிதா இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (32) என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்ப டுகிறது. சவிதா என்பவர் ரஞ்சித்குமாருக்கு ஏற்கனவே ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சம் ஆக மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று துருகம் சாலையில் பஞ்சர் கடை அருகே சவிதா வந்து கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித்குமார் வழிமறித்து ரூ.30 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டு அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூற ப்படுகிறது. இதுகுறித்து சவிதா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






