கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கிராமத்தையும், சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்: கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தல்

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே அரிய பெருமானூர் கிராமத்தில் தூய்மை பயணம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே அரிய பெருமானூர் கிராமத்தில் தூய்மை பயணம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு சேர்மேன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அரியபெருமானூர் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

கிராமபுறங்களிலுள்ள பொதுமக்கள் அனைவரும் கழிவறையை பயன்படுத்தி கிராமத்தையும், சுற்றுபுறத்தை யும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என கூறினார். மேலும் தூய்மை நடைபயணம் குறித்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவி யர்கள், பொதுமக்களின் தூய்மை நடைபயணம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பின்னர் பள்ளியை அடைந்தனர். முன்னதாக அரிய பெருமானூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்களின் பணியை போற்றும் விதமாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தின மாலா, உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், நாகராஜன் மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com