search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trader arrested"

    • கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார்.
    • போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த நாட்டாமங்கலம் கரட்டூர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் இஸ்மாயில் (31). இவரது கடைக்கு நேற்று மாலை கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார். அப்போது கடையில் இருந்த இஸ்மாயிலிடம் குட்கா எத்தனை பண்டல் வேண்டும் என கேட்டார். அதற்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து லிங்கராஜ் தனக்கு வர வேண்டிய பாக்கி தொகையை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கராஜ், இஸ்மாயிலை தாக்கினார்.

    இது குறித்து இஸ்மாயில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கராஜை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • கோபாலகிருஷ்ணன் தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
    • சிறுவர்கள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 26). தள்ளுவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினசரி வியாபாரத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் போது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் தொந்தரவு கொடுத்து கிண்டல் செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டு சென்றார். அப்போது சிறுவர்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். கோபாலகிருஷ்ணன் வீட்டில் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போது சிறுவர்கள் அடித்த பந்து இவரது தட்டில் வந்து விழுந்தது.

    இதனால் கோபாலகிருஷ்ணனுக்கு ஆத்தரம் ஏற்பட்டது. உடனடியாக வெளியே வந்த அவர் அங்கு கிடந்த செங்கலை எடுத்து சிறுவர்கள் மீது வீசி விரட்டினார். வீட்டிற்கு சென்ற சிறுவர்கள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (47), செந்தில்குமார் (39), சசிகுமார் (47), பிரதீப் (24) ஆகியோர் நடந்ததை கேட்பதற்காக கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றார். அவர்கள் சிறுவர்களை விரட்டியது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த கோபாலகிருஷ்ணனின் மனைவி தனது கணவரை 4 பேரும் ஏதாவது செய்து விடுவார்கள் என நினைத்து வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டினார். பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    வீட்டிற்குள் இருந்த கோபாலகிருஷ்ணன் போலீசார் வந்தால் சிறுவர்களை செங்கல் வீசி விரட்டியதற்காக தன் மீது வழக்கு போடுவார்கள் என நினைத்தார். இதனால் எப்படியும் தன்மீது வழக்கு போடுவார்கள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் 4 பேரையும் கத்தியால் குத்துவது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த கத்தி மற்றும் சுத்தியலுடன் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

    பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த கண்ணன், செந்தில்குமார், சசிகுமார், பிரதீப் ஆகியோரை கத்தியால் குத்தி, சுத்தியலால் தாக்கினர். அதற்குள் அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். கத்திக்குத்தில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர்.
    • 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது காட்டு வேகாக்கொல்லை சிவன் கோவில்அருகில்அருகில்விற்பனைக்காக இருந்த 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில்அவர்பண்ருட்டி நல்லூர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தயாளன்(36)என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளிடம் ரூ.62.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயி. இவர் சங்கராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட விவசாய பொருட்களை நேரடி கொள்முதல் செய்தார். அவ்வாறு கொள்முதல் செய்த பொருட்களை மொத்தமாக தஞ்சை மாவட்டம், புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்தார். அதற்குண்டான பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.

    சம்பவத்தன்று சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் ஆனந்த் என்பவர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வந்த போது போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சங்கராபுரம் பகுதிகளில் விவசாயிகளிடம் சுமார் 8000 நெல் மற்றும் எள் மூட்டைகள் கொள்முதல் செய்து அதற்குண்டான பணம் சுமார் ரூ.62,64,628 தராமல் ஏமாற்றி வந்தது தெரியவருகிறது. மேலும் அவர் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி விட்டுள்ளனர். இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் இதே போன்று விவசாயிகளிடம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரி யவருகிறது. போலீசார் ஆனந்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×