என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்ததை படத்தில் காணலாம்.
திருநாவலூர் அருகே பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்
- சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
- கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலமுறை தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் தாசில்தார் கண்டுகொள்ளவில்லை.
என்றாலும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். எனவே இதுபற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






