சின்னசேலம் அருகே ஆஸ்பத்திரியில் பெண் சாவு

செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் .நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்
சின்னசேலம் அருகே  ஆஸ்பத்திரியில் பெண் சாவு
Published on

கள்ளக்குறிச்சி:  

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 55) இவருக்கு செல்வி (28) என்ற மகள் உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 5 வருடங்களாக தாய் பார்வதியுடன் வசித்து வருவதாகவும் செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் திடீரென்று செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாண்டிச்சேரியில் உள்ள அரசு பொது ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இருந்தார். இது குறித்து தாய் பார்வதி கொடுத்த புகாரின் ேபரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com