என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன.
    • அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரம்ம குண்டம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்காந்தி அவரது மகன் தர்ஷன் (வயது 7). சஞ்சீவ்காந்தியின் வீட்டின் அருகே நடந்த திருமண நிகழ்ச்சிக்காக அலங்கார மின் விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. அங்கு தர்ஷன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவன் பரிதாபமாக இறந்தான். இதை அறிந்து ஓடி வந்த அவனது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து வடபொ ன்பரப்பி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கச்சிராயபாளையம் அருகே 20 லிட்டர் பாக்கெட் சாராயத்துடன் பெண் கைது செய்யப்பட்டார்.
    • நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறைசாலையில் அடைக்கப்ப ட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய தனிபிரிவு போலீசாருக்கு க.அலம்பலம் பகுதியில் சாராய விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்தி ரன், எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்தி ரன் ஆகியோர் தலை மையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, விஜயா (வயது 40) என்ற பெண் அவரது வீட்டில் 20 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பதுக்கி இருப்பது தெரியவந்தது. உடனே சாராய பாக்கெட்டு களை பறிமுதல் செய்து விஜயாவை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறை ச்சாலையில் அடைக்கப்ப ட்டார்.

    • திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் தலைமை யில் சப்- இன்ஸ்பெ க்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு போலீசார் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரட்ட ங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடினர்.

    அங்கு விரைந்த போலீ சார் மடக்கி பிடித்து அனை வரையும் கைதுசெய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கன், மணிகண்டன், செல்வம், முருகன், ராஜா, சிவனேசன் சிவராமன், குணா, பாபு, ஏழுமலை என தெரிய வந்தது. அவர்க ளிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர். அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதார் அட்டை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 35 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

    ஆகையால் ஆதார் அட்டை நகலை எரித்து எங்களுக்கு குடியுரிமை தேவையில்லை கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட பிடிப்பு தொகை வழங்க வேண்டும் என கோஷத்தில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
    • 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின்பேரில் புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் மேற்பார்வையில் சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ், பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாலசேகர், பாசில், குணதீபன்(பயிற்சி) ஆகியோரை கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து 300 அடி தூரத்துக்குள் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். தொடர்ந்து எஸ்.வி. பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

    • 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது.
    • 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது. இதனால் தியாகதுருகம், பெரிய மாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனா ர்பாளையம், பழைய சிறுவங்கூர், சூளாங்குறி ச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பா ளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

    இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ரகுராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி மின் அளவு மற்றும் உணர்த்தி ஓர்வு அதிகாரிகள் விரைந்து வந்து மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதனை தொடர்ந்து இரவு சுமார் 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்படாத மி ன்வெட்டால் தியாகதுருகம் பகுதி பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

    • சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.
    • மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் ஆலத்தூரை சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். சங்கராபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த சங்கராபுரம் மாணவரின் பையை, ஆலத்தூர் மாணவர் பிடுங்கியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த சங்கராபுரம் மாணவரை, ஆலத்தூர் மாணவர் ஆபாசமாக திட்டி, கையில் அணிந்திருந்த சில்வர் வளையத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் மாணவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலத்தூர் மாணவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின் கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.
    • மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், மின் விதிகள் மற்றும் மேலாண்மைக் கழிவு விதிகளின்கீழ், அங்கீகரி க்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுபு துப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும். மேலும், நடுவண்மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள், மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீக ரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மின்னனு கழிவு விதிகளின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவுப் பொருட்களைச் சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் -கழிவுகளைபி ரித்தெடுப்போர் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

    முறைசாரா வர்த்தகம் அறிவியல்பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின் கழிவுகளை எரித்தல் பேன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது மக்களின் குறைகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனவே, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளைஅறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனிதஆரோக்கியத்திற்கும், சுற்று ச்சூழலுக்கும் எதிர்ம றையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, மின்னனு கழிவு மேலாண்மை விதிகளின்படி, மின் பொருள் உற்பத்தியாளர்கள்,தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செ ய்வோர், பிரித்தெடுப்போர்மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோர் மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ்தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்க ப்படும். மேலும், அந்நிறு வனத்தைமூடிவிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைஅல்லது ரூ.1 இலட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட பொது மக்கள் சட்டவி ரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின் கழிவுகளை அங்கீகரி க்கப்பட்ட பிரித்தெ டுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும். மேலும்,பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்கத்தைத் தவிர்த்து மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்று செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது
    • ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் காசி இவருடைய மகன் சுப்பிரமணி இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. வீட்டின் பணி 80 சதவீதம் முடிந்த நிலையில் அந்த வீட்டிற்கு ஒயரிங் வேலை செய்வதற்கு அதே பகுதியில் வசிக்கும் அஜித் வயது 28 என்ற இளைஞர் வீட்டு உரிமையாளரை அணுகி உள்ளார். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி அஜித் ஒயரிங் வேலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் சுப்பிரமணி வீட்டிற்கு குடிபோதையில் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த சுப்பிரமணியின் மனைவி ராணியிடம் உன் வீட்டுக்காரன் எங்கே அவனை இங்கே வர சொல்லு எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ராணி என் கணவர் வீட்டில் இல்லை என கூறியுள்ளார். பின்பு ராணியை கீழே தள்ளி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. ராணி வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த மளிகை கடைக்கு தப்பித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சுப்பிரமணியிடம் ராணி நடந்த விஷயத்தை கூறியுள்ளார். பின்னர் அஜித்திடம் என் மனைவியை எதற்காக அடித்தார் என கேட்ட சுப்பிரமணியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இச் சம்பவத்தால் ராணிக்கு காயம் ஏற்பட்டது இதனால் ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்பு சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று ராணி புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த விசாரணை கொண்டு வருகின்றனர்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.
    • மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். இதன் காரணமாக சின்ன சேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல் எலியத்தூர், பங்காரம், வினை தீர்த்தாபுரம், தச்சூர், தென்கீரனூர், உலககாத்தான், மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர்பாளையம் பெத்தானூர், ஈசந்தை, நாட்டார்மங்கலம், இந்தலி, லட்சியம், காட்டநத்தல், மேலூர், எரவார், பொற்படாகுறிச்சி, விளம்பவூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    • சின்ன சேலத்தில் ஆட்டோவை எரித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரதிஷ் (22) என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ராகேஷ் (20) என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதியான தீபாவளி அன்று பட்டாசு வாங்குவதற்காக ரதிஷும், ராகேஷும் சின்னசேலம் பேரூராட்சி எதிரே நின்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்த கனி என்கின்ற கனியழகன் (20) என்கின்ற விஜயபுரத்தை சேர்ந்த ஆனந்த் (20) என்பவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்பு இரு தரப்பி னரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

    பின்னர் இரு தரப்பினரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இதை மனதில் வைத்துக் கொண்டு மதியம் ஒரு மணிக்கு ரதிஷ் வீட்டிற்கு நேரடியாக கனியும் ஆனந்தும் சென்றதாக கூறப்படுகிறது. ஆட்டோவில் படுத்திருந்த ராகேஷ் என்பவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சண்டையை விளக்க வந்த ரதிஷையும் தாக்க முயன்று ள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உயிருக்கு பயந்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ரதிஷ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து நேற்று கனி மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார்.
    • சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் மேலும் 4 துணை ஆட்சியர்கள் பதவி உயர்வு குறித்தும் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த விஜய்பாபு சேலம் ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சேலம் ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்து வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அரசா ணையில் கூறப்ப ட்டுள்ளது.

    ×