மளிகை கடை உரிமையாளரை தாக்கிய பிரபல குட்கா வியாபாரி கைது

கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார்.போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.
மளிகை கடை உரிமையாளரை தாக்கிய பிரபல குட்கா வியாபாரி கைது
Published on

சேலம்:

சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த நாட்டாமங்கலம் கரட்டூர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் இஸ்மாயில் (31). இவரது கடைக்கு நேற்று மாலை கே.ஆர். தோப்பூர் பகுதியை சேர்ந்த பிரபல குட்கா வியாபாரி லிங்கராஜ் (36) ஒரு காரில் வந்தார். அப்போது கடையில் இருந்த இஸ்மாயிலிடம் குட்கா எத்தனை பண்டல் வேண்டும் என கேட்டார். அதற்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் எனக்கு குட்கா வேண்டாம் என இஸ்மாயில் மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து லிங்கராஜ் தனக்கு வர வேண்டிய பாக்கி தொகையை கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கராஜ், இஸ்மாயிலை தாக்கினார்.

இது குறித்து இஸ்மாயில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கராஜை கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com