என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளை திட்டி தாக்குதல்: 3 பேர் கைது
- உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது.
- சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே திருக்கனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். விவசாயி, இவரது மகள்கள் ஆசியா (வயது 17) 12- ஆம் வகுப்பு, சிவாஷினி (15) 10- ஆம் வகுப்பு, ஆகியோர் மூரார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் ஆசியா, சிவாஷினி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் பள்ளி முடிந்து மாலை மூரார்பாளையத்தில் இருந்து அரசு பஸ்ஸில் ஆலத்தூர் வந்து இறங்கினர்.
அங்கிருந்து திருக்க னங்கூர் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் சிவன் கோவில் எதிரே இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (21) என்பவர் ஆசியாவிடம் உன் தங்கையை ஒழுங்காக வீட்டிற்கு கூட்டிகிட்டு போ என அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. அதற்கு ஆசியா ஏன் திட்டுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற அய்யனார் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி தாக்கினர்.
அப்போது உடன் இருந்த சிவாஷினி ஏன் எனது அக்காவை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு 17 வயதுடைய வாலிபர் சிவாஷினியை திட்டி தாக்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவாஷினியின் அண்ணன் கருணாகரனை சம்பவ இடத்தில் இருந்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் (18) என்பவர் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசியா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யனார் மற்றும் நீலகண்டன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 17 வயது வாலிபர் இளஞ்சிரார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் நீலகண்டன் என்பவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.






