சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மணிகண்டன் கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார். அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டார்.
சங்கராபுரம் அருகே  மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரை சே ர்ந்தவர் பள்ளிப்பட்டான். இவரது மகன் மணிகண்டன் (வயது 21). கடுவனூர் மின் அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராக பணியா ற்றி வந்தார். இவர் அதே ஊரில் உள்ள விவசாயிக்கு சொந்தமான வயலில் பழுதான மின் மோட்டா ரை பழுது நீக்கும் பணியில் ஈடுப ட்டிருந்தார். அப்போது மின்கம்ப த்தில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரை எதிர்பாராமல் அவர் தொட்டு விட்டதாக கூறப்படு கிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொ ன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com