என் மலர்
கள்ளக்குறிச்சி
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே அரியலூர் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரியலூர், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, ஏந்தல், மரூர், கடம்பூர், ஓடியந்தல், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மைய னூர், ஜெ. சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளைய னார்குப்பம், ஜம்படை, திரு வரங்கம், கள்ளிப்பாடி, ரெட்டி யார்பாளையம், கரையாம்பா ளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.
- தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் வட்டம் பிரிவிடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் கார்த்தி (வயது 28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் கெடிலம் கூட்டுரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காட்டு செல்லூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் என்பவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். எதிர்பாராதவிதமாக கார்த்திக் இருசக்கர வாகனமும், எதிரே வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார்த்தி மற்றும் எதிரே வந்த தினேஷ், மற்றும் சிபிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், சிபிராஜ் சென்னை மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்ட னர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இளம் அறிவியல், புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
12-ம் வகுப்பில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே கணினி அறிவியல், புள்ளியில் பாட பிரிவிலும், வணிகவியல் படித்தவர்கள் மட்டுமே இளம் வணிகவியல்(பி. காம்.) பாடப்பிரிவிலும், பொருளியல் படித்தவர்கள் மட்டுமே எக்கனாமிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர முடியும். ஆகையால் இதுவரை பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தவறவிட்ட மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது. இத்தகவலை ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.
- சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலேரியில் சக்கரபாணி (வயது 35) என்பவர் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அரசராம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த நாகமணி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்து மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.
- கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு தொகையாகவும் மற்றும் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவைகளை பெற்றும் வந்தனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கடுவனூர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தான் பயிர் கடன் தரப்படும் என்றும் கூறி விவசாயிகளை அலை க்கழிப்பது மட்டுமல்லாமல் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பயிர் கடன் தர மறுப்பதை கண்டித்தும், உடனடியாக பயிர் கடன் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதயடுத்துவிவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
- பகண்டைகூட்டுரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஏந்தல் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மனைவி வீரம்மாள் (65), முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (47) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை கைது செய்து, தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதோ தனியார் பாலி டெக்னிக் என்ற இடத்தில் இளைஞர் இரவு ஒரு மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் அவர் மீது மோதி தலைக்கு ப்பராக கவிழ்ந்தது மோதிய விபத்தில் பெயர் ஊர் தெரியாத இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல்அறிந்த திரு நாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக கல்லூரி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாகன விபத்தில் சிக்கியவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகி றார்கள்.
- ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.
- ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலை இயற்கை அழகுடன் விளங்கும் மலைப் பகுதி. இங்கு பெரியார், மேகம், செருக்கலூர் என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள். விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை ரசிப்பது வழக்கம் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும், வெள்ளி மலையில் உள்ள பள்ளத்தாக்கில் படகு சவாரி செய்வதற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வருபவர்கள் நீர்வீ ழ்ச்சிகளில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. "பொதுமக்கள் நலன் கருதி நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக கல்வராயன் பகுதியில் பெய்ந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக குளிக்க தடை விதித்த போதிலும் அந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீர்வீழ்ச்சி பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைபகுதி சாலையில் வரும் பொழுது மிகவும் ஜாக்கிரதையாகவும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மழைக்காலம் என்பதால் சாலைகளில் பாறைகள் புரண்டு வரும் என்பதால் கவனமுடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மழைக்காலம் முடிந்த பிறகும் நீர்வீ ழ்ச்சிகளில் குளிப்பதற்கும் மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வசந்த் என்பவர் பி.காம் முடித்துவிட்டு அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- ஆனால் பணத்தை திரும்பத் தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஆனந்தி (வயது 36). இவரும் கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்த பெரியசாமி மகள் சாந்தகுமாரி ஆகிய இருவரும் தோழிகளாக பழகி வந்தனர். அப்போது ஆனந்தியின் தம்பி வசந்த் என்பவர் பி.காம் முடித்துவிட்டு அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சாந்தகுமாரி தனது கணவர் தேவதாஸ் கள்ளக்குறி ச்சியில் வருவாய் ஆய்வாள ராக பணிபு ரிவதாகவும், அவரிடம் கூறி வசந்த்துக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என ஆனந்தியிடம் கூறியுள்ளார்.
அதனை கேட்ட ஆனந்தி 2 தவணைகளாக தலா ரூ. 5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். இந்தநிலையில் நீண்ட நாட்களாக வேலை வாங்கிதரவில்லை. இதனால் ஆனந்தி கொடுத்த பணத்தை திருப்பிதருமாறு கேட்டார். ஆனால் பணத்தை திரும்பத் தராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையி ல் சாந்தகுமாரி திடீரென தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளிடம் ரூ.62.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
- பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயி. இவர் சங்கராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட விவசாய பொருட்களை நேரடி கொள்முதல் செய்தார். அவ்வாறு கொள்முதல் செய்த பொருட்களை மொத்தமாக தஞ்சை மாவட்டம், புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்தார். அதற்குண்டான பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.
சம்பவத்தன்று சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் ஆனந்த் என்பவர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வந்த போது போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சங்கராபுரம் பகுதிகளில் விவசாயிகளிடம் சுமார் 8000 நெல் மற்றும் எள் மூட்டைகள் கொள்முதல் செய்து அதற்குண்டான பணம் சுமார் ரூ.62,64,628 தராமல் ஏமாற்றி வந்தது தெரியவருகிறது. மேலும் அவர் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி விட்டுள்ளனர். இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் இதே போன்று விவசாயிகளிடம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரி யவருகிறது. போலீசார் ஆனந்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
- 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் குமார் (வயது 23), இவரது தம்பி ரட்சக நாதன் (19), எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (19) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து ரூ. 20,000 மதிப்பிலான ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய எறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் பெர்ணான்டஸ், காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்த செல்வமணி ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யபபட்டனர்.
- புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ் என்பவர் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் குப்பன் (45) தொழிலாளி. இவரிடம் புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ் என்பவர் திடீரென தகராறில் ஈடுபட்டனர். மேலும் சதீஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து குப்பனை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சதீஷ், சிலம்பரசன், கோகுல், தமிழ்ச்செல்வன், முருகன் ஆகிய 5 பேர் மீது வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து அதில் கோகுல், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






