பகண்டை கூட்டுரோடு அருகே கடன் பிரச்சினையால் தையல் தொழிலாளி தற்கொலை

கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பகண்டை கூட்டுரோடு அருகே  கடன் பிரச்சினையால் தையல் தொழிலாளி தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 40), தையல் தொழிலாளி. இவருக்கு செந்தாமரை(35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். செந்தாமரை அந்த பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து பகண்டை கூட்டுரோடு போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com