என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே தகரை கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது தகரை கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி செல்வி என்பவர் தனது வீட்டில் சாராயம் விற்றார். அவரிடம் இருந்து 5 லிட்டர் ட சாராயத்தை கைப்பற்றினர். அவர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    • பள்ளி வாகனம், ஏமப்பேர் ரவுண்டானாவில் மோதி கவிழ்ந்துள்ளது.
    • மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. பகலவன் நேரில் ஆய்வு

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் அருகே தனியார் பள்ளி வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 மாணவர்களை ஏற்றச் சென்ற அந்த வாகனம், ஏமப்பேர் ரவுண்டானாவில் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

    இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி. பகலவன் ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தனர்.

    • 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் 28 பேரை தவிர மற்ற ஊழியர்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.
    • அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ஜவுளிகுப்பம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் சங்கரா புரம் தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்து றை அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் நரசிம்மஜோதி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்தனர்.

    அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்டோருடன் வந்த அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பச்சையப்பன் அதிகாரிகளை திட்டி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின்பேரில் பச்சையப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சார் ஆய்வாளர் சுஜாதா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் தனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • 5 லிட்டர் சாராய த்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான காவலர்கள் மூக்கனூர் கிராம பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள சாத்தனூர் அணை வாய்க்கால் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டி ருந்த, அரசம்பட்டை சேர்ந்த லட்சுமி (65) என்ப வரை கைது செய்து, அவரிட மிருந்து 5 லிட்டர் சாராய த்தை பறிமுதல் செய்தனர்.

    • இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி 15 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த சில தினங்களாகவே சின்னசேலம் பகுதியில் மழை முற்றிலும் நின்றது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேரம் ஆக ஆக கருமேகம் சூழ்ந்து தூரல் மழை பொழிய ஆரம்பித்தது.

    இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சின்ன சேலத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பஸ் நிலையம், விஜயபுரம், காந்தி நகர், திரு வி க நகர், உள்ளிட்ட பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெரு க்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள். மழையினால் நேற்று இரவு அதிக அளவில் பணி இல்லாமல் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17-ந் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் போலீசாரின் பஸ் மற்றும் பள்ளி பஸ் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர்

    இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சின்னசேலம் அருகே ஏரவார் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ், (வயது28), வேல்முருகன் (29) ஆகியோர் கலவரத்தின் போது போலீசாரின் வாகனத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    அதேபோல் கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த அவிஷ் ஸ்ரீ முகந்த் (20) பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கியதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 பேரையும் கைது செய்து, கள்ளக்குறிச்சி2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரத்தில் உள்ள கடைகளில் சிலர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடைகளை மீறி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமை யிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சங்கராபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.

    சோதனையில் கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, அரசு ஆண்கள் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 5 பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 5 கடைகளின் உரிமையா ளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமை யாளர்களை எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன், பாசில், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் குணதீபன், ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சேட்டு உறவினர் ஒருவரின் கூரை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரை சேர்ந்தவர் சேட்டு (வயது31) டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே ஊரில் உள்ள உறவினர் ஒருவரின் கூரை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்த சேட்டு தற்காலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது.
    • சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே திருக்கனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். விவசாயி, இவரது மகள்கள் ஆசியா (வயது 17) 12- ஆம் வகுப்பு, சிவாஷினி (15) 10- ஆம் வகுப்பு, ஆகியோர் மூரார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் ஆசியா, சிவாஷினி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் பள்ளி முடிந்து மாலை மூரார்பாளையத்தில் இருந்து அரசு பஸ்ஸில் ஆலத்தூர் வந்து இறங்கினர்.

    அங்கிருந்து திருக்க னங்கூர் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் சிவன் கோவில் எதிரே இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (21) என்பவர் ஆசியாவிடம் உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. அதற்கு ஆசியா ஏன் திட்டுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற அய்யனார் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி தாக்கினர்.

    அப்போது உடன் இருந்த சிவாஷினி ஏன் எனது அக்காவை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 17 வயதுடைய வாலிபர் சிவாஷினியை திட்டி தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை சம்பவ இடத்தில் இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் (18) என்பவர் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆசியா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யனார் மற்றும் நீலகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 17 வயது வாலிபர் இளஞ்சிரார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் நீலகண்டன் என்பவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாழ்வந்தான்குப்பம் இருந்து திம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது.
    • பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிஉளுந்தூர்பேட்டை இருந்து கள்ளக்குறிச்சியில் செல்லும்போது வாழ்வந்தான்குப்பம் இருந்துதிம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது இந்த பையினை மழவராயனூரை சேர்ந்த குமார், காட்டு நெமிலியை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் எடுத்து வந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது. பையினை மீட்டு கொடுத்த 2 பேரையும் பல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்வருகின்ற 25-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்துமனுக்கள் அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×