என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே அனுமதி பெறாமல் ஜல்லி ஏற்றி சென்ற லாரி பறிமுதல்
- இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகா மட்டிகை கிராமத்தில் அனுமதி பெறாமல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வருவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர். அப்போது லாரி ஒன்று அதிவேகமா வந்தது. போலீசார் உடனடியாக அந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மன்னார்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை அனுமதி இன்றி லாரியில் ஜல்லி கடத்தியது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர்.
Next Story






