search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village administration office"

    • கோடைமழையின் போது கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.
    • இதனால் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகம் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி தேரியூரில் செட்டியாபத்து கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. 6 மாதங்களுக்கு முன் பெய்த கோடைமழையின் போது இந்த கட்டிடத்தில் உட்புற கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் கட்டிடம் ஆங்காங்கே உடைப்பும், வெடிப்புமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கட்டிடம் மக்கள் பயன்பாடுக்கு உகந்ததாக இல்லை என கூறி அதனை நிரந்தரமாக பூட்டி விட்டு, அந்த கட்டிடத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலகத்தை இடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    இ-சேவை மையம் அலுவலகம் சிறியதாக இருப்பதால் அதில் 2 அலுவலகம் உள்ளே செயல்பட முடிய வில்லை எனவும், அதனால் கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பித்து கட்டி அதனை பொது மக்கள் செயல்பாடுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது.
    • குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மண்மலை கிராமத்தில் மிகவும் பழமையான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகம் மண்மலை கிராமத்தில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டிடம் பூட்டு போடப்பட்டு கேப்பாரற்று கிடக்கிறது.

    மேலும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கட்டிடத்தின் மேற் கூரையின் உள்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு எதிரே மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அடிக்கடி பள்ளி மாணவர்கள் வந்து விளையாடி செல்வதும், சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இங்கு வந்து விளையாடி சென்று கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத் தால் உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
    • கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் தினந்தோறும் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பலமுறை தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் தாசில்தார் கண்டுகொள்ளவில்லை.

    என்றாலும் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று வரும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். எனவே இதுபற்றி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.
    • திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.

    திருப்பூர்:

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். சுல்தான்பேட்டை, எம்.செட்டிப்பாளையம், அக்ரஹாரபுத்தூர், வேட்டுவபாளையம், மங்கலம் போன்ற பகுதிகளுக்கு மங்கலத்தில் ஒரு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படும் நிலை உள்ளது. கட்டிட தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் கிரு ஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • கிராம நிர்வாக அலுவலகத்தையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் கிரு ஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மேட்டு நாசுவம் பாளையம் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் 'ஆ" பதிவேடு, கிராம கணக்கு பதிவேடு, அடங்கல், முதியோர் உதவித் தொகை பதிவேடு, புறம் போக்கு நிலங்கள் தொட ர்பான பதிவேடு, விளை நிலங்கள் தொடர்பான பதிவேடு உள்ளிட் ஆவ ணங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து கலெக்டர் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் கட்டுவதற்கு முன் மொழிவு வழங்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலகத்தையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.

    ஊத்தங்கரை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள கே.எட்டிப்பட்டி கூட்டுரோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை கூரம்பட்டி கிராமத்திற்கு மாற்றப்படு வதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மண்எண்ணை கேனுடன் நேற்று கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு திரண்டு வந்து கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், உதவியாளர் சிவக்குமார் ஆகியோரை உள்ளே அடைத்து வைத்து அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஊத்தங்கரை தாசில்தார் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைதொடர்ந்து அலுவலகத்தை திறந்து கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், உதவியாளர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் மீட்டனர்.

    இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ் சாமல்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து அலு வலகத்தில் வைத்து பூட்டியதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் (வயது23), கூனப்பட்டியை சேர்ந்த புருஷோத்தமன், மங்காவரத்தை சேர்ந்த பூபாலன், கே.எட்டிப்பட்டியை சேர்ந்த பாபு என்கிற பெருமாள், கூனப்பட்டியை சேர்ந்த பவானி, முரும்மாள், வெண்ணிலா, மீரா, அமுதா உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews
    ×