என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
    • நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேலப்பழங்கூரை சேர்ந்த வர் நாராயணன். இவரது மனைவி அய்யம்மாள் (40). இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் அய்ய ம்மாள் மற்றும் பிள்ளை களை ஆபாச வார்த்தை களால் திட்டியதோடு கூரை வீட்டுக்கும் தீ வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைத்தார். பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன் மீது ரிஷிவந்தி யம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
    • லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டைகூட்டுரோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மையனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 26) மற்றும் அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (25) ஆகிய 2 பேரும் அரசராம்பட்டிலிருந்து மையனூர் காப்புக்காட்டு அருகே உள்ள சுரேஷ் என்பவரின் கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்களைப் பிடித்து சோதனை செய்தபோது ஒரு லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுகா மட்டிகை கிராமத்தில் அனுமதி பெறாமல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வருவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர். அப்போது லாரி ஒன்று அதிவேகமா வந்தது. போலீசார் உடனடியாக அந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மன்னார்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை அனுமதி இன்றி லாரியில் ஜல்லி கடத்தியது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர். 

    • இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர்.
    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரோடுபரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஷம்சுதீன்(வயது30). இவர் வடசேமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செல்போனில் அழைப்பு வந்ததால், மேலேரி தனியார் கல்லூரி அருகில் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு ஷம்சுதீன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். 

    அப்போது சங்கரா புரத்தில் இருந்து கள்ளக்கு றிச்சி நோக்கி இருசக்கர வாகனத்த்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஷம்சுதீனிடம் செல்போனை தருமாறு கேட்டனர். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஷம்சுதீனின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் கிழித்து விட்டு அவரிடம் இருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    படுகாயம் அடைந்த சம்சுதீனை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து செல்போன்களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  மேலும் சங்கராபுரம் சீர்பாத நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(62). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் முனியம்மாளிடம் பேச்சு கொடுத்து அவரது கழுத்தில் கிடந்த ரூ.60 ஆயிரம் மதிப்புடைய 3 பவுன் சங்கிலியை பறித்து க்கொண்டு, தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்து றைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • மாரிமுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோத 10 பவுன் தங்க நகையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அனுமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. அவரது கவுசல்யா. சில வருடங்களுக்கு முன்பு தென்தொரசனூரில் வசிக்கும் மாரிமுத்துவின் தங்கை நல்லம்மாள் மகனுக்கு தன்னுடைய மகள் கவுசல்யாவை திருமணம் செய்து வைத்ததார். திருமணத்திற்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னசேலம் அருகே உள்ள அமையாகாரம் பாலாஜி கல்வியியல் கல்லூரியில் வீட்டிலிருந்தே பயிற்சி ஆசிரியர் வகுப்பை படித்து வந்தார்.

    மேற்படி படிப்பின் பயிற்சி காலம் கடந்த ஜூலை மாதம் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. பயிற்சி இடம் நைனார்பாளையத்தில் உள்ள பள்ளியில் பயிற்சி பெற்று வந்ததார். தென்தொரசனூரிலிருந்து நைனார்பாளையத்திற்கு தினமும் வந்து செல்ல கவுசல்யாவிற்கு சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அனுமந்தல்குப்பத்தில் வசிக்கும் தன்னுடைய தந்தை மாரிமுத்துவின் வீட்டிலிருந்து நைனா ர்பாளையத்தில் உள்ள பள்ளியில் தினமும் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்துள்ளார்.

    கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கவுசல்யா தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பிறகு மாரிமுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோத 10 பவுன் தங்க நகையை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் நேற்று கீழ்க்குப்பம் போலீஸ் நிலையத்தில் மகள் கவுசல்யா மீது மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே லாரியில் கடத்திய 13.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேசன் அரிசி கடத்தல் மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி டோல்கேட்டில் கீழ்குப்பம் போலீஸ் தனிப்பிரிவுசப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் இன்று அதிகாலை செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் 13.5 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த ரேசன் அரிசியினை காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார். பின்னர் அவரை கைது செய்து, அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கடத்தப்பட்ட ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும், ராஜேந்திரனையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறுகையில் கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
    • கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலமுறை தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் தாசில்தார் கண்டுகொள்ளவில்லை.

    என்றாலும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். எனவே இதுபற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி (21) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (21), குளத்தூர் மாரிமுத்து (49) அரசம்பட்டு செல்வி (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே டிராக்டர் மோதி முதியவர் பலியானார்.
    • சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரி (75). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சோழம்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சேமபாளையம் தனியார் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்த மாரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரத்தை சேர்ந்த சந்துரு என்பவர் மீது சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் 2 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கல்வராயன்மலை பெருமாநத்தம் பகுதியை சேர்ந்த அருண் (20), வரதராஜ் (26) என்பதும், கல்வராயன்மலை பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பர்வதம் என்பவரை தேடி வருகின்றனர்.

    • மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 44) மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தனது மனைவி சந்திரா மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் செந்தில் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சந்திரா தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அதே பகுதியில் உள்ள உணவகத்திற்கு வேலைக்குச் சென்றார். மீண்டும் வேலை முடித்துவிட்டு அவரது மனைவி சந்திரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் முன்பக்க மரக் கதவில் இருந்த பூட்டு உடைத்து வீட்டின் உள்ளே இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பட்டம் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என ஐகோர்ட் அனுமதி
    • பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினர். கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

    இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

    ×