என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மணிகண்டன் கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரை சே ர்ந்தவர் பள்ளிப்பட்டான். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியா ற்றி வந்தார். இவர் அதே ஊரில் உள்ள விவசாயிக்கு சொந்தமான வயலில் பழுதான மின் மோட்டா ரை பழுது நீக்கும் பணியில் ஈடுப ட்டிருந்தார். அப்போது மின்கம்ப த்தில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டதாக கூறப்படு கிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொ ன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
    • மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சியில் இருந்து லாலாபேட்டை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் ரிஷிவந்தியம் அருகே மேல தேவனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பஸ்சில் வந்த கோமாளூர் - சேரந்தாங்கல் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். ஓடும் பஸ்சில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருகிராமங்களை சேர்ந்த மாண வர்கள் 13 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியா கதுருகம் மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தமிழக அரசின் டெங்கு காய்ச்சல்,மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 தினக்கூலியாக வழங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் .
    • நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 55) இவருக்கு செல்வி (28) என்ற மகள் உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 5 வருடங்களாக தாய் பார்வதியுடன் வசித்து வருவதாகவும் செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் திடீரென்று செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாண்டிச்சேரியில் உள்ள அரசு பொது ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இருந்தார். இது குறித்து தாய் பார்வதி கொடுத்த புகாரின் ேபரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜா, சர்மிளா இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
    • தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ராஜாவின் தாய்க்கும் சர்மிளாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் சர்மிளா கோபித்துக் கொண்டு இந்திலியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வர தன் சொந்தக்காரர்கள் சித்ரா, பிரபு, அலமேலு, தெய்வமணி ஆகியோருடன் ராஜா சென்றனர். இதனால் சர்மிளாவின் தந்தை சந்திரசேகருக்கும் மருமகன் ராஜா தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டது. அப்போது அவர்கள் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக சந்திரசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த்(30), கார்த்திகேயன்(42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் குச்சி காட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த ஆண்டி(25) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 40), தையல் தொழிலாளி. இவருக்கு செந்தாமரை(35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். செந்தாமரை அந்த பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பகண்டை கூட்டுரோடு போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • அரசா ங்கத்திற்கு சொந்தமான பொறம்போக்கு இடத்தில் பா.ஜ.க. கட்சி கொடி கம்பத்தை நட்டு கொடி ஏற்ற முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், வடிவேல், தகரை கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன், கச்சிராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்முருகன், ஆகியோர் கல்லாநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசா ங்கத்திற்கு சொந்தமான பொறம்போக்கு இடத்தில் பா.ஜ.க. கட்சி கொடி கம்பத்தை நட்டு கொடி ஏற்ற முயற்சி செய்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பா.ஜ.க. கட்சி கொடி ஏற்றும் போது தடுத்து நிறுத்தி கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நிர்வாகிகள் பேர் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார்.
    • இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், இவரது மனைவி அமுதா (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அமுதா மீண்டும் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பரிசோதனை செய்தார். அதில் பெண் சிசு என தெரிய வந்ததால் கருவை கலைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை யொட்டி அந்த மருந்தகத்தில் கருவை கலைப்ப தற்கான மாத்திரைகள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அமுதவிற்கு ரத்தப்போக்கு இருந்ததாகவும் இதனால் அருகே உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற அவர் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் மருந்தகத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறதா? கருக்கலைப்பு செய்யப்பட்டதா? கருக்கலைப்பு செய்வதற்கான உபகரண ங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  இதில் கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கி உள்ளார். இவர் ஐ.டி.ஐ மட்டும் முடித்துள்ளதாகவும், முறையாக அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும், மேலும் கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது. இதேபோல் விருகாவூர், மலைக்கோட்டாலம், இந்திலி ஆகிய பகுதிகளில் இதேபோல் மருந்தகத்திற்குச் சென்று மருத்துவம் பார்ப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர். வடிவேல் மீது கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம் ஆகிய காவல் நிலையங்களில் கருக்கலைப்பு செய்ததாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 80) கூலித் தொழிலாளி, இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த குமார் (வயது40) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அய்யாசாமி மற்றும் குமார் ஆகியோர் சாலையில் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சம்பவ இடத்தில் இறந்து போனார். குமார் லேசான காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் இவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
    • விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள டீ தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் சக்திவேல் (வயது 54). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தே.மு.தி.க. மனம்பூண்டி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன் (48) என்பவர் சக்திவேலை மடக்கி பிடிக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் ஆத்திரமடைந்த சக்திவேல், வெங்கடேசனை கத்தியால் தலையில் வெட்டி இருக்கிறார். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

    உடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபு பொதுமக்கள் துணையுடன் சக்திவேலை மடக்கி பிடித்தார். அப்போது பிரபுவுக்கும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. ஒரு வழியாக மடக்கி பிடிக்கப்பட்ட சக்திவேலிடம் இருந்து கத்தியை பிடுங்கினர். பின்னர் அரக ண்டநல்லூர் போலீசில் சக்திவேல் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு சேர்மேன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அரியபெருமானூர் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    கிராமபுறங்களிலுள்ள பொதுமக்கள் அனைவரும் கழிவறையை பயன்படுத்தி கிராமத்தையும், சுற்றுபுறத்தை யும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கூறினார். மேலும் தூய்மை நடைபயணம் குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி யர்கள், பொதுமக்களின் தூய்மை நடைபயணம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பின்னர் பள்ளியை அடைந்தனர். முன்னதாக அரிய பெருமானூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தின மாலா, உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், நாகராஜன் மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×