என் மலர்
கள்ளக்குறிச்சி
- சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணை யில் உள்ள ஆற்று பாசனம் மற்றும் முதன்மை கால்வாய் பாசனம் மூலம் சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின்மூலம் சுமார் 78-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணையில் நீர்பிடிப்பு பரப்பில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து போய் உள்ளதாலும் அதிகளவு நீரை மழை காலத்தில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்த போதிலும் மிக குறைந்த அளவு நீரை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது. இதனால் ஒரு போக விளைச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது. இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கல்வராயன்மலை பகுதியில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 42.2 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடி என்ப தால் இன்னும் அணை நிரம்ப 3.8 அடி மட்டுமே உள்ளது. கோமுகி அணை முன்கூட்டியே நிரம்பி வருவதால் பருவ மழையின் போது அடிக்கடி அணை திறக்கவும், அதனால் கோமுகி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி 360 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் 220 கனஅடி உபரி நீர் இன்று வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரை யோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள தால் பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு:- கள்ளக்குறிச்சியில் 20, தியாகதுருகம் 30, விருகாவூர் 25, சின்னசேலம் 12, அரியலூர் 38, கடுவனூர் 46, கலையநல்லூர் 28, கீழ்பாடி 7, மூரார்பாளையம் 37, மூங்கில்துறைப்பட்டு 27, ரிஷிவந்தியம் 15, சூளாங்குறிச்சி 46, வடசிறுவலூர் 32, மாடாம்பூணடி 9, மணலூரபேடடை 39, திருக்கோவிலூர் 21, திருப்பாலபந்தல் 15, வேங்கூர் 14, ஆதூர் 7, எறையூர் 6, ஊ.கீரனூர் 13 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடுவனூர் மற்றும் சூளாங்குறிச்சியில் 46 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக எறையூரில் 6 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 487 மி.மீட்டராகவும், சராசரி 23.20 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது.
- சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 60 லிட்டர் சாரயத்தை 2 லாரி ட்யூபில் கடத்தி வந்த ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் பகுதியில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தின் பேரில் எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லியம்பாளையம் ரயில்வே பெரிய பாலம் அருகே 60 லிட்டர் சாரயத்தை 2 லாரி ட்யூபில் கடத்தி வந்த ஐயப்பனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பெரிய சாமியை சின்னசேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இன்று 32-வது நாளாக நீடித்தது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை செ ங்குத்து சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து தினமும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தலைகீழாக நின்று தண்ணீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் எங்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். நாங்கள் 13 ஆண்டுகள் வேலை செய்து இருக்கிறோம். அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்றனர்.
இந்த போராட்டம் இன்று 32-வது நாளாக நீடித்தது. அப்போது ஆதிவாசி வேடமிட்டு சுதந்திரம் வாங்கியும் இந்த தமிழகத்தில் நமக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை என்ப தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து உள்ளனர்.
- முனியம்மாள் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார்.
- போலீசார் விரைந்து சென்று முனியம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருவண்ணாமலை மாவட்டம், பெரும்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது தாய் முனியம்மாள் (வயது87). இவர் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார். அப்போது அந்த பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் முனியம்மாள் தனியாக இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக முனியம்மாள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
அதிர்ச்சி அடைந்த அவர் உயிர்பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டார். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று முனிய ம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியபாலம் அருகே முனியம்மாள் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது. உடலை கைப்ப ற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
- சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற டாடா இண்டிகா வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த காரில் ஹான்ஸ் 20 கிராம் அளவு கொண்ட 2250 பாக்கெட்டில் 45 கிலோவும், கூல்லிப் 9 கிராம் அளவு உள்ள 720 பாக்கெட்டில் 6.480 கிலோவும் விமல் பாக்கு 2.8 கிராம் அளவுள்ள 4500 பாக்கெட்டில் 12.600 கிலோவும் வி.ஐ. பாக்கு 8.4 கிராம் அளவுள்ள 1800 பாக்கெட்டில் 18.00 கிலோவும் உள்ள போதை பொருட்களை இருந்தது.
விசாரணையில் சிதம்பரம் கூளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 29) அதே கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி (வயது 47) ஆகியோர் 65 கிலோ குட்காவை கடத்தி வந்துள்ளனர்.அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் சேலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரிடத்தில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்துள்ளனர் .என்பது தெரிய வந்துள்ளது. போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
இதில் சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்
- கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:
பெங்களூரை சேர்ந்தவர் ஜன்னபாவா (வயது 30). அவரது மனைவி பிரியா (23). இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜன்னபாஷ்வா தனது மனைவியுடன் பணிபுரியும் தினேஷ், புபாலன், நிஷ்த்தா ஆகியோருடன் சேர்ந்து புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்டனர்.காரை ஜன்னபாஷ்வா ஓட்டினார். கோயமுத்தூர் வழியே வந்த கார் சின்ன சேலத்தில் உள்ள சேலம் சென்னை நெடுஞ்சாலையில் கொங்கு திருமண மண்டபம் அருகே உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர் பின்னர் அடிபட்டவர்களை சின்ன சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொசப்பாடி ஏரிக்கரை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது லாரி டியூப்பில் 55 லிட்டர் சாராயம் வைத்திருந்தார். விசாரணையில் அவர், புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(23) என்பதும், சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
- அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதால் சின்னசேலம் பகுதிகளான நயினார் பாளையம், குரால், தோட்டப்பாடி, பாக்கம்பா டி, எலவடி, கல்லாநத்தம், வாசுதேவணூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது காலையில் தொடங்கிய தொடர் மழையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் அவதிக்கு உள்ளானார்கள்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது சில தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது. இந்த மழையினால் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். மழையின் காரணமாக சின்ன சேலத்தில் உள்ள முக்கிய சாலைகளான சேலம் மெயின் ரோடு, கடைவீதி, புதிய பேருந்து நிலையம், கூகையூர் ரோடு என அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
- ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ராஜ்குமார் (வயது 32) இவர் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் கள்ளக்கு றிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி சந்திரா (51) இவர் நேற்று தனது வீட்டிற்கு முன்பு 2 ஆடுகளை மேச்சலுக்காக கட்டியி ருந்தார். இதில் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் இந்நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி போலீசார் நீலமங்கலம் அருகே வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஆடு எடுத்து வந்த வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை முன்பு இருந்த மோட்டார் சைக்கிள் திருடி கொண்டு, தென்கீரனூரில் ஆட்டையும் திருடி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
- ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் கெடிலம் கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முய ன்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தை சேர்ந்த கூத்தன் மகன் ரகுராமன் (40) என்பதும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரகுராமனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (40) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார். இதைபார்த்த தயாளன் எதற்காக எனது நிலத்தில் டிராக்டரை ஓட்டிச் செல்கிறாய் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருள் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருள் மீது சங்கராபுரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
- உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
- தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் ரேஷன் அரிசி ஏற்றிக் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அரிசி ஏற்றுக் கொண்டிருந்த மினி வேன் 840 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனபால் (27 ) உரிமையாளர் சின்னதுரை (43) ஆகிய 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு வசம் ஒப்படைக்க உள்ளனர்.






