என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் (35) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் ஜவுளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் (58) என்பவர் சாராயம் விற்றதாக அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • திருநாவலூர் அருகே மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு காவலர் மனோகரன் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது கிழக்கு மருதூர் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்றபோது, கிழக்கு மருதுறையை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), ஜெகதீசன் (44) சோமாசிபாலயம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) ஆகிய 3 பேரும் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த 3 மாட்டு வண்டிகளை போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலியானார்.
    • கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்துவாய் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.அவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகன் திவாகர் (வயது 19). இவர் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு மாலையில் கல்லூரியில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது அதே கல்லூரியை சேர்ந்த பஸ் ஒன்று கல்லூரி வளாகத்திற்கு உள்ளே நுழைந்த போது மாணவர் திவாகர் எதிர்பாராத விதமாக பஸ் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் திவாகரன் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    • அக்கினி குரால் கிராமத்திற்கு அருகே உள்ள கூகையூர் கிராமத்திற்கு மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றார்.
    • இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் மதுமதி (வயது 22) இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அக்கினி என்பவருடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மதுமதி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அக்கினி குரால் கிராமத்திற்கு அருகே உள்ள கூகையூர் கிராமத்திற்கு மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றார். அப்பொழுது பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக அக்கினி சென்ற இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கனவாய்காடு தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 53) இவர் தனது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் அண்ணன் சம்பத் ஆகியோருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டின் வளைய காப்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து சம்பவத்தன்று சென்னையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை சம்பத் ஓட்டினார். அப்போது தியாகதுருகம் அருகே திம்மலை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வந்த சிவப்பு நிற கார் இவரது காரை முந்தி சென்ற போது இவரது காரின் பக்கவாட்டில் மோதியது.

    இதனால் கட்டுப்பாட்டை இழந்த இவரது கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த ரவி, இவரது மனைவி திரிபுரசுந்தரி மற்றும் டிரைவர் சம்பத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சம்பத் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலியானார்.
    • சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மாதவசேரியை சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவரது கணவனர் வேலு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்து போனார். இவர்களது மகன் முத்துசாமி (23) இவர் கச்சிராய பாளையத்திலிருந்து சின்ன சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.கணியாமூர் அருகே உள்ள உணவகம் அருகே சென்ற போது கள்ளக்குறிச்சி யில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேசன் என்பவர் காரை ஓட்டி வந்தார். இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முத்து சாமியின் உடலை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன முத்துசாமியின் தாய் அமுதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செல்லதுரை எனக்கும் ஷாலினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி மறுத்ததாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல். அவரது மகள் ஷாலினி (வயது 20) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஷாலினி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு செல்லதுரை எனக்கும் ஷாலினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த மாதம் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லது ரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நி லையில் ஷாலினிக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பு யாஸ்வின் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக சளி இருந்து வந்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை இறந்து போனது. இது குறித்து விளம்பார் கிராம நிர்வாக அலுவலர் அலமு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ரிஷிவந்தியம் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (வயது 19), ரிஷிவந்தியத்தை சேர்ந்த சாமுண்டி மகன் விஜயகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் கா.பாளையம் கிராமத்தில் உள்ள அமைச்சரம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,122 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    • ரம்யா டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
    • தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் குரு குமார் (வயது 26). இவர் சென்னையில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (25) டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற தாகவும், இது நாள் வரை குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ரம்யா கள்ளக்குறிச்சி அருகே மாமானந்தல் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் குரு குமார் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மனைவியிடம் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவியை தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குரு குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டி இருப்பது தெரியவந்தது. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குரு குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபாவளி சீட்டு பணம் மாதம் 20 ஆயிரம் வீதம் 11 மாதம் கட்டியுள்ளார்.
    • பணம் கொடுக்க மறுத்து தகாத முறையில் செந்தில்குமரன் திட்டி உள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு துரோபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்ஆபிரகாம் பிரகாஷ் (வயது50). இவர் பின்னல்வாடி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் செந்தில்குமரன் என்பவரிடம் மாதமாதம் தீபாவளி சீட்டு பணம் மாதம் 20 ஆயிரம் வீதம் 11 மாதம் கட்டியுள்ளார்.

    தற்போது பணத்தை வீட்டிற்கு சென்று கேட்டபோது பணம் கொடுக்க மறுத்து தகாத முறையில் செந்தில்குமரன் திட்டி உள்ளார்.அதிர்ச்சி அடைந்த ஆபிரகாம் பிரகாஷ் உளுந்தூர்பேட்ைட போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். 

    • சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார்.
    • போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75) இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து எலவனுசூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் எலவனாசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதுவும் அறியாத சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரான கண்ணனை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் ரகசியமாக விற்று வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் சின்னசேலம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது அமைய கரம் அருகே உள்ள தென் பொன் பரப்பி பகுதியில் உள்ள மளிகை கடையில் போலீ சார் சோதனை மேற் கொண்டனர். அப்போது ஹான்ஸ் பாக்கெட்டு கள் இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் கடையில் இருந்த 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதே போல் வாசுதேவனூர் கிரா மத்தில் உள்ள ஈஸ்வரன் மளிகை கடையில் சோதனை செய்தபோது 7ஹான்ஸ் பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கோவிந்த ராஜ், ஈஸ்வரன் ஆகி யோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×